ஜூலை 6 முதல் 11, 2026 வரை மோடியின் இந்தோனேஷியா – ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அரசுப் பயணம்

 ஜூலை 6 முதல் 11, 2026 வரை மோடியின் இந்தோனேஷியா –

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அரசுப் பயணம் - இந்தோ-பசிபிக் 

பிராந்தியத்தில் இந்தியாவின் புதிய இராஜதந்திர எழுச்சி


பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று முக்கிய இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது ஒரு சாதாரண வெளிநாட்டுப் பயணம் அல்ல. இந்தியாவின் Act East Policy, MAHASAGAR (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) என்ற கடல்சார் பார்வை, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் (Free and Open Indo-Pacific) கொள்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் முக்கியமான இராஜதந்திரப் பயணமாக இது அமைந்தது.

1.      




2026 ஜூலை 6 முதல் 8 வரை மோடியின் இந்தோனேசியா பயணம்



இந்தோனேசியா என்பது 17,508 தீவுகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்ட நாடாகும். இது தென்கிழக்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக, இந்த நாட்டின் வரைபடம் மற்றும் அமைவு முக்கிய தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: சுமத்ரா தீவு இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு.  ஜாவா இந்தோனேசியாவின் தலைநகரான 'ஜகார்த்தா மற்றும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி. போர்னியோ  தீவின் பெரும்பகுதி 'காளிமந்தன்' என்று அழைக்கப்படுகிறது. சுலாவெசி  வித்தியாசமான நட்சத்திர வடிவ அமைப்பைக் கொண்ட தீவு. பாலி மற்றும் நுசா தென்காரா  தீவுகளில்  பாலி தீவு உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். நியூ கினியாவின் மேற்கு பகுதி  இயற்கை வளங்கள் நிறைந்த கிழக்கு எல்லைப் பகுதி.

இந்தோனேசியாவின் தேசியக் கொடியானது "சாங் மேரா பூத்தே" என்று அழைக்கப்படுகிறது. கொடியின் மேற்பகுதி சிவப்பு நிறமாகவும், கீழ்ப்பகுதி வெள்ளை நிறமாகவும் இருக்கும். இது 2:3 என்ற விகிதத்தில் செவ்வக வடிவைக் கொண்டுள்ளது. சிவப்பு நிறம் மனித தைரியத்தையும், வெள்ளை நிறம் தூய்மையையும் குறிக்கிறது.


இந்தோனேசியக் குடியரசின் அதிபர் மேதகு திரு. பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பை ஏற்று, பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 2026 ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.

பிரதமரின் இந்தோனேசியாவிற்கான நான்காவது பயணமாகவும், மே 2018-இல் இந்தியா-இந்தோனேசியா உறவுகள் 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மை' (Comprehensive Strategic Partnership) நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணமாகவும் இது அமையும்.

பாரதப் பிரமரை இந்தோனேஷிப அதிபர் ஜகர்த்தா விமான நிலையத்திற்கு நேரிலே வந்து வரவேற்றது அதிபரின் தனிப்பட்ட மோடியிடம் கொண்ட நட்பின் அடையாளமாகவே கருதவேண்டும். இதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும். 
















இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, பிரதமர் மோடியை ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் தான் கருதுவதாகவும், இந்தியாவின் வெற்றிகரமான கொள்கைகளைத் தான் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்ட உரை விவரம்: அதிபர் சுபியாந்தோ, பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு மிக்க மக்கள் நலப் பணிகளையும், இந்தியாவின் அபார பொருளாதார வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி, "தனிப்பட்ட முறையில் நான் உங்களை (பிரதமர் மோடியை) ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் பார்க்கிறேன்" என்று புகழ்ந்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா அடைந்துள்ள வியக்கத்தக்க முன்னேற்றங்களும் அதன் கொள்கைகளும் உலக நாடுகளுக்கு ஒரு திறந்த புத்தகம் போன்றது என்பதைக் குறிக்கும் வகையில், "இந்தியாவின் இந்த வெற்றிக் சூத்திரத்திற்கு எந்தவொரு காப்புரிமையும் (Copyright) கிடையாது; எனவே, உங்களின் இந்தச் சிறந்த நிர்வாக முறையை நாங்கள் முழுமையாகப் பின்பற்றி, இந்தோனேசியாவிலும் செயல்படுத்த விரும்புகிறோம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியா வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மை' (Comprehensive Strategic Partnership) பிராந்திய அமைதிக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

