Posts

ஹோலி பண்டிகை – வெள்ளிக் கிழமை 18 – 03 – 2022

Image
  ஹோலி பண்டிகை என்பது ஒரு இந்து சமய விழாவாகும் . பொதுவாக இந்தப் பண்டிகை வட இந்தியாவில் அதிகமாகக் கொண்டாடப்பட்டாலும் , இப்போது இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது . இந்த விழா வசந்த காலத்தில் 2 நாள்கள் கொண்டாடப்படுகிறது ஹோலி பண்டிகையின் முதல் நாளில் ஹோலிகா தஹான் அல்லது சோட்டி ஹோலி கொண்டாடப் படுகிறது .   இரண்டாவது நாள் அன்று துலண்டி / ரங்காலி ஹோலி விழா கொண்டாடப் படுகிறது .   பகவான் கிருஷ்ணா் மற்றும் ராதை ஆகியோாின் அன்பை மக்கள் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றனா் .   பங்குனி மாதத்தில் வரும் பௌா்ணமி நாள் அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது. இது ஒரு வசந்த கால விழா என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை வண்ணங்களின் விழா என்றும் அழைக்கப்படுகிறது . அன்று மக்கள் ஒருவருக்கு ஒருவா் பல வண்ணப் பொடிகளை பூசியும் , ஒருவா் மீது ஒருவ ர் வண்ணங்கள் கலந்த தண்ணீரை   பீச்சி யும் மகிழ்வா் . ஹோலி பண்டிகையில் மிகவும் சுவையான குஜியா என்ற உணவையும் , பாங் என்ற பானத்தையும் சமைத்து ஒருவருக்கு ஒருவா் பகிா்ந்து உண...

காரடையான் நோன்பு - 14 – 03 – 2022 திங்கட் கிழமை

Image
  மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து , பங்குனி மாதம் துவங்கும் வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படும். கார் காலத்தின் முதல் பருவத்தில் விளைந்த நெல்லை குத்தி கிடைத்த அரிசிமாவில் இனிப்பு , காராமணி கலந்து அடை தயாரிப்பதே காரடை ஆகும். இதை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு ஆகும். “உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன் , ஒருக்காலும் என்னைவிட்டு என்கணவர் பிரியாதிருக்க வேண்டும்“என்று சொல்லி வழிபடவேண்டும். நல்ல நேரம் பார்த்து , பெண்கள் மாங்கல்ய கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். மறுநாள் இரண்டு அடையை பசுமாட்டிற்க்குக்கொடுக்க வேண்டும்.   ராமாயணத்தை   படித்தால் , அது படிக்கப்படும் இடத்திற்கு ஆஞ்சனேயர் வந்து விடுவார் என்பதுபோல் , சாவித்திரியின் சரித்திரத்தை கேட்டாலோ – படித்தாலோ அந்த இடத்தில் சாவித்திரிதேவியே முன் வந்து ஆசி வழங்குவாள்.   தீர்க்க சுமங்கலி பவ என்று யமனே ஆசி வழங்குவார்.

விஷ்ணு சகஸ்ரநாமம் அர்தத்த்துடன்

Image
  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் ஹைபர் டெக்ஸ்ட் பண்ணிய பொருளடக்கம் பக்கம் இஃது. 👇 வரிசையாகத் தலைப்புகளும் , எண் வரிசையில் சுலோகங்களின் முதல் வார்த்தையும் தரப்பட்டிருக்கிறது. அந்தந்தத் தலைப்புகள் அல்லது சுலோகத்தின் முதல் வார்த்தையில் அழுத்தினால் நேரே அந்தச் சுலோகத்தின் அர்த்தம் தந்திருக்கும் பகுதியைத் திறந்துவிடும்.   இந்தப் பக்கத்தை வைத்துக்கொண்டால் முழு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் சுலோகங்களையும் வரிசையாகப் பொருளோடு படித்துவிட முடியும்.   https://sribhagavannama.blogspot.com/2021/12/blog-post_79.html?m=1

சமத்துவ சிலையாக பிரமாண்ட ராமானுஜர் ஐம்பொன் சிலை திறப்பு

Image
  தெ லு ங்கானா மாநிலம் ஐதராபாத் முச்சிந்தலில் ஸ்ரீராமானுஜருக்கு ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி பிப்ரவரி 5- ம் தேதி 2022 பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை நன்நாளில் திறந்து வைத்தார். 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு 500 டன் எடையில் திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.  ‘ ஓம் நமோ நாராயணா’ என்ற 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் ராமானுஜர். வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலை நாட்டியவர். தீண்டாமையை ஒழிக்க வித்திட்டவர். இவர் வாழ்ந்து முடிந்து 1000 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி , அவருக்கு தெலங்கானா மாநிலம் , ஐதராபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ராமாநகரில் இந்த  ஐம்பொன்னாலான சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் சிறப்பு இங்கே பட்டியல் இடம்பட்டுள்ளது .   * இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது .   * சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப...

16 -2 – 2022 புதன் கிழமை – மாசி மக திருவிழா

Image
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால்கொண்டாடப்படும் ஒரு சிறப்பான திருவிழா நாளாகும். அந்த நன் நாளில் கடல் – ஆறு – குளம் ஆகியவைகளில் புனித நீராடி , பித்ருக்களுக்கு தர்பணம் செய்து வழிபடுவது சிறப்பாகும் . மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை "பிதுர் மகா ஸ்நானம்" என்கிறது சாஸ்திரம். மக நட்சத்திரத்தை "பித்ருதேவ நட்சத்திரம்" என்று அழைப்பார்கள். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன் , பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும் , மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரி யா தை மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். இந்தியாவில் கும்பகோணத்தில் மாசி மகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பிரளயத்துக்குப் பிறகு , உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால் கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்பர். ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும் பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழ...

 தமிழக அரசின் அடாத செயல் – நெஞ்சு பொறுக்குதில்லையே !

Image
  இந்த சோக சம்பவத்தின் முழு விவரம் இதோ : “ திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணியை சேர்ந்தவர் குப்புசாமி ( 36). இவர் வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன் ( 65) அதிமுகவின் 15 ஆவது வட்ட நகரதுணை செயலாளராகவும் மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். திருத்தணி நகரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டக கடை எண் 2 இல் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. அதிமுக வட்ட துணை செயலாளராக பதவி வகிக்கும் நந்தன் , பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோது , புளி  இருந்த பாக்கெட்டில் இறந்து போன பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த புளியில் பல்லி இறந்து கிடந்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு கடை ஊழியர் சரவணனிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் நந்தனுக்கு முறையான பதில் அளிக்காமலும் , அலட்சியப் படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இருந்த செய்தியாளர்கள் முதியவர் நந்தனிடம் விசாரித்த தகவலின் அடிப்படையில் செய்திகள் ஒளிபரப்பானது....