அதிசயம் – ஆனால் உண்மை
ரிஷி சுனாக் ( பிறப்பு : 12-05-1980 – வயது 39). அவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை . மூன்று முறை கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளராக ஒவ்வொரு முறையும் அதிக ஒட்டு வித்தியாசத்தில் வென்றவர் . இதற்கு முன் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்து பலராலும் புகழப்பட்டவர் . ‘ பிரக்சிட் ’ என்ற பிரிட்டன் ஐரோப்பிய யுனியனிலிருந்து வெளியேறும் கொள்கைக்கு ஆதரவு அளித்தவர் . எம் . பி . யாக பகவத் கீதைப் புத்தகத்தில் தனது கைகளை வைத்து எம் . பி . யாக பதவிப் பிரமாணம் எடுத்தவர் . “ நான் ஒரு இந்து என்று பொருமையுடன் சொல்கிறேன் . எனது அடையாளமும் ஒரு ஹிந்து தான் . எனது மதம் , எனது கலாச்சார பாரம்பரியம் ஆகியவைகளும் இந்தியன் என்பது தான் ” – என்று சொல்கிறார் ரிஷி சுனாக் . ஆகையால் பிரிட்டனுக்கு பூச்செண்டு கொடுக்கும் அதே வேளையில் ரிஷி சுனாக்கிற்கும் பூச்செண்டு கொடுத்த வாய்மை வாழ்த்துகிறது . இது இந்தியாவிற்குக் கிடைத்த மிகப்பெரும் கெளரவமாகும் . வாழ்க பிரிட்டன் . வாழ்க பாரத் . இந்தியாவை அடிமைப் படுத்திய பிரிட்டிஷ் – சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெருமை கொள்ளும் பிரிட்டிஷ் – இந்திய...