4 மாநிலம் + 1 யுனியன் பிரதேசம் தேர்தல் நிலவரங்கள்
இந்த 5 இடங்களிலும் தேர்தல் நடக்கும் மொத்த தொகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
|
மாநிலம் / யூனியன் பிரதேசம் |
மொத்த தொகுதிகள் |
|
மேற்கு
வங்காளம் |
294 |
|
தமிழ்நாடு |
234 |
|
கேரளம் |
140 |
|
அஸ்ஸாம் |
126 |
|
பாண்டிச்சேரி |
30* |
*குறிப்பு:
துச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 30 உறுப்பினர்கள்
தவிர, 3 நியமன உறுப்பினர்களும் (Nominated Members) உள்ளனர்.
- அஸ்ஸாம் & பாண்டிச்சேரி:
மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இது
வரை அஸ்ஸாம், கேரளா, பாண்டிச்சேரி
(மொத்த
தொகுதிகள்: 296) தேர்தல்
நடந்து முடிந்து விட்டது. இதில் அஸ்ஸாமிலும், பாண்டிச்சேரியிலும்
பிஜேபியின் வழிகாட்டலில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்ற ஒருமித்த
கருத்துக் கணிப்பு வெளிவந்துள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் பிஜேபி கூட்டணி
மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்பது முந்தைய அரசின் செயல்பாடுகளை மக்கள்
ஆதரிக்கிறார்கள் என்று கருதலாம். மேலும் அங்கு முந்தைய முதல்வர்களே மீண்டும்
ஆட்சி பீடத்தில் அமரப்போவதால் அந்த இரண்டு இடங்களிலும் பிரச்சனை இல்லை.
- கேரளா:
அடுத்து கேரளாவின் நிலவரத்தை ஆராய்வோம். ஆட்சி
அமைக்க 71 இடங்களில்
வெற்றி பெறவேண்டும். அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அதை எதிர்த்து காங்கிரசின் தலைமையில் உருவான
ஒருங்கிணைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) + பிஜேபியின் தலைமையில் உருவான தேசிய ஜனநாயக
கூட்டணி தேர்தலில் போட்டி இடுவதால் அங்கு மும்முனைப் போட்டியாக உள்ளது. காங்கிரஸ்,
கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கிறது. முன்பு பிஜேபி கேரளாவில் கால் ஊன்றத்தடுமாறிய
காலம் போய் அதுவும் ஆளும்
கட்சிக்கு எதிராக பல இடங்களில் பலம் பெற்றுள்ளது.
அதன் ஓட்டு சதவிகிதம் 12 – 15% என்ற அளவில் உள்ளதால் அதன் மூலம் பிஜேபி 5 –
6 இடங்களில் வென்றாலே காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகியவைகள் ஆட்சி அமைக்கும் இலக்கை
அடையமுடியாமல் தடுக்கும் என்று கணிக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முயல்வது பிஜேபியின்
கணிசமான வெற்றி காங்கிரஸ் கூட்டணியையே பாதிக்கும் என்றால், அது கம்யூனிஸ்டுகளுக்கு
சாதகமாக அமையும். இது கம்யூனிஸ்ட் ஆட்சியின் மக்கள் வெறுப்பை ஓரளவு முறியடிக்க
உதவும்.
இருப்பினும், காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லீம் கட்சி இருப்பது அதற்கு
சாதகமான சூழலை உண்டாக்கி, அதனால் கம்யூனிஸ்ட் கட்சி பதவி கிட்டாமல் போகும்
நிலையும் உருவாகலாம். ஆகையால் முடிவை கணிக்க முடியாத நிலைதான் கேரளாவின் தேர்தல்
அமைந்துள்ளது.
இருப்பினும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கும் நிலைமை: கம்யூனிஸ்ட் கட்சி +: 79; காங்கிரஸ் கட்சி + :55; பிஜேபி +: 6 = 140 இடங்கள்.
- மேற்கு வங்காளம்:
மம்தா நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர மூர்க்கமாக
உழைக்கிறார். அவரது ஆட்சியை ‘நெருப்பு ஆட்சி’ என்று பலர் குறை கண்டாலும், குறைந்த
பட்ச 148 இடங்களுக்கு மேல் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற ஆரூடம்
பலிதமாகுமா? என்பது தேர்தல் எண்ணும் மே 4-ல் தெரியவரும்.
மேற்கு வங்காளத்தில் இரண்டு
சுற்றுக்களாக 23 & 29 ஏப்ரல்
தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
15 வருட கால தொடர் ஆட்சியில் மம்தா இருக்கிறார். அதனால் ஆட்சியில் ஏற்படும் அதிருப்தியை
நீக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் முதல்வர் மம்தா.