ஜகார்த்தாவில், அங்குள்ள இந்திய  வம்சாவளியினரின்  பெரும் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றியது அங்கு கூடிய மக்களின் ஏகோபித்த அன்பும், ஆரவாரமான கைதட்டல்கள் இந்தியா – இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளின் சிறப்புமிக்க மற்றும் இணக்கமான இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மோடி தமது விஜயத்தில் இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றச் செய்தது மோடியிடம் அந்த அரசாங்கம் தனிப்பட்ட முறையில் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவே மதிப்பிட வேண்டும்.

“இந்தியாவும் இந்தோனேசியாவும் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் வரலாறு,

கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. 

நட்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வளமான எதிர்காலத்தை உருவாக்க நாம் 

தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்” என்ற முழக்க உரை அந்த நாட்டின் 

அரசாட்சி செய்யும் அங்கத்தினரை வெகுவாகக் கவர்ந்தது. 





அதன் வெளிப்பாடாக மோடி அவரகளுக்கு இந்த இந்தோனேசியக் குடியரசின்

'அடிபுரா ஸ்டார்' (Adipura Star) விருதை அளிக்கப்பட்டது.


“இந்த கௌரவம் இந்திய மக்கள் அனைவருக்கும் உரியது. இந்த விருது இந்தோனேசிய மக்களின் அன்பைப் பிரதிபலிக்கிறது. மேலும் இது இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் ஆழமாக வேரூன்றிய உறவுக்குச் செய்யும் மரியாதையாகும். இந்தச் சிறப்புமிக்க கௌரவத்திற்காக அதிபர் பிரபோவோ, இந்தோனேசிய அரசு மற்றும் அனைத்து இந்தோனேசிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று மோடி தமது நன்றியைத் தெரிவித்தார்




பிரம்பனன் கோயில்:

இந்தோனேஷியாவின் உலகப் புகழ்பெற்ற பிரம்பனன் சிவன் கோயில் இந்திய-இந்தோனேஷிய நாகரிக உறவின் உயிர்ப்புச் சின்னமாக திகழ்கிறது.

ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவும் மோடியும் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான பிரம்பானன் கோயில் யோக்யகர்த்தாவில் உள்ளது. அந்த வளாக மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றாக தொடங்கி வைத்தார்கள். இந்த முயற்சி, இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நமது மக்களை இணைத்துள்ள பகிரப்பட்ட பாரம்பரியத்தில் வேரூன்றிய, நிலையான நாகரிகப் பிணைப்புகளுக்குச் சிறந்த சான்றாகும்.

 

 மோடியின் இந்த விஜயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்:

 

 



 இந்தோனேசியாவின் புகழ்பெற்ற நிழற்பாவைக் கூத்தான  பாரம்பரியமான 'வாயாங் குலிட்' (Wayang Kulit)  காலத்தால் அழியாத இராமாயணக் காவியக் கலை நிகழ்ச்சியை மோடி வரவேற்பின் ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது. இந்த அற்புதப் படைப்பை வழங்கியது 'கணேஷ்குழுவினராகும்.


இந்தோனேஷியா இந்தியாவின் மிக நெருங்கிய ASEAN நாடுகளில் ஒன்று.

