Posts

ஹிந்துப் பத்திரிகை செங்கோல் விவகாரத்தில் தான் வெளியிட்ட செய்தியையே மறுக்கிறது.

Image
  ஹிந்து ராம் ஒன்று சொல்ல அதை ஹிந்து பத்திரிகையிலிருந்து சமீபத்தில் விலகிய மாலினி பார்த்தசாரதியோ ராம் சொல்வது தவறு என்று சொல்கிறார் . இது தான் இப்போதைய ஹிந்துவின் நிலை . நேர்மைக்குப் பேர்போன ஹிந்துப் பத்திரிகை இப்போது மோடியின் மீதுள்ள வெறுப்பால் உண்மைக்குப் புறம்பான போக்கைக் கடைப்பிடிக்கிறது . ஹிந்து பத்திரிகை தன் லோகோவின் தத்துவத்தை இப்படிப் பறைசாற்றுகிறது : காமதேனு மங்களத்தையும் , சூரியன் உயிர்ப்புள்ள அறிவையும் பலத்தையும் ,   இந்தியா தேசத்தாயையும் , யானை பலம் - சக்தி ஆகியவைகளையும் , இந்திய தேசப்படத்தின் மையத்தில் உள்ள சங்கு மக்கள் குரலையும் , தாமரை மலர் தூய்மை – சுதந்திரம் ஆகியவைகளையும் , புற்கள் பல்நோக்கு மற்றும் செழுமை ஆகியவைகளையும் குறிக்கும் . ஆனால் சமீபகாலமாக அதுவும் குறிப்பாக மோடி பிரதம மந்திரியாகப் பதவி ஏற்ற உடன் ஹிந்துவின் மேற்சொன்ன கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் நேர்மை தவறி – ஏன் பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வரு...

புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா – 28 - 05 -2023 – ஞாயிற்றுக் கிழமை

Image
நமது பாரதப் பிரதமரால் 888 லோக் சபா உறுப்பினர்கள் , 384 ராஜ்ய சபா உறுப்பினர்கள் மிகவும் சவுகரியமாக அமரும் விதமாக அந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது . மேலும் அதில் பலவிதமான வசதிகள் உள்ளன . மேலும் நமது பாரதிய கலாச்சாரத்தையும் , பாரத தேசத்து பல மாகாணங்களில் கலைப் பொருட்களையும் அங்கு காட்சிப் படுத்தி உள்ளது . இந்த உன்னதமான உயர்ந்த கட்டுமானம் , கலை நயம் கொண்டுள்ள இந்த கட்டிட்த்தை மோடி அவர்கள் 144 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணித்தார் . அதில் உள்ள சில முக்கிய கலைப் பொருட்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .  -     ஆசிரியர் .   

மகாவிஷ்ணு கூர்ம அவதாரம்

Image
  ஆனி மாதம் தேவர்களின் மாலைப் பொழுதாகவும் , உத்திராயணப் புண்ணிய காலத்தில் கடைசி மாதமாகவும் கருதப்படுகிறது. வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் துவக்க மாதம் ஆனி மாதமாகும். மனத்திற்கும் , உடலுக்கும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுதலை தந்து , இதம் தரும் இந்த ஆனி மாதம் சிவன் - விஷ்ணு  இருவரையும் வழிபட ஏற்ற மாதமாகும். இந்த மாதத்தில் தான் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்துள்ளார். வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் சிவா – விஷ்ணுவின் அருள்   கிட்டப் பிரார்த்திக்கிறோம் .                             

கர்நாடகாவில் காங்கிரஸின் வரலாற்று வெற்றி

Image
காங்கிரஸ் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்த முள்ள 224 தொகுதிகளில் தனித்து நின்று 135 சீட்டுக்கள் – அதாவது ஆட்சி அமைக்க வெற்றி பெற வேண்டிய 113 சீட்டுக்களை விட 22 சீட்டுக்கள் வென்று அசுர வெற்றி பெற்றுள்ளது . கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற 80 சீட்டுக்களை விட 55 சீட்டுக்கள் அதிகம் பெற்று பிஜேபி – ஜேடிஎஸ் இரண்டு கட்சிகளையும் மக்கள் தோற்கடித்து விட்டார்கள் பிஜேபி இந்தத் தேர்தலில் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தது .  மோடி முழு மூச்சுடன் தேர்தல் பிரசாரம் செய்தார் . அமித் ஷா – நட்டா – பல மத்திய அரசு மந்திரிகள் – பிஜேபி மாநில முதல்வர்கள் – தமிழ் நாட்டு பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை என்று ஒரு பெரும் பட்டாளமே தேர்தல் பிரசார களத்தில் மும்முரமாக இயங்கியது . பிரசாரத்தில் எந்த தொய்வையோ , குறையையோ காணமுடியாத அளவிற்கு பிஜேபி கட்சியின் செயல்பாடு இருந்தது . இவ்வளவு முயன்று தோல்வி கண்டாலும் , வெறும் 66 சீட்டுக்களே – காங்கிரஸ் பெற்ற சீட்டுக்களை ஒப்பிடும் போது இந்த சீட்டுக்கள் பாதிக்கும் 3 சீட்டுக்கள் குறைவாகவே பெற்றது அதிர்ச்சித் தோல்வி என்பதில் எந்தவித ஐயமும் இல்லை தான் ....