தமிழக ஓட்டர்களே! அண்ணாமலையை முதல்வராக்குங்கள்!


































‘அண்ணாமலையை தமிழக முதல்வராக்குங்கள்!’ என்று நேரிடையாகவே தமிழக ஓட்டர்களுக்கு வாய்மை வேண்டுகோள் விடுப்பது ஒரு நடுநிலைப் பத்திரிகை தர்மத்திற்கு ஏற்புடையதா?’ என்ற கேள்வி எழுவது ஞாயம் தான். ஆனால் தமிழ் நாட்டின் நிலை, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிசய வெற்றி, திமுகவின் தோல்விஅதன் முதல்வர் ஸ்டானினே ஒரு சாதாரண விஜய் வேட்பாளரால் தோல்வி, காங்கிரஸ்விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் கட்சி, அதிமுகவின் பல எம். எல். ஏக்கள் விஜய்க்கு அளிக்கும் ஆதரவு, பல அதிமுக எம் எல் ஏக்கள் மீண்டும் பழனிச்சாமியுடன் சேர்தல், ஐந்து அதிமுக எம் எல் ஏக்கள் விஜய்க்கு ஆதரவாக ராஜினாமா, காலியான பல எம் எல் ஏக்கள் சீட்டுகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல், அண்ணாமலை  பிஜேபி தலைமைப் பீடத்தில் தன்னிலை விளக்கத்திற்குப் பிறகு சுமூகமாக கட்சியிலிருந்து ராஜினாமாஎன்ற பல நிகழ்வுகள் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் உள்ளதால், விஜயால் ஒரு நல் ஆட்சியை அளிக்க முடியாமல் போகும் நிலைதான் ஏற்படும் என்று கணிப்பதும்கருதுவதும் எச்சரிக்கை செய்வதும் அவசியம் என்று வாய்மை நினைப்பதால் தான் இந்த வாய்மையின் வேண்டுகோளை அணுக வேண்டும்.

அதிகமாக உழைக்காமலேயே விஜய் வெற்றி பெற்றதுரஜினியையேதாம் கட்சி ஆரம்பித்திருந்தால் தேர்தலில் ஜெயித்து முதல்வர் ஆகியிருக்கலாமே!’ என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அவரது தர்ம பத்தினி திருமதி லதா அம்மையாரும் ஒரு மக்கள் நல சேவை மையத்தையும் தொடர்ந்துள்ளதான செய்தியும் வலம் வருகிறது.

அண்ணாமலையும் ரஜினி தன்னை அவரது இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்ததை ஏற்காமல் பிஜேபில் சேர்ந்ததற்கு இப்போது வருத்தம் தெரிவிப்பது  அவரது முதிர்ச்சியான ஆராயும் மன நிலைக்கு ஏற்புடையதாகப் படவில்லை. மேலும் நேற்று வரை பிஜேபியின் மும்மொழிக்கொள்கையை ஆதரித்த அண்ணாமலை பிஜேபிலிருந்து விலகிய உடனேயேஇரு மொழிக் கொள்கைதான் தமிழகத்திற்கு ஏற்புடையதுஎன்று மாறுபட்ட திராவிட கொள்கையை முன் மொழிவது மனத்தைச் சங்கடப் படுத்தும் விஷயமாகவே வாய்மை கருதுகிறது.

இந்திய இறையாண்மையுடன் தமிழகம் இணைந்து செழிப்பாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உன்னதமான கொள்கைக்கு இந்த இரு மொழிக் கொள்கை தடைக்கல்லாக இருக்கும் என்ற உண்மையை அண்ணாமலை உணராதது ஆச்சரியமாக உள்ளது.

அண்ணாமலை எதிர் கொள்ள வேண்டிய சக்திகள் பலவாகி உள்ளன: விஜய், திமுக, அதிமுக. பிஜேபிஎன்ற 4 கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை அண்ணாமலை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

விஜயின் மக்கள் ஆதரவு அவ்வளவு எளிதில் சீக்கிரம் குறையாது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் திமுக வழிபோல் மத்திய அரசைப் பகைக்காமல் அதனுடன் இணைக்கமாக இருந்து, நிதி உதவி பெற்று தமிழ் நாட்டிற்கு நல்லது செய்யவே விழைகிறார் விஜய். காங்கிரஸ் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனால் விஜயின் அரசு பாதிக்கப்படாது என்பது இப்போதைய கள நிலவரமாகும். மேலும் இடைத்தேர்தலில் விஜய் பல இடங்களில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.