சமூக நலத் திட்டமான லக்ஷ்மி பாந்தர்
இந்த ஆட்சியின் எதிர்ப்பு அலையை எதிர்கொள்ளும் திட்டமாகும். அத்துடன் வேட்பாளர் பட்டியலில்
பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன் விவபரங்கள் இதோ:
1. பாஜக
மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய
பல முக்கிய தலைவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 74 எம்.எல்.ஏ-க்களுக்கு
இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த இடங்களில் இளைய தலைமுறையினர், பெண்கள்
மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நிலக்கரி
கடத்தல், ஆசிரியர்
நியமன ஊழல் போன்ற புகார்களில் சிக்கிய மற்றும் பாஜக-வால் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்ட
தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது மக்களிடையே ஓட்டுக்களைப் பெறும் என்ற நம்பிக்கை
மம்தாவிற்கு இருக்கிறது.
2. 15 எம்.எல்.ஏ-க்கள்
அவர்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மம்தாவின் அரசியல் சாசனத்திற்கு எதிரான பல நடவடிக்கைகள்
மக்களிடையே பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த
2021 ஆண்டு
நடந்த தேர்தலில் போது திருணமுல் காங்கிரஸ் தொண்டர் படையினரால் பயங்கரமாக
தாக்கப்பட்டு அவர்கள் தங்கள் கிராமங்களை விட்டு செல்லும் அளவில் அராஜகம் நடந்த
அளவில் இப்போது அமிர்த்ஷா ‘தேர்தலுக்குப் பிறகும் பல ராணுவ வீரர்கள்
மக்களுக்கு அனைத்து இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்’ என்ற
அறிக்கை தேர்தலில் வன்முறை தேர்தலின் போதும், அதற்குப் பிறகும் தடுக்கப்படுமென்ற நம்பிக்கை
வங்காள ஓட்டர்களிடம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதால், இது
பிஜேபிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துமென்று நம்பலாம்.
மம்தா பானர்ஜி அவர்கள் தேர்தல்
ஆணையத்தின் SIR (Special
Intensive Revision) என்ற வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முறையை மிகவும் மூர்க்கமாக
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலையும் மீறி ‘அது ஓட்டுப் பெற பிஜேபியின் தந்திரம்’
என்றும், அதற்கு
தேர்தல் ஆணையம் – உச்ச
நீதிமன்றம் ஆகியவைகள் பிஜேபின் கைப்பாவைகளாக செயல்படுகின்றன என்றும் நேரிடையாகவே
தாக்கியும், நீதி
மன்ற பார்வையாளர்களையும் செயல்படாமல் செய்வதையும் மம்தா தான் ஒரு அரசாங்க முதன்
மந்திரியாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் பதவிப் பிரமாணம் செய்து
ஆட்சி செய்ய வேண்டும் என்பதையும் மதிக்காமல் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரி’யாக
செயல்படுவதை வங்காள மக்கள் பொறுத்துக் கொண்டாலும், பல இடங்களில் பொங்கி எழுந்துள்ளார்கள். அந்த
தார்மீக கோபம் பிஜேபிக்கு பல இடங்களில் வெற்றியைத் தேடித் தரும் என்று கருத இடம்
உள்ளது.
இருப்பினும் பிஜேபி மம்தா
பானர்ஜியின் அசுரத்தனமான தேர்தல் பிரசாரம் – அதிரடி நடவடிக்கைகள் – ஆவேச
பேச்சுக்கள் ஆகியவைகளையும் மீறி, பிஜேபி 2016-ல் 3 இடங்களில் பெற்ற வெற்றியை
அடுத்த தேர்தலான 2021-ல் 77 இடங்களில் - வென்றுள்ளது. 2021 –ல் தேர்தலில் 200
இடங்களில் வெற்றி என்ற தன் இலக்கை இழந்த பிஜேபி இந்த 2026 தேர்தலில் தனது இலக்கை
170 இடங்களாக குறிவைத்துள்ளது. அதற்கு மோடி – அமிர்த்ஷா ஆகியவர்களுடன்
மம்தாவை எதிர்த்து பாபனிபூரில் போட்டி இடும் முன்பு நந்தி கிராமத்தில் மம்தாவை
தோற்கடித்த சுவேந்து அதிகாரி இரவு பகலாக தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதற்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது என்பது தெரிகிறது. எப்படியும் நான்காவது முறையாக மம்தா முதன் மந்திரியாக பதவியில்
அமரக்கூடாது என்பதற்காக பிஜேபியின் பல மத்திய மந்திரிகள் தேர்தல் பிரசாரத்தில்
ஈடுபட்டுள்ளனர். பிஜேபி 150 இடங்களையாவது
பெற்றால் தான் மம்தாவின் நான்காவது முறை முதல்வர் என்ற நிலையை முறியடிக்க முடியும்.