2018-ஆம் ஆண்டு இந்தியா–இந்தோனேஷியா உறவு Comprehensive Strategic Partnership ஆக உயர்த்தப்பட்டது. மோடியின் இந்தப் பயணம் அந்த உறவுக்கு புதிய உயிரூட்டியது. அதன் முக்கிய அம்சங்கள் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, வர்த்தக வளர்ச்சி, முதலீட்டு ஒப்பந்தங்கள், டிஜிட்டல் பொருளாதாரம் – இந்தோனேஷியா இந்த டிஜிட்டல் பணபட்டுவாடா – யுபிஐ வர்த்தகத்தில் சேரும்.

மோடியின் ஆஸ்திரேலியப் பயணம்

 இந்தோனேசியாவைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் பிரதமர் மாண்புமிகு அந்தோனி அல்பானீஸ் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் அவர்கள் 2026 ஜூலை 8 முதல் 10 வரை மெல்போர்ன் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். மெல்போர்னில், பிரதமர் அல்பானீஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் மாண்புமிகு திருமதி சாம் மோஸ்டின் அவர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. 

இந்தப் பயணத்தின் போது, இந்தியா-ஆஸ்திரேலியா சிஇஓ-க்கள் மன்றத்தில் (India-Australia CEOs Forum) பிரதமர் பங்கேற்று, இரு நாடுகளையும் சேர்ந்த முன்னணி வணிகத் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றினார். 

இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் வலுவான தூணாக விளங்கும் இந்திய வம்சாவளியினரின் பெரும் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றினார்.

ஆஸ்ரேலியாவின் மென்போன் நகரின் இந்திய வம்சாவளியினரின்மீட் மோடி - மோடி சந்திப்புஎன்ற கூட்டத்தைப் பார்த்தால் ஆஸ்ரேலியாவின் இந்திய வம்சாவளியினர் மட்டுமின்றி ஆஸ்ரேலியப் பிரஜைகளும் மோடி மேல் கொண்ட அன்பும், அபிமானமும் வெளிப்பட்டதைக் கண்டு இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்.  

‘இந்தியா உதவிக்கரம் நீட்டும்போது, அது கடவுச்சீட்டின் (Passport) நிறத்தைப் பார்ப்பதில்லை. அதனால்தான் இந்தியாவின் மீது உலகிற்கு இருக்கும் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பாரத அரசுஅதாவது "மக்களே மகேசன்" (குடிமக்களை இறைவனாகக் கருதுங்கள்) என்ற தாரக மந்திரத்தின் கொள்கைதான் உலக அரங்கில் பாரதத்தை தலை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது” என்ற மோடியின் பேச்சு அவையின் கரவொலியால் ஆதரவு பெற்றது.

மோடியுடன் ஆஸ்ரேலிய பிரதமர் செல்வி எடுத்துக் கொண்டு தமது தனிப்பட்ட 

அன்பையும், நட்பையும் வெளிப்படுத்தினார். 


அந்த அவையில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களே சான்றுகளாகும். இதை

எழுத்தில் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை



ஆஸ்திரேலியா இந்தியாவின் மிக முக்கியமான QUAD கூட்டாளியாகும்.

மெல்போர்னில் நடைபெற்ற தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பல்வேறு முக்கிய விவகாரங்களில் ஆலோசனை நடத்தினர். அதில் இந்தோ-

பசிபிக் பாதுகாப்பு, கடற்படை ஒத்துழைப்பு, உற்பத்தி பொருள் வினியோகம், கல்வி, மாணவர் பரிமாற்றம், பாதுகாப்புத் தொழில்நுட்பம், வான் வெளி ஒத்துழைப்பு, விளையாட்டு அறிவியல் அகியவைகள் அடங்கும். 


நியூசிலாந்து பயணம் (ஜூலை 10 – 11, 2026)  2 நாட்கள் 


   


                         


பிரதமரின் இந்தப் பயணத்தில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்திற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


ஆக்லாந்தில் உள்ள அரசு இல்லத்தில் மோடிக்கு பாரம்பரிய மவோரி போவிரி 

(Māori pōwhiri) வரவேற்பு நிகழ்வு அளிக்கப்பட்டது.  இது நியூசிலாந்தின் பாரம்பரியம் 

மற்றும் கலாச்சாரத்தின் நெகிழ்ச்சியூட்டும் வரவேறுப்பு நிகழ்ச்சியாகும். 



