காயத்ரி ஜெயந்தி – வேத மாதாவின் அவதார தினம் – ஜூன் 25, 2026
காயத்ரி ஜெயந்தி
என்பது இந்து சமயத்தில் மிக உயர்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித நாளாகும்.
வேதங்களின் தாயாகப் போற்றப்படும் காயத்ரி தேவியின் அவதார தினமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மனித மனத்தை ஒளிமயமாக்கி, அறிவை வளர்த்து, வாழ்க்கையை
உயர்ந்த பாதைக்கு வழிநடத்தும் தெய்வீக சக்தியின் நினைவுநாளே காயத்ரி ஜெயந்தியாகும்.
காயத்ரி தேவி யார்?
காயத்ரி தேவி வேத
மாதா (வேதங்களின் தாய்) என்றும், சாவித்திரி என்றும், சரஸ்வதியின் ஞான சக்தி வடிவம் என்றும் போற்றப்படுகிறார். பிரம்மதேவரின்
சக்தியாகவும், பிரபஞ்சத்தை இயக்கும் பரம அறிவின் வடிவமாகவும்
புராணங்கள் அவரை வர்ணிக்கின்றன.
காயத்ரி தேவியின்
உருவம் பொதுவாக ஐந்து முகங்களுடன் சித்தரிக்கப்படுகிறது. இந்த ஐந்து முகங்கள் மனிதனின்
ஐந்து கோசங்களையும் (அன்னமய, பிராணமய, மனோமய,
விஞ்ஞானமய, ஆனந்தமய) குறிக்கின்றன. மேலும்,
ஐந்து வேத உண்மைகள், ஐந்து பிராண சக்திகள் மற்றும் ஐந்து திசைகளிலும்
பரவி நிற்கும் தெய்வீக அறிவையும் குறிக்கின்றன.
உலகிலேயே மிகப் பழமையானதும்,
மிகவும் போற்றப்படும் வேத மந்திரங்களுள் முதன்மையானது காயத்ரி மந்திரமாகும்.
"ஓம் பூர் புவஸ் ஸ்வ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்"
இந்த மந்திரம் ருக்
வேதத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள்:
"எல்லா உலகங்களையும்
ஒளியால் நிரப்பும் பரம்பொருளின் தெய்வீக பிரகாசத்தை நாம் தியானிக்கிறோம். அந்தப் பரம
ஒளி எங்கள் புத்தியை நல்வழிப்படுத்தட்டும்."
இந்த மந்திரம் வெறும்
வேண்டுதல் அல்ல; மனித மனதை அறியாமையிலிருந்து ஞானத்திற்கு
அழைத்துச் செல்லும் ஆன்மீகப் பயிற்சியாகும்.
காயத்ரி
ஜெயந்தியின் தத்துவம்
காயத்ரி ஜெயந்தி
என்பது ஒரு மத விழா மட்டுமல்ல. அது அறிவின் வெற்றியை கொண்டாடும் நாளாகும். அறியாமையை அகற்றி அறிவை வளர்ப்பது. எதிர்மறை
எண்ணங்களை நீக்கி நேர்மறை சிந்தனையை வளர்ப்பது. மன அமைதியையும்
உள்ளார்ந்த தூய்மையையும் பெறுவது. உலக நலனுக்காக பிரார்த்தனை
செய்வது - என்பன இந்நாளின் முக்கிய நோக்கங்களாகும்.
காயத்ரி
ஜெயந்தி அனுஷ்டானங்கள்:
இந்த நாளில் பக்தர்கள்
அதிகாலையில் நீராடி காயத்ரி தேவியை வழிபடுகின்றனர். காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபிக்கின்றனர். வேத பாராயணம் செய்கின்றனர். யாகம் மற்றும் ஹோமங்களில் பங்கேற்கின்றனர். அன்னதானம், கல்வி
உதவி போன்ற சேவைகளில் ஈடுபடுகின்றனர். குழந்தைகளுக்கு
வேத பாரம்பரியத்தை எடுத்துரைக்கின்றனர்.
இன்றைய அறிவியல்
உலகிலும் மன ஒருமுகப்படுத்தல், தியானம், நேர்மறை
சிந்தனை ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. காயத்ரி மந்திர ஜபம் இந்த
மூன்றையும் வளர்க்கும் ஒரு ஆன்மீக சாதனையாக விளங்குகிறது.
காயத்ரி ஜெயந்தி
நமக்கு ஒரு முக்கியமான செய்தியை நினைவூட்டுகிறது: மனித வாழ்க்கையின் உண்மையான முன்னேற்றம்
செல்வத்திலும் பதவியிலும் அல்ல; அறிவிலும் விழிப்புணர்விலும் உள்ளது.
காயத்ரி தேவியின் ஐந்து முகங்கள் – ஒரு குறியீட்டு விளக்கம்:
புராணங்களிலும் ஆகமங்களிலும்
காயத்ரி தேவி ஐந்து முகங்களுடன் சித்தரிக்கப்படுகிறார். அவை மனிதனின் ஆன்மீக வளர்ச்சியின்
ஐந்து நிலைகளையும் குறிக்கின்றன.
1. முத்து
போன்ற வெண்மை முகம்
தூய்மை மற்றும் சத்தியம்
- மனத் தூய்மை, ஒழுக்கம்,
நேர்மை ஆகியவற்றின் அடையாளம். உண்மையை நாடும் மனநிலையை உருவாக்குகிறது.
2. பவளம் போன்ற சிவப்பு
முகம்
உற்சாகம் மற்றும்
செயல் திறன் - ஆற்றல், தைரியம்,
முயற்சி, வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றி பெறும்
மனவலிமை ஆகியவற்றைக் குறிக்கிறது.
3. பொன் நிற முகம்
செழிப்பு மற்றும்
அறிவு - உயர்ந்த ஞானம், நல்வாழ்வு,
வளமை, கலாச்சார வளர்ச்சி ஆகியவற்றின் சின்னமாக
விளங்குகிறது.
4. நீல நிற முகம்
அளவற்ற பிரபஞ்சம் - வானம் போல எல்லையற்ற அறிவையும், ஆழ்ந்த
தியான நிலையையும் குறிக்கிறது.
5. வெண்சுடர் முகம்
பரம்பொருள் உணர்வு
- மனிதனை இறையுணர்விற்கும் ஆன்மிக விடுதலைக்கும் வழிநடத்தும்
உயர்ந்த ஞானத்தின் குறியீடு.
காயத்ரி ஜெயந்தி
நமக்கு கூறும் மாபெரும் உண்மை: "செல்வத்தை விட அறிவு உயர்ந்தது; அறிவை
விட ஞானம் உயர்ந்தது; ஞானத்தை விட தெய்வீக விழிப்புணர்வு உயர்ந்தது."
இந்த நாளில் காயத்ரி
மந்திரத்தை பக்தியுடன் ஜபிப்பதன் மூலம் மன அமைதி, தெளிவான
சிந்தனை, நம்பிக்கை, நேர்மறை
ஆற்றல் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வேத மாதாவாகிய காயத்ரி தேவியின் அருள் வாய்மை
அன்பர்கள் அனைவருக்கும் கிட்டி, நல்ல
சிந்தனை, நல்ல அறிவு, நல்ல
செயல்கள் மற்றும் ஆன்மீக உயர்வு கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திப்போமாக.
காயத்திரி மந்திர
ஜபம் நீங்கள் செல்லும் பாதையினை ஒளியூட்டி, உங்கள் வாழ்வை சீரும் சிறப்புமாக இருக்க
உதவும். ஓம் காயந்திரி தேவியே நம:



Comments