Posts

05-08-2019 - திங்கட் கிழமை - இந்திய சரித்திரத்தின் பொன்னான நாள்

Image
05-08-2019 – திங்கட் கிழமை – இந்த நாள் இந்திய சரித்திரத்தில் ஒரு பொன்னான நாளாகும். அன்று தான் ஆர்ட்டிகிள் 370 இந்திய அரசியல் சட்டத்திலிருந்து நீர்த்துப் போகச் செய்த அற்புதத் திருநாளாகும். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரின் தனித் தன்மை – தனி அரசியல் சட்டம் - தனிக் கொடி – என்பது ஒரு தற்காலிக நிலை என்று சொல்லி இந்திய மக்களை ஏமாற்றிய காங்கிரஸ் – மற்றும் சில எதிர்க்கட்சிகளின் கபட நாடகத்தை அசுர வேகத்தில் மோடி – அமித்ஷா ஆகியவர்கள் பார்லிமெண்ட் – ராஜ்ய சபா ஆகிய இரண்டு சபைகளிலும் இரு தினங்களில் – 5 & 6 ஆகஸ்ட் 2019 – நீண்ட நேரம் விவாதித்து, 2/3 அங்கத்தினர்களின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றி வெற்றி வாகை சூடி உள்ளார்கள். இது சாதாரண சாதனை இல்லை. 30-07-2019 அன்று முத்தலாக் தடைச் சட்டம் இரு சபைகளிலும் நிறைவேற்றி சாதனை படைத்த மோடி அரசு அதே வேகத்தில் பி.ஜே.பியின் நெடுநாளைய கனவான 370 நீக்கத்தையும் நிறைவேற்றி எதிர்கட்சிகளை நிலை குலைய வைத்துள்ளது. முதலில் ராஜ்ய சபாவில் ஆகஸ்ட் 5-ம் தேதியில் 370 & 35 A ஷரத்துக்கள் ரத்தான மசோதாவிற்கு 125 பேர்கள் ஆதரவாகவும், 61 பேர்கள் எத...

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – 23-08-2019 – வெள்ளிக் கிழமை

Image
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – 23-08-2019 – வெள்ளிக் கிழமை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி தினத்தன்று கிருஷ்ண ஜெயந்தி எனும் கிருஷ்ணர் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகின்றது .  இந்தாண்டு ஆகஸ்ட் 23 ம் தேதி கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதி வருவதால் , அன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனும் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்பட் உள்ளது .  அந்த புனிதமான நாளில் கிருஷ்ணரின் காயத்திரி மந்திரம் ஜெபித்தால் அபிரிமிதமான பலன் உண்டு. கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் : ஓம் தேவகிநந்தனாய வித்மஹே ,  வாசுதேவாய தீமஹி ,  தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத் .  கிருஷ்ணன் அருளிய கீதை ஒரு அற்புதமான புனித இந்து தர்மத்தைப்  போதிக்கும் பக்தி நூலாகும். அவரது பிறந்த நாளில் அந்த நூலை  அனைத்து இந்து மதத்தினரும் பாராயணம் செய்ய முடிவெடுத்து தினமும் சில ஸ்லோகங்களை பக்தியுடன் படிக்க வேண்டும்.  அதன் பொருளை அறிந்து ஓதுவது இன்னும் சாலச் சிறந்ததாகும். கீதை  வேதத்திற்கு ஈடாகப...

விநாயகர் சதுர்த்தி – 02-09-2019 – புதன் கிழமை

Image
விநாயகர் சதுர்த்தி – 02-09-2019 – புதன் கிழமை விக்னம் போக்கும் விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 2-ம் தேதி புதன் கிழமை வருகிறது. இந்தியா முழுவதும் இந்த விநாயகர் பிறந்த தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தத் தருணத்தில் மஹா கவி பாரதியின் கவிதையை நாம் இங்கு நினவு கொள்வோமாக: புகழ்வோம் கணபதி நின் பொற்கழலை நாளும் திகழ்வோம்   பெருங்கீர்த்தி சேர்ந்தே – இகழ்வோமே புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்; ஈங்கிதுகாண் வல்லபைகோன் தந்த வரம். கணபதியின் வரம் பெற்ற நாம் இந்து மதத்தை இகழும் புல்லரக்கப் பாதகரின் பொய்கள் அனைத்தையும் இகழ்ந்து நமது சனாதன மதமான ஹிந்து மதத்தையும், அதன் உன்னதமான சடங்குகளையும் முறைப்படி அனுசரித்து, வீட்டையும் நாட்டையும் நலம் பெறச் செய்வது அந்த வல்லபைகோன் நமக்குத் தந்த வரமாகும்.  வீடும், நாடும், நாமும் செழிக்க கணநாதனின் பாதங்களை நினைத்து வணங்குகுவோம் வாரீர். 

