மோடிஜியின் மலேசிய அரசுப் பயணம் - பிப்ரவரி 7 - 8 - இரு தினங்கள்
2026 பிப்ரவரி 7-ம் நாள் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மலேசியா - கோலாலம்பூர் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றது ஒரு சிறப்பு அம்சமாகும்.
மோடியுடன் காரில் சேர்ந்தே பணித்தது இன்னும் கூடுதல் சிறப்பாகும். இது இரு நாட்டு அதிபர்களுக்கும் உள்ள உறவும், அன்பும், புரிதலும் ஆகியவைகளின் வெளிப்பாடு என்றால் மிகை அல்ல.
மலேசிய மக்களின் உற்சாக வரவேற்பு, நாதசுர இசை, கோலாலம்பூரில்
நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் ஒரு சிறப்பம்சமாக ஒரு புதிய சாதனையைப் படைத்த ஒரு நடன
நிகழ்ச்சி ஆகியவைகளைக் குறிப்பிட வேண்டும். அவைகளின் படங்கள் இதோ உங்கள்
பார்வைக்கு:
இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைப் பற்றிய படங்களை மோடிஜியின் உரையுடன் சேர்த்துப் பார்த்துப் படிக்கவும்:
மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகம் தங்களின் பாரம்பரியத்தைக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாத்து, பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.
கோலாலம்பூரில், இரு நாட்டு மக்களிடையேயான உறவின் பல்வேறு சிறப்பம்சங்களை
நான் கண்டேன். இதில் கோலாலம்பூர் 'டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்' (Temple of Fine
Arts) கலைஞர்களின்
ராமாயணக் கதைக்களத்தைக் கொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் 'மலேசிய சிலம்பம்
போர்க்கலை மன்றத்தின்' சிலம்பாட்டக் கலை ஆகியவைகள் அடங்கும்.
மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர்
திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர்.
மோடிஜி அவர்களின் உரையின் சுருக்கம்:
"மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கே திரண்டுள்ள எனது அன்பிற்குரிய இந்தியக் குடும்ப உறுப்பினர்களே மற்றும் இந்தியாவின் நண்பர்களே!
இன்று கோலாலம்பூரில் நிலவும் இந்த உற்சாகமும், அன்பும், ஆற்றலும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. சுமார் 12,000-க்கும் மேற்பட்டோர் இங்கே கூடியிருப்பது வெறும் எண்ணிக்கை அல்ல; இது பாரதத்திற்கும் மலேசியாவிற்கும் இடையிலான ஆழமான பிணைப்பின் சாட்சி.
இந்தியா மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீங்கள் ஒரு 'துடிப்பான மற்றும் உயிருள்ள பாலமாக' (Living and Vibrant Bridge) திகழ்கிறீர்கள். கடல் கடந்து நீங்கள் இங்கே வாழ்ந்தாலும், உங்கள் வேர்கள் பாரதப் பண்பாட்டோடு பிணைக்கப்பட்டுள்ளன. நமது நாகரிக மரபையும், இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவதில் உங்கள் பங்கு ஈடு இணையற்றது.
இன்று இங்கே நடைபெற்ற 'வாயாங் குலித்' (Wayang Kulit) நிழற்பாவை கூத்து மற்றும் 'திதா ஸ்ரீ ராமா' (Titah Seri Rama) கதை அரங்கேற்றம் என்னை வியக்க வைத்தது. ராமாயணம் என்பது வெறும் காவியம் மட்டுமல்ல, அது நாடுகளையும் எல்லைகளையும் கடந்து நம்மை இணைக்கும் ஒரு கலாச்சார இழை.
அதேபோல், 'டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்' வழங்கிய ராமாயண பரதநாட்டியம் மற்றும் மலேசிய சிலம்பக் கலை மன்றத்தின் சிலம்பாட்டக் கலை ஆகியவை நமது பாரம்பரியம் தலைமுறைகளைக் கடந்து இங்கும் செழித்து வளர்வதைப் பறைசாற்றுகின்றன.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பில் சமஸ்கிருதத்தின் பங்கு குறித்து மலேசிய இந்தியப் பாரம்பரியக் கழகம் (MIHS) வழங்கிய புத்தகம் மிக முக்கியமானது. மலாய் மொழியில் கலந்துள்ள ஆயிரக்கணக்கான சமஸ்கிருதச் சொற்கள் நமது தொன்மையான உறவுக்குச் சான்றாகும். அவர்களின் இந்தப் பணி பாராட்டுக்குரியது.
மலேசியாவின் வளர்ச்சிக்கு நீங்கள் அளிக்கும் பங்களிப்பு இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கிறது. உங்களின் இந்த அன்பு எப்போதும் நிலைத்திருக்கட்டும்."
மோடி குறிப்பட்ட புத்தகம் பற்றிய ஒரு சிறு குறிப்பு:மலாய் மொழியில் கலந்துள்ள சமஸ்கிருதச் சொற்கள் (சுமார் 4,000-க்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது), மலேசியாவின் கல்வெட்டுகள், மற்றும் அந்நாட்டின் கலாச்சாரச் சடங்குகளில் சமஸ்கிருதத்தின் தாக்கம் ஆகியவற்றை இந்தப் புத்தகம் விரிவாக விளக்குகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வணிகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் மூலம் சமஸ்கிருதம் எவ்வாறு தென்கிழக்கு ஆசியாவிற்குச் சென்றடைந்தது என்பதையும், அது இன்றைய நவீன மலாய் மொழியில் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதையும் இது ஆவணப்படுத்துகிறது.
இரு நாடுகள் கைஎழுத்திட்ட ஒப்பந்த விவரங்கள்:
8-ம் தேதி பிப்ரவரி காலை செரி பெர்தானாவில் நமது
பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் அன்வார் இப்ராஹிமை சந்தித்து சிறந்த கலந்துரையாடலை
நடத்தினர்.
இந்தியாவும் மலேசியாவும் கடல்சார் அண்டை நாடுகள்; நீண்ட காலமாக நெருக்கமான நட்புறவைப் பகிர்ந்து வருகின்றன. வர்த்தகம், உட்கட்டமைப்பு, ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், உயிர்தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சிசார் ஒத்துழைப்புகள் அவர்களின் உரையாடலில் அங்கம் வகித்தது.
மேலும், பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அரைமின்கலன் (செமிகண்டக்டர்) துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
உள்நாட்டு கரன்சி வர்த்தகம்: இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட் ஆகியவற்றைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். இந்தப் பின்னணியில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பாதுகாப்பு, செமிகண்டக்டர் (Semiconductor), டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.
செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் வடிவமைப்புத் திறனையும், மலேசியாவின் உற்பத்தித் திறனையும் இணைத்து உலகளாவிய விநியோகச் சங்கிலியை (Supply Chain) வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
யுபிஐ (UPI) அறிமுகம்: இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையான யுபிஐ விரைவில் மலேசியாவிலும் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்குள்ள இந்தியர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த பயணம் இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய
செயல்பாட்டுக் கொள்கை' (Act East Policy) என்ற மோடிஜியின் கொள்கையை செயபடுத்த மேற்கொள்ளாப்பட்ட தாகும்.
ஜெய் ஹோ மோடிஜி & அன்வார் இப்ராஹிம் ஜி
இருவருக்கும் வாய்மை மாலை மரியாதை செய்து கெளரவிக்கிறது

















Comments