ஆகையால் அண்ணாமலை விஜயை இப்போதைக்கு எதிர்க்காமல் தான் அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. விஜய்க்கு அண்ணாமலையை விட மக்கள் ஆதரவு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். தமிழக ஓட்டர்கள் விஜயை நம்பித்தான் அவருக்கு பெரு ஆதரவு அளித்து முதல் அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி உள்ளனர். அண்ணாமலைக்கு மக்களிடம் ஆதரவு மிகவும் பரவலாக இருப்பதால், பெற்ற ஓட்டுச் சதவிகிதம் அதிகமானாலும் அவைகள் சீட்டுக்களாக மாறவில்லை என்பது தான் எதார்த்தம்.

அண்ணாமலை அரசியல் களத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணியினரின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அண்ணாமலை உணரவேண்டும். ‘என் பாணி இது; இதை நான் மாற்றிக்க மாட்டேன்என்று அடம் பிடிப்பது ஒரு அரசியல் தலைவனுக்கு புகழையோ, அபரிமிதமான மக்கள் ஆதரவையோ, ஓட்டையோ பெற்றுத்தராது. இதை அண்ணாமலையின் ஒரு தவறாகவோ அல்லது குற்றமாகவோ சொல்லாவிடினும், இவைகளை அரசியல் சாணக்கியமாக தவர்ப்பது நல்லது.

அண்ணாமலை பிஜேபியிலிருந்து விலகியது அவருக்கும், பிஜேபிக்கும் ஒரு பெரும் பின்னடைவாகும். இதில் எள்ளளவும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. அண்ணாமலைக்கு அதிக இழப்பா அல்லது பிஜேபிக்கு அதிக இழப்பா என்று பிரித்துப்பார்ப்பது மிகவும் கடினம்.

அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கும் பொழுது, பிஜேபி அரசியல் கட்சியாக அண்ணாமலையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது/எதிர்க்கப்போகிறது என்பது மிகவும் சிக்கலான கேள்வி.

அதே சமயத்தில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இதை எப்படி கையாளப்போகிறார்கள் என்பதும் கவலை அளிக்கும் விஷயமாகி, அதுவே எதிராளுக்கு சாதகமான சூழ்நிலையையும், ஆதரவையும் மக்களிடையே பெறும் நிலை வராமல் இரு அணிகளும் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தற்போதைய பிஜேபியை அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள்அண்ணாமலையை எதிர்ப்பவர்கள் திராவிட பிஜேபிஎன்று பட்டம் சூட்டி திட்டித் தீர்த்துள்ளார்கள். ‘அண்ணாமலையை ஒருவரும் விமரிசிக்க நாங்கள் விட மாட்டோம்என்ற மன நிலை அண்ணாமலைக்கு நன்மை செய்வதை விட தீமைதான் இதனால் விளையும். அண்ணாமலையின் ஆதரவாளர்களின் அனைத்துச் செயல்களும்  அனைவரையும் அரவணைத்து, பெருமளவில் மக்களின் அன்பையும், ஆதரவுகளையும், ஓட்டுக்களையும் பெற கடும் முயற்சி செய்ய வேண்டும். அந்த மன நிலை வருவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் இங்கு பதியவேண்டும்.

ஆலோசனைகள், விளக்கங்கள், எதிர்ப்புகள்அத்தனையையும் நேர்மையான மொழிகளிலேயே அண்ணாமலை ஆதரவாளர்கள் உபயோகித்து அண்ணாமலையின் ஆதரவு வட்டத்தை நீளச் செய்து, அவருக்கு மக்களின் ஓட்டைப் பெற உதவ வேண்டும்.

கத்தியைத் தீட்டாதே புத்தியை தீட்டுஎன்பது தான் அண்ணாமலை ஆதரவாளர்கள்பிஜேபி கட்சித் தலைவர்கள் ஆகியவர்களுக்கு வாய்மையின் தாழ்மையான வேண்டுகோள்.

அண்ணாமலையை முதல்வர் இருக்கையில் அமரச்செய்யும் இலக்கை அடைய அனைவரும் உறுதி பூண்டு, அரசியல் களத்தில் உழைக்க வாய்மை வேண்டுகிறது.

ஜெய் ஹோ அண்ணாமலை !

 

Comments

Popular posts from this blog

வள்ளுவம் 4 - குலம்

கண்ணகியின் மதுரை எரித்த பிரம்மாண்ட பிழை

குரு அஷ்டகம் ஆக்கம்: ஆதி சங்கர பகவத் பாதாள்