பாரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகள் வெளியீடு

ரதியின் அனைத்து இலக்கியப் படைப்புகளையும்  வெளியிட்டு தமிழ்த்தாயின் ஆசியைப் பெறும் பாரதப் பிரதமர் மோடி

இதன் இணைப்பு: https://www.youtube.com/watch?v=M-NQKA8cuoo

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள தனது இல்லத்தில் 11-ம் தேதி  நடைபெற்ற விழாவில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள் அடங்கிய 23 தொகுப்பு நூல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். உடன் நூல்களைத் தொகுத்த சீனி விசுவநாதன், அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் சீனிவாசன் உள்ளனர்.



மோடி: பாரதியின் இலக்கியப் படைப்பு தமிழ் மொழியின் மிகப் பெரிய பொக்கிஷம். 

 டிசம்பர் 11, 2024 தமிழ்த் தாய்க்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது. அந்த தினம் மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்த தினமாகும். நாடு முழுவதும் கொண்டாடப்படும் அதே வேளையில் நமது பாரதப் பிரதமர் தமது அரசு இல்லத்தில் பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் அடங்கிய 23 பாகங்களை ஒரு விழா எடுத்து வெளியிட்டுள்ளார். அன்னை தமிழ்த் தாயின் பரிபூரண அருள் மோடிக்கு கிட்டி உள்ளதை தமிழ் உலகம் நினைத்துப் பெருமைப் படலாம்.

மத்திய கலாச்​சாரத் துறை​யின் கீழ் அமைந்​துள்ள சாகித்ய அகாடமி சார்​பில் பிரதமரின் அரசு இல்லத்​தில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்​றது. கால வரிசை​யில் பாரதி படைப்புகள் என்ற பெயரில் தமிழில் வெளி​யிடப்​பட்ட இந்நூல்களை சீனி விசுவ நாதன் தொகுத்​துள்ளார். இந்த நிகழ்ச்​சி​யில் மத்திய கலாச்​சாரத் துறை அமைச்சர் கஜேந்​திரசிங் ஷெகாவாத், நாடாளு​மன்ற விவகாரத்​துறை இணையமைச்சர் எல்.​முருகன் உள்ளிட்​டோர் கலந்து கொண்​டனர். 

இந்த தொகுப்​பில் சுப்​பிரமணிய பாரதி​யின் எழுத்​து​களின் பதிப்பு​கள், விளக்கங்கள், ஆவணங்​கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. முதன்​முறையாக பாரதி​யார் படைப்புகள் காலவரிசைப்படி நூல்​களாக வெளி​யிடப்​பட்​டுள்ளன. தமிழகத்​தின் 123 ஆண்டுகள் பழமையான அலையன்ஸ் நிறு​வனம் இதனை வெளியிட்டுள்ளது. 

நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி பேசி​ய​தாவது: 

"மகா கவி சுப்​பிரமணிய பாரதியாரின் பிறந்​தநாளை நாடு இன்று கொண்​டாடு​கிறது. நான் அவரை பயபக்தி​யுடன் வணங்​கு​கிறேன். அவரது மரபுக்கு எனது இதயப்​பூர்​வமான அஞ்சலியை செலுத்து​கிறேன். 

மகாகவி சுப்​ரமணிய பாரதி​யின் படைப்புகள் வெளிவருவது என்பது அவருக்கு குறிப்​பிடத்​தக்க மரியாதையை அளிப்​ப​தாகும். நாட்​டின் தேவைகளை மனதில் கொண்டு பாடு​பட்ட சிறந்த சிந்​தனை​யாளர் சுப்​ரமணிய பாரதி. அவருடைய பார்வை மிகவும் விசால​மானது. அந்த காலகட்​டத்​தில் நாட்டுக்​குத் தேவையான அனைத்து திசைகளி​லும் அவர் பணியாற்றினார். 

