ஹிமாசல் பிரதேசம், குஜராத் – தேர்தல்கள்
ஹிமாசல் பிரதேசம் – குஜராத் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பி.ஜே.பி. வென்றுள்ளது. ஹிமாசல் பிரதேச வெற்றி ஹிமாலய வெற்றியாகும். ஏனென்றால், அதில் முன்பு காங்கிரஸ் ஆட்சி இருந்தது. மொத்த இடங்களான 68-ல், காங்கிரஸ் – 36, பி.ஜே.பி. – 26 மற்றவை 6 என்று நிலையில் சென்ற 2012 தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில், பி.ஜே.பி. 44, காங்கிரஸ் 21 மற்றவை 3 என்ற வகையில் பி.ஜே.பி. ஹிமாலய வெற்றி பெற்றுள்ளது. ஓட்டு விகிதம் பி.ஜே.பி.க்கு 48.8 சத விகிதம் – காங்கிரஸுக்கு 41.8 சத விகிதம் என்ற அளவில் உள்ளது. குஜாராத்தில் முன்பு 2012 வருடம் நடந்த தேர்தலில் பி.ஜே.பி. 115 இடங்களிலும் காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள இடமான 182-ல் பி.ஜே.பி.யால் 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 + அதன் கூட்டணி 2, மற்றவை – 4 என்ற அளவில் வெறும் 8 இடங்கள் மட்டுமே ஆட்சி அமைக்க கிடைக்க வேண்டிய பாதி அளவுத் தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பி.ஜே.பி. தொடர்ந்து ஆறாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது ஒரு ஹிமாலய சாதனையாகும். மேலும் பி.ஜே.பி.யின் ஓட்டு சதவிகிதம் முந்...