ஆனால் மம்தாவின் ஆதரவு
குறைந்தாலும்,
அவர் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மேல் தேர்தலில் வெற்றி பெரும்
நிலைதான் இருப்பதாகப் பலரும் கணிக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம்
என்னவென்றால், பிஜேபி
38.1% வாக்கு
வங்கியைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து, தற்போது 2026-ஆம் ஆண்டு
சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் அங்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
2016-ல் 3 இடங்கள், 2021-ல் 77 இடங்கள் என்று
ஏறுமுகமாக பிஜேபி தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் இந்த 2026 தேர்தலில்
பிஜேபி 150 இடங்களைக் கைப்பற்றுவது என்பது முடியாத இலக்கு என்று சொல்ல முடியாது.
அரசியல் கட்சிகளை மறந்து மேற்கு வங்காளம்
வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதற்கு டபுள் எஞ்சின் அரசுகள் அவசியம் என்பதை
மக்கள் உணர்ந்தால் இது நிச்சயம் ஏற்படும். நான்காவது முறை மம்தாவின் ஆட்சி என்பது
மேற்கு வங்காளத்திற்கு நல்லதல்ல என்பதை மட்டும் வாய்மை தன் கருத்தாக முன்
வைக்கிறது. தேர்தல் நடந்து ஓட்டு எண்ணும் மே 4 வரை நாம் காத்திருக்க வேண்டும்.
4.
தமிழ் நாடு:
இனி தமிழ் நாட்டு நிலவரம் பற்றி ஆராய்வோம்.
தற்போது திமுக ஆட்சி ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. திமுக மீண்டும் இரண்டாவது
முறையாக ஆட்சி அமைக்கப் போராடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகள் முன்பு போல்
ஒன்றாகவே உள்ளன. அதில் புதிதாக விஜயகாந்தின் மனைவி பிரமலதா தேமுதிக என்ற தேசிய
முற்போக்கு திராவிட கழகம் 10 இடங்களைப் பெற்று திமுக கூட்டணியில் அங்கம் வகித்து
அதனால் திமுக பலன் அடைய விரும்புகிறது.
ஆளும் திமுகவை எதிர்த்து அகில இந்திய திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எடப்பாடி – பிஜேபி – பாட்டாளி மக்கள் கட்சி –
தினகரன் அம்மா திராவிடக் கட்சி – வாசன் கட்சி என்று ஒரு வலுவான கூட்டணி
களத்திலுள்ளது.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் சவாலாக ஜோசப் விஜய்
ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சி விசில் சின்னத்துடன் களத்திலுள்ளது.
இளைஞர்கள், முதன் முதலாக ஓட்டுப் போட இருக்கும் இளரத்தங்கள் ஆகியவர்களின்
ஆதரவு விஜய் கட்சிக்கு இருப்பது கள நிலவரமாகும். அவருக்குக் கூடும் கூட்டம் நிச்சயமாக அவரது
கட்சிக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று கருதுவது தான் ஞாயம்.
திமுகவின் ₹1,000 திட்டத்திற்குப்
போட்டியாக, விஜய்யின்
தவெக ₹2,500 வழங்குவதாக
வாக்குறுதி அளித்துள்ளது. விஜய் இந்த இலவசங்களுடன் ஏஐ சிட்டி, ஏஐ
மினிஸ்ட்ரி என்று ஜென் இசட் இளைஞர்களை கவர தமது தேர்தல் அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
‘ஏன் இப்படி தமிழ் நாட்டு
இளைஞர் கூட்டம் வெறிபிடித்து விஜயை ஆதரிக்கிறார்கள்?’ என்று திண்ணை வேதாந்தம்
பேசலாம். ஆனால்
விஜயின் ஆதரவை இந்த இரண்டு திராவிடக் கட்சிகளாலும் தடுக்க முடியாத நிலைதான்
இருக்கிறது.
விஜய் 10 -15% ஓட்டு
பெறும் என்று கணிக்கப்படுகிறது. இது அந்தக் கட்சிக்கு அதிகமான தொகுதிகளில்
வெற்றி அளிக்காவிடினும், அந்த ஓட்டு சத விகிதம் இரண்டு திராவிட
கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை தடுத்து, அதனால் எந்த திராவிட கட்சிகளுக்கும்
பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்ட சபை என்ற நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு.