மகா கவிஞர் சுப்​பிரமணிய பாரதி​யாரின் படைப்புகளை வெளி​யிடு​வ​தில் நான் பெருமை கொள்​கிறேன். பாரதி​யார் தமிழகத்​தின், தமிழ் மொழி​யின் பாரம்​பரியம் மட்டுமல்ல, அவர் தனது ஒவ்வொரு மூச்​சை​யும் அன்னை பாரதத்தின் சேவைக்காக அர்ப்​பணித்த சிந்​தனை​யாளர். 

நம் நாட்​டில், வார்த்​தைகள் வெறும் வெளிப்​பாடாக மட்டும் இல்லாமல், ஆழமான முக்​கி​யத்து​வத்​தைக் கொண்​டுள்ளன. வார்த்​தைகளின் எல்லை​யற்ற ஆற்றலைப் பொக்​கிஷ​மாகக் கருதும் கலாச்​சா​ரத்​தைச் சேர்ந்​தவர்கள் நாம். அதனால்​தான் நம் ஞானிகளின் வார்த்​தைகள் அவர்​களின் எண்ணங்கள் மட்டுமல்ல, அவர்​களின் சிந்​தனை, அனுபவம் மற்றும் ஆன்மீக பயிற்​சி​யின் சாறாக அமைந்​துள்ளன. 

சுப்​ரமணிய பாரதி போன்ற ஆளுமை நூற்​றாண்​டுக்கு ஒருமுறை கிடைக்​கக்​கூடியது. அவருடைய சிந்​தனை, புத்​திசாலித்​தனம், பல பரிமாண ஆளுமை ஆகியவை நம் அனைவரை​யும் ஆச்சரியப்​படுத்து​கிறது. அவரது எண்ணங்​கள், சிந்​தனைகள் நம் எல்லோரை​யும் ஊக்கு​விக்​கிறது. அவரை நோக்கி ஈர்க்​கின்றன. தமிழ் மொழி​யின் பொக்​கிஷமாக தேசியக் கவிஞர் பாரதியாரின் நூல்கள் அமைந்​துள்ளன. பாரதியாரின் படைப்புகள் இன்றும் கூட நம்மை ஊக்கு​விக்​கின்றன. 

காசி என்று அழைக்​கப்​படும் வாராணசிக்​கும், பாரதிக்​கும் அதிக தொடர்​புண்டு. தனது அறிவைப் பெருக்​கிக் கொள்​வதற்காக வாராணசிக்கு பாரதி​யார் வந்தார். பின்னர் காசி​யிலேயே சில காலம் பாரதி தங்கி​யிருந்​தார். காசிக்​குப் பெருமை சேர்த்​தவர் பாரதி.' 

நாடு முழுவதும் கொண்டாட்டம்: உத்தரபிரதேச மாநிலத்​தி​லுள்ள வாராணசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2022-ம் ஆண்டில் முதன்​முறையாக நடந்​தது. அப்போது, பாரதி​யின் பிறந்​தநாளை மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் இனி வருடந்​தோறும் ‘தேசிய மொழிகள் ​தினம்’ ஆக ​கொண்​டாடப்​படும் என்று அறி​வித்​தது. இதன் ​காரண​மாக, நாட்​டின் அனைத்து ​மாநிலங்​களி​லும் இந்த ஆண்டு பார​தி​யாரின் பிறந்​தநாள் இரண்​டாவது ​முறையாக கொண்​டாடப்​பட்டது.

பாரதியின் இலக்கியப் படைப்பான இந்த 23 பாகங்களைத் தொகுத்த பாரதி பக்தர் சீனி விஸ்வநாதன், அதைப் பதிப்பித்த தமிழகத்​தின் 123 ஆண்டுகள் பழமையான அலையன்ஸ் நிறு​வனம், அதை தமது அரசு இல்லத்தில் வெளியிட்டு பெருமைப் படுத்திய பாரதப் பிரதமர் மோடி ஆகிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வாய்மை அவர்களைப் பாராட்டும் விதமாக பூச்செண்டு கொடுத்து பாராட்டுகிறது





Comments

Popular posts from this blog

வள்ளுவம் 4 - குலம்

கண்ணகியின் மதுரை எரித்த பிரம்மாண்ட பிழை

குரு அஷ்டகம் ஆக்கம்: ஆதி சங்கர பகவத் பாதாள்