வ.வே. சு. ஐயர்
நூலகம்: நான் கண்ட நால்வர் எழுத்து: வெ. சாமிநாத சர்மா போன இதழில், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களைப் பற்றிய விபரங்கள் பல அறிந்தோம். இந்த இதழில் திரு. வ.வே.சு. ஐயர் அவர்களைப் பற்றி வெ.சாமிநாத சர்மாவின் பார்வையில் அறியப் போகிறோம். இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால், ஆசிரியர் சாமிநாதன் வ.வே.சு.ஐயருடன் நெருங்கிப் பழகியவர். அவரின் கீழ் உதவி ஆசிரியராகப் பல வருடங்கள் பணிபுரிந்தவர். ஆகையால், விபரங்கள் அனைத்தும் நேரடியான உண்மை நிலவரம் என்பதை அறியலாம். நீண்டு இருப்பினும், படிக்க மிகவும் சுவை உள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள். தவறாமல் படிக்கவும். - ஆசிரியர். 1. தேசபக்தன் பத்திரிகைக்கு ஆசிரியராக திரு.வி.கலியாணசுந்தர முதலியாருக்குப் பிறகு பொறுப்பேற்றார். அப்பொழுதுதான் ஐயரை நான் முதல் முதலாகப் பார்த்தேன். கோடிட்ட நெற்றி; அதில் பிறை வடிவமான சந்தனப்பொட்டு; புன்சிரிப்பு தவழும் உதடுகள்; ஒழுங்காகச் சீவிவிடப்பட்ட தலைமயிரும், தாடி மீசையும், கட்டுமஸ்தான சரீரம்; அதை ஒர் உத்தரீயம் மறைத்துக் கொண்டிருந்தது; இடுப்பிலே பஞ்சகச்ச வேஷ்டி; கையிலே ஒரு புத்த...