சில பல மீடியாக்கள் திமுக + மீண்டும்
ஆட்சி அமைக்கும் என்றும் ஆனால் அது தனியாக அறுதிப் பெரும்பான்மை பெறாது – கூட்டணி
கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி என்று கணிக்கிறார்கள். திமுக
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை தன் கொள்கையாக
அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக
ராகுல் காந்தி ஆட்சியில் பங்கு என்பதில் பிடிவாதமாக இருக்கும் நிலைதான்
காணப்படுகிறது. மேலும்
காங்கிரஸ் – திமுக
தேர்தல் பிரசாரங்கள் தனித் தனியாகத் தான் இருக்கின்றன. தமிழ்
நாட்டிற்குப் பிரசாரம் செய்ய வந்த ராகுல் தனியாக ஸ்டாலினுடன் ஒன்றாக இணைந்து
பிரசாரம் செய்யாத நிலையும் இந்த தேர்தலில் காணப்படும் அந்தக் கூட்டணியின்
தொய்வாகும்.
எடப்பாடி ஆட்சியில் கூட்டணிக்
கட்சிகளுக்கு பங்கு இல்லை என்ற அவரது முந்தைய நிலைப்பாடு மாறி, இப்போது
ஜெயித்தால் தான் முதல் மந்திரியாகவும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற
நிலைப்பாடு எட்டி உள்ளது. பிஜேபியின் தனிப்பட்ட செல்வாக்கு விஜய் போல் 15% என்ற
நிலையில் உள்ளது கவனிக்கத் தக்கது. அதற்கு அண்ணாமலையின் ‘என்
மண் என் மக்கள்’ பாத
யாத்திரையும், திமுக
ஃபைல்ஸ் ஆகிய இரண்டும் காரணங்கள் என்று சொல்லாம். அண்ணாமலையும்
கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் தேர்தல் பிரசாரத்தில் மோடியின் ஆத்மார்த்த சிஷ்யராகவே
பணி ஆற்றுகிறார். அவருக்கு
பிஜேபியில் ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
அண்ணாமலையின் நீண்டகால இலக்கு
திராவிடக் கொள்கைகளை விடுத்து, பாரத மண்ணிற்கு ஏற்ற ஹிந்து தர்மத்தை மீண்டும்
தமிழகத்தில் தளைக்கச் செய்வது தான். ஆகையால் தான் தனித்துப் போட்டி என்ற
தத்துவத்தில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார். ஆனால் அரசியல் சாணக்கியத்தில் இது உடனடியான
வெற்றியை அளிக்காது என்பது ஒரு உண்மையாகும்.
இந்த சமயத்தில் திரு. எஸ். பலராமன்
அனுப்பிய பிடிஎப் கோப்பில் எடப்பாடி பிஜேபி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி
ஆட்சி பீடத்தில் அமரும் என்று கணிக்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இதைக் கணித்தவர் டாக்டர் ஆர். மோஹனகிருஷ்ணன்
என்பவராகும். அவரே
ஏஐ மாடல்கள், தமது
அனுபவங்கள், ஆய்வுகள்
மற்றும் பலதரவுகள் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் கணிக்கப்பட்டுள்ளன என்ற
முன்னுரையுடன் தெளிவு படுத்துகிறார்.
ஏஐஜெமினி – ஏஐ ஜிபிடி ஆகிய இரண்டையும் நான் தொடர்பு கொண்ட பொழுது அவைகள் இரண்டும் ‘திமுக தான் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும்’ என்று கணித்துள்ளதையும் நான் கூற ஆசைப்படுகிறேன்.
|
எடப்பாடி கூட்டணி |
128 – 142 |
|
ஸ்டாலின் கூட்டணி |
70 – 85 |
|
தவிக (விஜய்) |
3 – 8 |
|
நாதக (சீமான்) |
0 – 2 |
|
மற்றவர்கள் |
0 – 2 |
மோஹன கிருஷ்ணனின் கணிப்பு மே 4-ல் ஏற்பட்டால் அது தமிழ் நாட்டின் விமோசனம் என்று தான் வாய்மை சொல்ல ஆசைப்படுகிறது.
ஸ்டாலின் திராவிட மாடல் மிகவும் மோசமான மாடல் என்பதை இங்கு விவரமாகக் கூறத் தேவையில்லை. அதை தமிழக மக்கள் அனுபவிக்கிறார்கள். நேர்மையற்ற அரசாங்கம் தான் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்று ஒரே வாக்கில் சொல்லி விடலாம். மோடியின் இரட்டை எஞ்சினுக்கு இன்னும் பலம் சேர்க்கும் வண்ணம் தேர்தல் முடிவுகள் அமைந்தால் அது வளர்ந்த பாரதம் 2047 இலக்கை அடைய தூண்டுகோலாக அமையும்.
வாழ்க பாரதம் – வளர்க்க பாரதம் – செழிக்க பாரதம்.

Comments