அக்ஷய திருதியை – 20 - 04 – 2026 - திங்கட் கிழமை

 



இந்திய ஆன்மீக மரபில் சில தினங்கள் காலத்தால் அழியாத பெருமை பெற்றவை. அவற்றில் ஒன்றாக விளங்குவது அக்ஷய திருதியை.

அக்ஷயம்” என்றால் குறையாதது, அழியாதது, என்றும் வளர்ந்து கொண்டிருப்பது என்று பொருள். “திருதியை” என்பது சந்திர மண்டல கணக்கில் மூன்றாம் திதி. இவ்விரண்டும் சேர்ந்து வரும் இந்த நன்னாள், நம் வாழ்க்கையில் நன்மை பெருக பிரார்த்திக்கும் அரிய நாள்.

இந்த நாளில் செய்யப்படும் நல்ல செயல்கள் பல மடங்கு பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பலர் அந்த நல் நாளில்  தானம் செய்கின்றனர், புதிய தொழில் தொடங்குகின்றனர், கல்வி முயற்சிகளை ஆரம்பிக்கின்றனர். சிலர் தங்கம் வாங்குவது வழக்கமாக கொண்டாலும், உண்மையில் இந்த நாளில் பொருள் சேர்த்தல் அல்ல; புண்ணியம் சேர்த்தல் என்பதே முக்கிய அம்சமாகும்.

புராணங்களில், இந்த நாள் பல சிறப்புகளோடு தொடர்பு கொள்ளப்படுகிறது. பரசுராம அவதாரம் நிகழ்ந்த நாள் என்றும், மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள் என்றும், திரௌபதிக்கு அக்ஷய பாத்திரம் கிடைத்த நாள் என்றும் கூறப்படுகிறது. அதாவது, இந்த நாள் அருள், அறிவு, அன்னம், ஆதரவு ஆகியவை தீராதபடி பெருகும் நாளாகக் கருதப்படுகிறது.

இன்றைய காலத்தில் அக்ஷய திருதியை நமக்கு சொல்லும் செய்தி மிக எளிமையானது:
பசி பட்டவனுக்கு உணவு அளி.
துன்புறுவோருக்கு ஆறுதல் கூறு.
ஏழைக்கு உதவி செய்.
கல்விக்காக உதவி செய்.
இவையே உண்மையான அக்ஷய முதலீடுகள்.

செல்வம் சேர்த்து வைத்தாலும் அது குறையலாம்;

ஆனால் பகிர்ந்த அன்பும் செய்த தர்மமும் என்றும் குறையாது.

அதனால் ஒவ்வொரு இல்லத்திலும் இந்த நாளை ஆன்மீக விழிப்புணர்வு நாளாகக் கொண்டாட வேண்டும்.

அக்ஷய திருதியை நல்வாழ்த்துகள்!

உங்கள் இல்லத்தில் ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, ஐஸ்வர்யம் என்றும் அக்ஷயமாக பெருகட்டும்.


Comments

Popular posts from this blog

வள்ளுவம் 4 - குலம்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017