Posts

47 ஹெக்டர் பரப்பளவு - 108 தூண்கள் - உஜ்ஜயினி மகாகாளேஷ்வர் கோயில் சிறப்பம்சங்கள்!

Image
  மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது ஆன்மீக நகரமான உஜ்ஜயினியில் உள்ளது ,  மகாகாளேஷ்வர் கோயில். ரூ. 316  கோடி ரூபாயில் ‘ஸ்ரீமஹாகால் லோக்’ என அழைக்கப்படும் வழித்தடத்திற்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ,  அதனை பிரதமர் மோடி  அக்டோபர்  11 ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.  நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் வடக்கு நோக்கி உள்ள நிலையில் , உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால் , இக்கோயிலின் மூல வரின் கருவறை மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்டியளிக்கிறார். மஹாகால் லோக் திட்டத்தின் சிறப்பம்சங்கள்: வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருத்தலத்திற்கு உலக அளவிலான நவீன வசதிகளை வழங்குவதற்காகவும் , பக்தர்களின் வருகையை இர...

ஹிந்து மதம் – மாதமெல்லாம் பண்டிகைகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்

Image
  ஐப்பசி மாதத்தில் ஹிந்து மதத்தினர் கொண்டாட இருக்கும் பண்டிகைகளின் பட்டியல் : 1.     திபாவளி – 24 – 10 – 2022 – திங்கட் கிழமை – ஐப்பசி – 7- ம் நாள் 2.    கந்த சஷ்டி விரதம் & சூர சம்ஹாரம் – 25 – 10 – 2022 – செவ்வாய்க் கிழமை தொடங்கி சூர சம்ஹாரம் – 30 – 10 2022 – ஞாயிற்றுக் கிழமை அன்று ஆறு நாட்கள் கொண்டாட்டம் முடிகிறது . – ஐப்பசி – 8- ம் நாளிலிருந்து 13- ம் நாள் வரை . 3.    சிவ பிரானின் லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் – 08 – 11 – 2022 – செவ்வாய்க் கிழமை – ஐப்பசி – 22- ம் நாள் . 4.    மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாள் விழா - 1037- வது சதய விழா - 03 நவம்பர் 2022 – 17 ஐப்பசி 2022. ஹிந்து மதம் தூய வாழ்வை – சந்தோஷ வாழ்வை – அன்பு வாழ்வை – அற வாழ்வை - ஆன்மீக வாழ்வை – தார்மீக வாழ்வை ஹிந்துக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வலியுறுத்தும் விதமாகப் பல பண்டிகைகள் , திருவிழாக்கள் , கலாச்சார விளக்க உபன்நியாசங்கள் என்று நல் வழிப்படுத்தும் உன்னத மதம் . அந்த மதத்தில் பிறந்ததற...

சிலைகளால் சீரழியும் தமிழகம்

Image
  பழம் தமிழ் நாட்டில் வீதியிலே சிலைகள் வைக்கும் பழக்கம் இல்லை . கோயிலில் வழிபடு தெய்வங்களின் சிலைகளைத் தான் பிரிதிஷ்டை செய்து வழிபடும் பழக்கம் தான் தமிழ் நாட்டில் இருந்துள்ளது . கோயிலைக் கட்ட உதவிய மன்னர்களின் சிலை ஒன்று கோயில் வளாகத்தில் ஓரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் . அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை . அது ஒரு சரித்திரச் சான்றுக்காகவே நிருவப்பட்டதாகும் . தெய்வ சன்னிதானத்தில் மன்னர்களும் தங்களை முன்னிலைப்படுத்த விரும்புவதில்லை என்பது உண்மையாகும் . இன்னும் சொல்லப்போனால் மன்னர்களின் இருப்பிடங்களும் சாதாரணமானவையாகவே இருந்திருக்க வேண்டும் . ஏனென்றால் வடக்கே அரசர்களின் அரண்மனைகள் போல் இங்கே தெற்கில் மன்னர்களுக்கு அரண்மனைகள் பிரம்மாண்டமாக்க் கட்ட படவில்லை என்பதையும் இந்த சமயத்தில் வாசகர்கள் உணர வேண்டும் . மேலும் பக்தி மார்க்கத்தில் திளைத்த சைவம் தழைக்கச் செய்த நாயன்மார்கள் , ஆழ்வார்கள் , மத ஆச்சரியர்களான அத்வைதம் போதித்த ஆதி சங்கரர் , வசிஷ்டாத்வைத சிந்தாந்த குரு ராமானுஜர் , த்வைத மத போதகர் மத்துவாச்...