வால்மீகியின் அயோத்தியா காண்டம் – ஸர்க்கம் 100
ராமர் பரதனுக்கு ராஜ நீதியை உபதேசித்தது ராமர் பரதனுக்கு 76 பாக்களில் ராஜ நீதியை உபதேசிக்கிறார். அந்த ராஜ நீதி உபதேசங்கள் ஒரு ராஜ்யம் எப்படி ஆட்சி செய்யப்படவேண்டும் என்பதை விரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது. ஆகையால் எந்த ஒரு ராஜ்யம் ராமர் விவரித்த நீதியைக் கடைப்பிடிக்கிறதோ அந்த ராஜ்யம் ‘ராம ராஜ்யம்’ என்று போற்றப்படும் என்று உலகத்திற்கு உபதேசிப்பதாகவே கொள்ள வேண்டும். நம் நாட்டு தேசப்பிதாவும் இந்த ராமனின் அறிவுரையைக் கடைப்பிடித்து இந்தியாவில் ‘ராம் ராஜ்யத்தை’ உருவாக்க வெளிப்படையாகவே தமது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் பலவித அரசியல் நிர்பந்தங்கள் – காந்திஜியின் திடீர் அகால மரணம் – அதுவும் ஒரு ஹிந்து தீவிரவாதி கோட்சேவால் துப்பாக்கியால் சுடப்பட்டு – நிகந்து, காந்திஜியின் விருப்பம் –‘செகுக்லரசம்’ – என்ற கொள்கையால் ஹிந்துமதம் பல ஹானிகளை எதிர்கொண்டு தனது கலாச்சாரம், கலைகள், ஹிந்துமத நம்பிக்கைகள், கடவுள் – கோயில் வழிபாடுகள், திருவிழாக்கள், மதச் சடங்குகள், வேதம் – இதிகாசம் – பக்திப் பாடல்கள் ஆகியவைகளைக் காப்பாற்ற சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாகியும் போராட வேண்டி உள்ளது. ராம் – க...