கரும்புள்ளி
ஒரு நாள் கல்லூரி ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார் . ‘ இன்று நான் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிட்சையை வைக்கப்போகிறேன் ’ என்றார் . பிறகு ஒவ்வொரு மாணவர்களிடமும் எழுத்துள்ள பக்கம் கீழே இருக்கும் படி கவிழ்த்து ஒரு காகிதத்தை அவர்களின் டெஸ்க்கில் வைத்தார் . ‘ மாணவர்களே ! இப்போது உங்கள் எதிரே உள்ள காகிதத்தைத் திருப்பிப் பார்க்கவும் ’ என்றார் . எல்லா மாணவர்களும் அப்படியே செய்தார்கள் . ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் . அதில் எந்தக் கேள்வியும் இல்லை . நடுவில் ஒரு கரும்புள்ளிதான் இருந்தது . மாணவர்களின் குழப்பத்தை அறிந்த ஆசிரியர் , ‘ மாணவர்களே ! நீங்கள் காகிதத்தில் காண்பதைப் பற்றி எழுதவும் ’ என்று சொன்னார் . மாணவர்களுக்கு குழப்பமாகப் போய் விட்டது . இருப்பினும் தங்களுக்குத் தோன்றியதை எழுதினார்கள் . பிறகு ஆசிரியர் மாணவர்களின் காகிதங்களை வாங்கி , அவர்கள் அதில் எழுதி இருந்தவைகளை ஒவ்வொன்றாக உரக்கப்படித்தார் . அத்தனை மாணவர்களும் அந்தக் கரும்புள்ளையைப் பற்றியும் , அது காகிதத்தில் இருக்கும் இடம் பற்றியும் தான் எழுதி இருந்தனர் . பிறகு ஆசிரியர் பேச ஆரம்பித்தார் . ‘ மாணவர...