முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017
தமிழ்க் கடவுள் முருகன் அவதார தினம் வைகாசி விசாகம். இதே நாளை புத்தரின் அவதார நாளாகவும், அவர் ஞானம் பெற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்ல. நம்மாழ்வார் பிறந்த தினமும் இதே நாளாகும். இதே நாள் எமதர்மராஜனின் பிறந்த தினமாகவும் கருதப்படுகிறது. மகாபாரதத்தின் வில் வீரரான அர்ஜீனன் பாசுபதா ஆயுத்தை சிவபெருமானிட மிருந்து பெற்ற நாளும் வைகாசி விசாகமாகும். விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன், கார்த்திகைப் பெண்டிரால் பாலூட்டப் பெற்றதால் கார்த்திகேயன், மன்மதன் போன்று அழகாக இருப்பதால் குமரன் என்று இன்னும் பல பெயர்களும் முருகனுக்கு உண்டு. சிவன் தனது ஐந்து முகத்தோடு ஆறாவது முகமான அதோ முகத்தைச் சேர்த்து மொத்தம் ஆறு முகத்திலிருந்தும் நெருப்பு பொறிகளை உர...