பார்லிமெண்டில் பப்பு பப்பட் ஆட்டம்
ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, 2020-ல் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட எல்லை மோதல் (Galwan clash) குறித்துப் பேசினார். முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் M.M. நரவணே எழுதிய "Four Stars of Destiny" என்ற சுயசரிதை நூலை அவையில் காட்டி, அந்த புத்தகத்தில் உள்ள சில பகுதிகளை அவர் மேற்கோள் காட்ட முயன்றார்.
சீன ராணுவ டாங்கிகள் இந்திய எல்லைக்குள் முன்னேறிய போது, டெல்லியில் இருந்த அரசியல் தலைமையிடமிருந்து (பாதுகாப்பு அமைச்சகம்) ராணுவத்திற்குத் தெளிவான உத்தரவுகள் வரவில்லை. "உங்களுக்குச் சரியாகத் தோன்றுவதைச் செய்யுங்கள்" (Do whatever you think is appropriate) என்று மட்டும் நரவணேவிடம் கூறப்பட்டதாகவும், அப்போது அவர் தான் தனித்து விடப்பட்டதாக உணர்ந்ததாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி வாதிட்டார்.
ஆனால் ராகுலை மேற்கொண்டு அந்தப் புத்தகத்தின் பகுதிகளை மன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை 'ஜனநாயகப் படுகொலை' என்று ராகுல் மோடி அரசைக் குற்றம் சாட்டினார். இதை மூலதனமாக வைத்து மோடியை காங்கிரஸ் ராகுலின் சகோதரி எம்பி பிரியங்காவின் தலைமையில் ஆறு காங்கிரஸ் எம்பிக்கள் மோடி இருக்கையைச் சூழ்ந்து தர்ணா - தாக்குதல் - மோடிக்கு களங்கம் செய்யும் செயல்கள் - என்று திட்டம் தீட்டியதால், அந்த அசம்பாவிதங்களைத் தவிர்க்க லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமரை 4-ம் தேதி பிப்ரவரி 2026 மாலை 5 மணிக்கு சபைக்கு வந்து பட்ஜெட் உரைக்கு பதில் அளிக்க வரவேண்டாம் என்று வேண்டவும், அதை மோடியும் ஏற்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் முக்கிய உரையை ஆற்றமுடியாமல் ராகுல் - பிரியங்கா சதிக் கும்பலால் பாராளுமன்ற சரித்திரத்தில் இது ஒரு கரும்புள்ளியாக விழுந்துள்ளது. மோடி பயம் கொண்டுள்ளார் என்று அந்த பப்பு கூப்பாடு போடுகிறது.
மக்களவை விதி 349-ன்படி, உறுதிப்படுத்தப்படாத அல்லது வெளியிடப்படாத ஆவணங்களை அவையில் மேற்கோள் காட்ட அனுமதி இல்லை என்ற விதியை மதிக்க ராகுல் காங்கிரஸ் தயாராக இல்லை.
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி: "இந்தப் புத்தகம் ஏற்கனவே ஆன்லைனில் விற்பனைக்கு வந்துவிட்டது (Pre-order), அதன் பகுதிகள் ஊடகங்களில் (The Caravan magazine) வெளியாகிவிட்டன. அப்படி இருக்கும்போது ஏன் அரசு இதைக் கண்டு பயப்படுகிறது?"