ஆக்லாந்தில் மக்கள் நிறைந்த அரங்கில் மோடி உரை ஆற்றினார்



ஆக்லாந்தில் பிரதமர் லக்சன் அவர்களுடன் கலந்து கொண்ட இந்தியா - நியூசிலாந்து தொழில்முனைவோர் நிகழ்வில், வணிகத் தலைவர்களிடம் மோடி கூறியது: “இந்தியா ஒரு சந்தை மட்டுமல்ல. இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு ஏவுதளம். வாருங்கள், ஒன்றிணைந்து இந்த பொருளாதாரக் கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வோம்!”

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் 35,000 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இந்திய கடற்படை மற்றும் நியூசிலாந்து பாதுகாப்புப் படைக்கு இடையே பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தம் (Reciprocal Logistics Support Pact) கையெழுத்தானது



பிரதமர் அல்பனீசி  அவர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு (MCG) மோடி சென்றார்.

அதிகப்படியான விளையாட்டு பரிமாற்றங்கள், இளைஞர்களின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை இந்தியா - ஆஸ்திரேலிய நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்பதைக் காட்டவே இந்த கிரிக்கெட் மைதான விஜயமாகும்.

விளையாட்டுத் துறை எப்போதுமே இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே ஒரு வலுவான பாலமாக இருந்து வருகிறது. நடப்பாண்டில், பாரத – நியூசிலாந்து நாடுகளின் விளையாட்டு உறவுகளின் நூற்றாண்டுகள் பூர்த்தியாகிறது. 



‘நியூசிலாந்தின் சுவை’ என்ற தலைப்பில் இந்தியக் கொடி இரு தலைவர்களுக்கும் நடுவே உள்ளது.  

நறுக்கப்பட்ட புதிய பழங்களைக் கொண்டு இந்தியத் தேசியக் கொடி மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கொடியின் மேல் பகுதிக்கு ஆரஞ்சுப் பழங்களும், நடுப்பகுதிக்கு வெள்ளை நிறப் பூக்கள்/பழங்களும் (மத்தியில் அசோக சக்கரத்துடன்), கீழ்ப்பகுதிக்குக் கீவி (Kiwi) பழங்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன.

நியூசிலாந்து நாட்டின் முதன்மைப் பழங்களில் ஒன்றான கீவி பழத்தைக் கொண்டு இந்தியக் கொடியின் பச்சைப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் இணக்கமான உறவை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது.

ஆக்லாந்தில், பிரதமர் லக்சன்  மோடி இருவரும் ஒரு விளையாட்டு உச்சி மாநாட்டில் (Sporting Showcase) கலந்து கொண்டனர். அங்கு பல நவீன விளையாட்டு கண்டுபிடிப்புகள் காட்சிப் படுத்தப் பட்டன.  தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் விளையாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதையும், அதுவே இரு நாடுகளையும் எவ்வாறு மேலும் நெருக்கமாக்குகிறது என்பதையும் இது எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  இரு நாடுகளும் சாதனை நேரத்தில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) நிறைவு செய்தன; தற்போது, அந்த உறவு 'மூலோபாய கூட்டாண்மையாக' (Strategic Partnership) உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக, 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய சமூகத்துடன் சந்திப்பில் மோடி அவர்கள் நியூசிலாந்தில் வாழும் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதை பாராட்டினார்.



மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நிகழ்ந்தவைகளின் படங்களுடன் இக் கட்டுரையைப் பூர்த்தி செய்கிறோம்







முடிவுரை:பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 6 நாள் முத்தரப்புப் பயணம் வெறும் தூதரக சந்திப்பாக இல்லாமல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில் இந்தியாவின் கடல்சார் இறையாண்மையையும், பொருளாதார தன்னாட்சியையும் நிலைநிறுத்தும் ஒரு பெரும் ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. 

ஜெய் ஹோ! மோடிஜி !

Comments