சொன்னால் நம்பமாட்டீர்கள்
சொன்னால் நம்பமாட்டீர்கள் சின்ன அண்ணாமலையின் பேச்சு மிகவும் இனிமையாக , நகைச் சுவையுடன் அத்துடன் ஆழமான கருத்துக்களுடன் மிளிரும் . நான் பலமுறை அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன் . ' திராவிட மாயையில் மயங்காதீர்கள் ' என்று கோஷித்த ? த்தமர் . ஆனால் , அந்த மாயையிலிருந்து இன்னும் தமிழகம் விடுதலை அடையவில்லை என்பதுதான் நிதர்சனம் . அதற்குக் காரணம் ' காங்கிரசின் இளஞர்களை இணைக்காமல் பழம்பெரும் தனவந்தர்களை நம்பியதால் தான் ' என்று அழாக் குறையாக அங்கலாக்கிறார் சின்ன அண்ணாமலை . மகாத்மா காந்தியின் ஆசியுடன் , ஹரிஜன பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு உரிமை பெற்றவர் சின்ன அண்ணாமலை . காந்திஜி அவர்களே இது குறித்து தன் ஹரிஜனப் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் இப்படிக் குறித்துள்ளார் : ஹரிஜன பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஒரு இளைஞரை ராஜாஜி அவர்கள் சென்னை இந்தி பிரசார சபையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் . அந்த இளஞர் பெயர் திரு . சின்ன அண்ணாமலை என்று ராஜாஜி சொன்னார் . அதன் பின் சின்ன அண்ண...