இது ராகுலின் வாதம். மறுநாள் நாடாளுமன்ற வளாகத்தில் அந்தப் புத்தகத்தின் அச்சுப் பிரதியை (Printed copy) கையில் ஏந்தியபடி செய்தியாளர்களிடம் காட்டி, அரசு உண்மையை மறைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
வெளியீட்டாளரான Penguin Random House, இந்தப் புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம், இதன் பிடிஎஃப் (PDF) கசிந்தது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ராணுவத் தளபதி ஜெனரல் M.M. நரவணே எழுதிய சுயசரிதை நூல் இன்னும் அதிகார பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதை அவரே சொல்லி உள்ளார். ஒரு முன்னாள்
ராணுவத் தளபதி என்ற முறையில், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, முறையான அனுமதி
கிடைத்த பிறகே புத்தகத்தை வெளியிடப்போவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதை எதிர்த்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே ஒரு அதிரடித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் "ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளுடன் குறிப்பாக சோரோஸ் மற்றும் எப்ஸ்டீன் விவகாரங்களைப் பயன்படுத்தி இந்தியாவை இழிவுபடுத்துகிறார். எனவே, அவரது எம்.பி பதவியை நீக்க வேண்டும்" என்று கோரினார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி: இவர் ராகுல் காந்தியை "சோரோஸ் டூல்கிட்" (Soros Toolkit) என்று விமர்சித்தார். "எப்ஸ்டீன் கோப்புகளில் எந்தத் தப்பும் செய்யாத இந்திய அமைச்சர்களின் பெயர்களை இழுப்பதன் மூலம், ராகுல் காந்தி ஒரு தேசவிரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறார்" என்று அவர் சாடினார்
சுருக்கமாகச் சொன்னால், "வெளிநாட்டுப் பணம் (சோரோஸ்) + வெளிநாட்டுப் பொய் (எப்ஸ்டீன் வதந்திகள்) = ராகுல் காந்தியின் அரசியல்" என்பது தான் பாஜகவின் மையக்கருத்தாக மாறியுள்ளது. ராகுல் காந்தி ஜெர்மனியில் டாக்டர் கொர்னேலியா வோல் (Dr. Cornelia Woll) என்பவரைச் சந்தித்தார். கொர்னேலியா வோல் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற 'ஹெர்டி ஸ்கூல்' (Hertie School)-ன் தலைவர் மற்றும் ஒரு அரசியல் ஆய்வாளர். இவர் மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் (Central European University - CEU) அறங்காவலர் குழுவில் (Board of Trustees) உறுப்பினராக உள்ளார். இந்த பல்கலைக்கழகமானது ஜார்ஜ் சோரோஸின் ஓபன் சொசைட்டி பவுண்டேஷன் (OSF) நிதியுதவியுடன் இயங்குவதாகும்.
குளோபல் புரோகிரசிவ் அலையன்ஸ் (GPA): இந்தச் சந்திப்பானது GPA அமைப்பின் ஒரு பகுதியாக நடந்ததாகவும், அந்த அமைப்பின் பின்னால் சோரோஸின் பணம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி - சோரோஸ் - எப்ஸ்டீன் என்பது காங்கிரசின் ஆபத்தான முக்கோண சர்வதேச சதி என்றால் மிகையாகாது.
"ஜார்ஜ் சோரோஸும் ராகுல் காந்தியும் வேறு வேறு
உடல்கள், ஆனால் ஒரே ஆன்மா"
என்பது தான் யதார்த்தம்.
இந்திய அரசை நிலைகுலையச் செய்ய சோரோஸ் தனது 'ஓபன் சொசைட்டி பவுண்டேஷன்' (OSF) மூலம் பெரும் நிதியை உலகளாவிய அமைப்புகளுக்கு - குறிப்பகாக GPA போன்றவற்றிற்கு வழங்குகிறார். அந்த ஜிபிஏ மூலம் இந்தியாவின் பல என் ஜி ஓக்கள் பணம் பெற்று அவைகள் தவறாக பலவிதமான இந்திய இறையாண்மைக்கு எதிரான அறிக்கைகள், போராட்டங்கள், மாணவர்களின் கல்வி வளாகப் ஆர்ப்பாட்டங்கள் என்று அந்தப்பணம் செலவிடப்படுகின்றது.
இந்த கூட்டணியில் இந்திய காங்கிரசும் அங்கம் வகிக்கிறது என்பதையும், அதில் அதன் தலைமைக்குழுவில் (Presidium) ராகுல் காந்தி உறுப்பினராக இருப்பதையும் சாம் பிட்ரோடா - காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவுத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கூட்டணியானது 110 நாடுகளைக் கொண்ட ஒரு வலையமைப்பு.
பாரதத்தின் சாபக்கேடு இந்த பப்பு என்ற பப்பெட். பாரத தேச மக்கள் அடுத்த லோக் சபா தேர்தலில் பப்பு எங்கு நின்றாலும் தோற்கடித்து 2047 - வளர்ந்த பாரதத்தை உருவாக்க உதவ வேண்டும்.
வாழ்க பாரதம் ! வளர்ந்த பாரதம்!



Comments