04 - 02 - 2026 - பாராளுமன்றத்தின் கருப்பு தினம் - உபயம் பப்பி பிரியங்கா
பப்புவின் அக்கா பப்பி பிரியங்கா பப்புவுக்கு தப்பாமல் பிறந்தவர்.
பிரியங்கா பப்பி தன் தம்பியை பாராளுமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் கண்ணகி போல் கோபத்தில் பொங்கினாள்: என் தம்பியை பேச அனுமதிக்காத இந்த சபையில் மோடியை பேச விட மாட்டோம் - என்று சபதம் போல் சூளுரைத்தாள் பிரியங்கா வாத்ரா. அதற்கு ஆறு பேர் கொண்ட அணியை தேர்வு செய்தாள். திட்டம் தீட்டினாள்.
அந்த ஆறு பெண் எம்பிக்களில் இரண்டு பேர்கள் தமிழ் நாடு, இரண்டு பேர்கள் மஹாராஷ்டிரா, தலா ஒருவர் குஜராத் மற்றும் கர்நாடகா. அவர்களின் சூழ்ச்சித் திட்டம் இது தான்: மோடி சபைக்கு வரும்
பொழுதோ அல்லது அவர் இருக்கையில்
அமருவதற்கு முன்போ அவரைச் சூழ்ந்து கொண்டு தங்கள் துப்பட்டாவை நழுவ விட்டு,
மோடி தங்களை மானபங்கப்படுத்திவிட்டார் என்று உலக அளவில் பேசுப்பொருளாக்கி அவரது
பெயருக்கு களங்கம் கற்பிப்பது தான் அவர்களின் செயல் திட்டம்.
இதற்கு அக்கா - தம்பி இருவரும் ஆதரவும் ஒப்புதலும் அளித்து அந்த திட்டம் வெற்றியடைய 4-ம் தேதி பிப்ரவரி 2026 சபையில் வெகு ஆவலோடு காத்திருந்தனர்.
மோடி சபைக்கு அன்று மாலை 5.00 மணிக்கு வருவதாக அறிவிப்பு. அதற்கு முன்னதாக மாலை சுமார் 4.45 மணிக்கு அந்த அறுவர் அணி 30 அடி பதாகையை கையில் ஏந்திக்கொண்டு மோடியின் இருக்கை - அவர் அவைக்கு வரும் குறுகலான பாதை ஆகியவைகளைச் சூழ்ந்து கொண்டு ஆவலாகக் காத்துக்கொண்டு இருந்தனர். அந்த பதாகையில் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் M.M. நரவணே எழுதிய "Four Stars of Destiny" என்ற சுயசரிதை நூலில் ராகுல் குற்றம் சாட்டிய வரிகள் தான் இடம் பெற்றன. மறைமுகமாக ராகுலை அந்த நூலைப்பற்றி பேசவிடாமல் தடுக்கும் செயலுக்கு எதிர்ப்பு என்ற முறையில் இந்த வாசகத்தை அவர்கள் முன் வைத்தனர்.
மேலே உள்ள முதல் இரண்டு படங்களில் வலது பக்கப் படத்தில் தமிழக எம்பி ஜோதிமணி எந்தவிதமான கூச்சமோ, சபை நாகரிகமோ இல்லாமல் தங்கள் பிற எம்பிக்களை வா வா என்று அழைக்கும் நிரூபணப் படம் ஆயிரம் உண்மைகளை உரைக்கும். இந்த ஜோதிமணி ராகுலுடன் சோராஸ் குழுவின் அயல் நாட்டில் நடந்த ஜிபிஏ கூட்டங்கள், பார்ட்டிகள் பங்கு கொண்டவர் என்பது தனிக்கதை.
இந்த மிகவும் கேவலமான அநாகரிகமான சதித் திட்டத்தை அறிந்தவுடன், லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா மோடியை அவைக்கு வரவேண்டாம் என்று சொல்ல மோடியும் அதற்கு செவி சாய்த்து அவைக்கு வருவதை தவிர்த்தார்.
ஓம் பிர்லா சபையில் இது காங்கிரசின் சதித் திட்டம் என்று எந்தவித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாகவே சபையில் தெரிவித்து, பப்பி - பப்பு ஆகிய இருவர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் முகங்களில் கரியைப் பூசிவிட்டார்.
ஓம் பிர்லாவின் இந்தச் செய்கை தங்களின் கடமைகளை ஆற்றவிடாமல் தடுக்கும் செய்கை என்று குற்றம் சாட்டி அவர் மீது ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர் பப்பு - பாப்பி அணியினர்.
அந்த அவர்களின் தீர்மானத்தில் அரசியலமைப்பின் விதி 94(c)-இன் கீழ் என்பதற்குப் பதில் தவறான விதியை காட்டியது, வருடங்களை 2026 என்பதற்குப்பதில் 2025 என்று குறிப்பிட்டது, பலரது கையெழுத்துக்கள் முறையாக இல்லாதது என்று பல தவறுகள் இருந்ததால் அவைகளைத் திருத்தி மீண்டும் புதிதாக தீர்மான கடிதம் கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது மிகவும் கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த தவறுகள் எல்லாம் பப்புவுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
'பிழைகளை நான் காதலிக்கிறேன்' என்ற ராகுலின் கருத்து பிரிசித்தமான ஒன்றாகும். அதே போல் பப்புவின் அக்கா பப்பி - வளர்ச்சியடையாத நாய்க்குட்டி ஜீவன் என்பது இதன் பொருள் - யும் தன் தம்பிக்கு ஈடுகொடிக்கும் விதமாக 'தர்ணாவை நான் காதலிக்கிறேன்' என்று சொல்லாமல் சொல்வதாகவே பலரும் கருதுகிறார்கள். ஏனென்றால் பிரியங்கா தலைமையில் ஓம் பிர்லா அறைக்குச் சென்று அவரை அவமதிக்கும் விதமாக தர்ணா செய்துள்ளனர்.
இதன் முடிவு வருகிற லோக் சபாவின் 9-ம்தேதி கூட்டத் தொடரில் தெரியவரும். முடிவு தெரிகிற வரை 'நான் சபா நாயகர் இருக்கையில் அமர மாட்டேன்' என்று ஓம் பிர்லா முடிவெடுத்துள்ளார்.
பப்புவும் - பப்பியும் அரசியலுக்கு லாயக்கில்லா அஞ்ஞானிகள். அவர்கள் ஞான சூன்யங்கள். பாரத மக்கள் அவர்களை எல்லா வகையிலும் தோற்கடித்து, சத்தியமேவ ஜெயதே என்பதை நிரூபிக்க வேண்டும்.
பாரத மாதாவுக்கு ஜே !





Comments