Posts

துடைப்பக் கட்சியின் தற்போதைய பொம்மை முதல்வர் அதிஷி சிங் மர்லினா

Image
  அரவிந்த் கெஜ்ரிவால் அவரது டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்துள்ளார் . அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது .  அந்த ஜாமீனில் இரண்டு முக்கிய நிபந்தனைகளை கோர்ட் விதித்துள்ளது .  அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :  ஜாமீனில் இருக்கும் போது கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்திற்கோ , டெல்லி செயலகத்துக்கோ செல்ல முடியாது . அவர் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட முடியாது.   இதன் காரணமாக கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி உண்டாகி, அவரும் ராஜினாமா செய்ய, 43 வயதே ஆன அதிஷி சிங் மர்லினா 21-ம் தேதி செப்டம்பர் 2024 அன்று பதவிப் பிரமாணம் எடுத்து எட்டாவது டெல்லி முதல் மந்திரியாகவும் - மூன்றாவது டெல்லி பெண் மு தல் மந்திரியாகவும் பொறுப்பேற்றுள்ளார் .  பொறுப்பேற்றவுடன் அதிஷி செய்த முதல் பணி தனது குருவாகவும், கூடப்பிறவா மூத்த சகோதரனாகவும் மதிக்கப்பட்ட துடைப்பக் கட்சியின் முன்னாள் முதல் மந்திரி பெயில் கெஜ...

பொங்கலோ பொங்கல்! - தைப் பொங்கல் விழா 14 - 01 - 2025

Image
கரும்பாய் இனிக்கும் பொங்கல்   அரிசி - வெல்லம் பொங்கி சக்கரைப் பொங்கலாக இனிக்கும் பொங்கல்   மங்களகரமான மஞ்சள் கொத்து புதுப்பானையின் கழுத்தில் அலங்கரிக்க இனிக்கும் பொங்கல் .  சூரிய பகவானின் கதிர்கள் சூழ சுற்றத்தார் புடைசூழ புத்தாடை உடுத்தி , புது மலர்கள் தலையில் சூடி ' பொங்கலோ பொங்கல் ' என்று உரக்க உச்சரித்து உழவுக்கு வந்தனை செய்யும் புனித நாள் இது .  பாரத தேசமெங்கும் கொண்டாடும் திருவிழா இது .  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் , இவ்விழா பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது - கர்நாடகா, தெலுங்கானா, உத்தரபிரதேசத்தில் மகர சங்கராந்தி , தமிழ்நாட்டில் பொங்கல் , குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணம் , ஹரியானா மற்றும் பஞ்சாபில் மகி , ஆந்திரப் பிரதேசம் , மேற்கு வங்கத்தில் பூஷ் சோங்கராந்தி.   மகர சங்கராந்தி ஒரு புனிதமான நாளி ன் தொடக்கமாகும் . ஏனென்றால் கடவுள்கள் தூக்கத்திலிருந்து விழிப்படையும் நாள் தான் சங்கராந்தி ஆகும் .    சங்கராந்தி என்றால் நகர்தல் - பயணம் என்று பொருள் . ஆகையால் மகர சங்கராந்தி என்றால்...

பாரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகள் வெளியீடு

Image
ரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகளையும்  வெளியிட்டு தமிழ்த்தாயின் ஆசியைப் பெறும் பாரதப் பிரதமர் மோடி இதன் இணைப்பு : https://www.youtube.com/watch?v=M-NQKA8cuoo டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள தனது இல்லத்தில் 11-ம் தேதி  நடைபெற்ற விழாவில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள் அடங்கிய 23 தொகுப்பு நூல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். உடன் நூல்களைத் தொகுத்த சீனி விசுவநாதன் , அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் சீனிவாசன் உள்ளனர். மோடி: பாரதியின் இலக்கியப் படைப்பு தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம்.     டிசம்பர் 11, 2024 தமிழ்த் தாய்க்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது. அந்த தினம் மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் 143- வது பிறந்த தினமாகும் . நாடு முழுவதும் கொண்டாடப்படும் அதே வேளையில் நமது பாரதப் பிரதமர் தமது அரசு இல்லத்தில் பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் அடங்கிய 23 பாகங்களை ஒரு விழா எடுத்து வெளியிட்டுள்ளார் . அன்னை தமிழ்த் தாயின் பரிபூரண அருள் மோடிக்கு கிட்டி உள்ளதை தமிழ் உலகம் நினைத்துப் பெருமைப் படலாம் . மத்திய கலாச்​சாரத் துறை​யின் கீ...

18 வயது குகேஷ் டொம்மராஜு 18-வது உலக செஸ் சேம்பியன்

Image
குகேஷ் வெற்றியின் பின்னே அவனது பெற்றோர்களின் பங்களிப்பும் , தியாகமும் இருப்பதை இந்த சமயத்தில் குறிப்பிட வேண்டும் .  குகேஷின் தந்தையின் பெயர் டாக்டர் ரஜினிகாந்த் - அவர் ஒரு இ . என் . டி . சர்ஜன் . அவனது தாய் பத்மா குமாரியும் மைக்ரோ பயாலஜிஸ்ட் டாக்டர் .   பையனுடன் பல தேசங்களுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் குஷேனின் தந்தை தனது வேலையை ராஜினாமா செய்து தன் மகனுடன் கூடவே துணையாக இருந்து உதவி உள்ளார் . தன் மகனின் வெற்றியே தன் வாழ்வின் குறிக்கோளாக தாயும் - தந்தையும் உழைத்துள்ளார்கள் .   குகேஷின் வெற்றிக்கு 15- வது உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின்  பயிற்சியும் . வழிகாட்டலும் முக்கிய அங்கம் வகிக்கிறது . விஸ்வநாதன் ஆனந்த இந்தியாவின் வருங்கால கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்க வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமி ( WACA) -யை ஆரம்பித்து அதில் குகேஷ் டி போன்ற நட்சத்திரங்களை உலகளாவிய வெற்றிக்கு உதவி செய்துள்ளார். ஆகையால் அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.   வாய்மை இந்த 18- வது உலக செஸ் சேம்பியன் குகேஷ் தொம்மராஜுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகிறது .   பாரதம...

கார்த்திகை தீபம் - 13 - 12 - 2024 - வெள்ளிக்கிழமை

Image
  திருக்கார்த்திகை திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஹிந்து பண்டிகையாகும் .  பரணி தீபம் : முதல் நாள் பரணி தீபம் காளிதேவியை வழிபட்டு ஏற்றப்படும் .  அண்ணாமலையார் தீபம்: இரண்டாம் நாள் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கோயிலிலும் திருவண்ணாமலையிலும் மஹா தீபம் ஏற்றப்படும் . விஷ்ணு தீபம்: மூன்றாம் நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்களால் விஷ்ணு ஆலயங்களில் ஏற்றப்படும் .  நாட்டுக் கார்த்திகை: நான்காம் நாள் மிருக சீரிட நட்சத்திரத்தில் பெண்ணையும் , மருமகனையும் வீட்டுக்கு அழைத்து குடும்ப விழாவாகக் கொண்டாடுவார்கள் .  தோட்டக் கார்த்திகை: ஐந்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் வயல்கள் , தோட்டங்கள் , கிணற்றடிகள் ஆகியவைகளில் தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள் .  இந்த கார்த்திகை தீப விழாவின் முக்கிய நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதலாகும் .  சொக்கப்பனை என்பது பனை மரம் அதன் ஓலைகளால் ஆனதாகும் . பனை மரத்தை வெட்டி எடுத்து ஆலயத்தின் முன் வீதியில் நட்டு அதைச் சுற்றி பல பனை ஓலைகளைச் சுற்றி ...

இலக்கிய கதம்ப மாலை - விமரிசனம்

Image
  திரு. பி . ஆறுமுகம் என்ற என் நண்பர் நான் அனுப்பிய ' இலக்கிய கதம்ப மாலை ' என்ற என் புத்தகத்தை முழுவதும் படித்து அது குறித்து ஒரு நீண்ட விமரிசனம் ( என்னிடம் கொண்ட அன்பினால் அது ஒரு வாழ்த்துரையாக அமையும் வாய்ப்பும் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன் ) எழுதி எனக்கு தபால் மூலம் அனுப்பி உள்ளார் . அதை இங்கு பிரசுரித்து அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் . ஆறுமுகத்திற்கு என் நன்றிகள் பல . ஆசிகளோ அனந்தம் .   ஆசிரியர் : ஜயந்திநாதன்   இடது புறம் : பி . ஆறுமுகம் . வலது புறம் : ஆசிரியர் ஜயந்திநாதன் ( இடம் : திருவல்லிக்கேணியில் பாரதி நினைவு மண்டபம் )     பி . ஆறுமுகத்தின் விமரிசனக் கட்டுரை மடல் :   மதிப்பிற்குரியவர் அவர்களே ,  தங்களது இலக்கிய கதம்ப மாலை நூல் கிடைக்கப்பெற்றேன் . என் இதய பூர்வமான நன்றிகள் .  நூல் தொடர்பாகவும் , உங்கள் இளைய   பருவத்தில் மலர்ந்த மலர்களை மாலையாக்கி இலக்கிய தாகத்தினால் எழுத்தில் வடித்து இத்தனை நாள் பாதுகாத்து தமிழன்னையின் ...