கர்நாடக அரசியல் நாடகம்

Image
கர்நாடகாவின் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவிற்கு முன் அதன் அசெம்பளியின் கட்சிகளின் நிலவரம் இது தான்: மொத்த அசெம்பளி மெம்பர்கள்: 224. அதில் பி.ஜே.பி. 105, காங்கிரஸ் 79, ஜேடிஎஸ் 37, பி.எஸ்.பி 1, மற்றவர்கள் 2. காங்கிரசும் – ஜேடிஎஸ் இணைந்து பிஜேபியை ஆட்சி அமைக்க வரவிடாமல் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரினாலும், அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற நிலையில் பிஜேபியின் எடியுரப்பாவை முதன் மந்திரியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்திரவிட்டார். அதை காங்கிரஸ் – ஜேடிஎஸ். எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை இரவோடு இரவாக நாடி, உச்ச நீதிமன்றமும் இன்னும் 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்திரவிட்டவுடன், எடியுரப்பா சட்ட சபையில் ஒரு நீண்ட உரை நிகழ்த்தி நம்பிக்கை ஓட்டு எடுப்பதற்கு முன்பாகவே தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதன் பிறகு காங்கிரஸ் – ஜேடிஎஸ். கூட்டணி ஆட்சி எச்.டி.குமாரசாமி முதல்வர் – ஜி. பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். ஆனால் கூட்டணியில் ஒற்றுமை இல்லை. சித்தாராமையாவை காங்கிரஸ் ஒரங்கட்ட நினைப்பதாக ...

சந்திரயான் 2 – பாரத தேச இஸ்ரோவின் விண்ணுயரும் அபார சாதனை

Image
ஜூலை 22 – திங்கட்கிழமை – மதியம் 2.43 – என்பது இந்தியாவின் விண்வெளி ஆய்வின் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். அன்று தான் சந்திரனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி. மாக் 3 – எம்1 ராக்கெட் ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஸ்தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து சந்திரயான் – 2 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான் – 2 விண்கலத்தின் மொத்த எடை 3850 கிலோ. அது 23 நாட்கள் குறைந்த பட்சமாக 170 கி.மீ. தூரத்திலும், அதிக பட்சமாக 39,120 கி.மீ. தூரத்திலும் புவி வட்டப்பாதையில் சுற்றி வரும். பின் நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு அந்த சந்திரயான் விண்கலம் மாறும். நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் சந்திரயான் – 2 விண்கலம் இருக்கும் போது, அதிலிருந்து ‘லேண்டர்’ கருவி தனியே பிரிந்து, நிலவை நோக்கிச் செல்லும். அப்போது மணிக்கு 6,000 கி.மீ. வேகத்தில் செல்லும். தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 48-வது நாளில், புவியிலிருந்து 3.84 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள நிலவின் தென் துருவ பகுதியில் ...

மோடியின் குரு பூர்ணிமாவில் குரு வந்தனம் – 16-07-2019

Image
மோடியின் குரு பூர்ணிமாவில் குரு வந்தனம் – 16-07-2019 த்துவைத மத உடுப்பி பேஜாவர் மட பீடாபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வேசா தீர்த்த ஸ்வாமிகளை டெல்லியில் உள்ள தமது இல்லத்திற்கு வரவழைத்து தமது குரு வந்தனத்தைச் செலுத்தி உள்ளார் பாதரப் பிரதமர் மோடி அவர்கள். அப்போது இரண்டு போட்டோப் படங்களை வெளியிட்டு, தமது டிவிட்டரில் இப்படி பதிவு செய்துள்ளார்: “குரு பூர்ணிமா என்பது ஒரு சிறப்பு தினம். அந்த சிறப்பு தினம் எனக்கு மேலும் சிறப்பாக அமைந்து விட்டது. இந்தப் புனிதமான குருபூர்ணிமா நாளில், ஸ்ரீ விஸ்வேஸ்வ தீர்த்த ஸ்வாமிகளுடன் நேரம் செலவிட்டதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். அவரின் அமுத மொழிகளையும், கருத்துக்களையும் கேட்டு அறிந்தது ஒரு மிகவும் பவ்வியமான அனுபவங்கள்’ வியாச பூர்ணிமா – புத்த பூர்ணிமா என்ற இந்த புனிதமான நாளில் மோடி அவர்கள் பாரத தேசத்தின் அனைத்து மக்களுக்கும் மேலும் மேலும் பல நன்மைகள் செய்து பரிபூர்ணமான அமைதியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த ஆண்டவன் அவருக்கு அனைத்து ஆசிகளையும் அருள வேண்டுவோமாக. 

குரு பூர்ணிமா – 16-07-2019 & புத்த பூர்ணிமா – 16-07-2019

Image
குரு பூர்ணிமா – 16-07-2019 குரு பூர்ணிமா என்பது வியாச பூஜையைக் குறிக்கும். அந்த புன்னிய நாள் இந்த வருடம் 16-07-2019 செவ்வாய்க்கிழமை வந்துள்ளது. அந்த நாள் சாந்திரமானப்படி ஆஷாட பெளர்ணமி அன்று வரும். இந்த வருடத்தில் சந்திர கிரஹணமும் சேர்ந்து அந்த வியாசர் பிறந்த நன் நாளில் வந்துள்ளது, வெகு சிறப்பு என்று சொல்லப்படுகிறது. குரு என்ற சொல்லில் கு என்ற எழுத்திற்கு இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்ற எழுத்திற்கு போக்குபவர் என்றும் சம்ஸ்கிரதத்தில் அர்த்தம் சொல்வார்கள். ஆகையால், குருவையும், குருவுக்குக் குருவான மஹா குரு வியாசரையும் வணங்கினால் நமது இருளான அறியாமை அழிந்து, பகவான் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த நன் நாளில் ஒவ்வொரு இந்துவும் கல்விக்கண்களைத் திறந்த தமது குருவை நினைத்து வணங்குவதைக் கடமையாக உபதேசித்துள்ளனர். வியாசர் இந்து மதத்திற்கு மஹா குருவாக – மூல புருஷராக விளங்குகிறார். மஹாபாரத்தை எழுதிய வியாசர் கிருஷ்ண த்வைபாயண வியாசர் என்று புகழப்படுகிறார். ரிஷி பரசாரவிற்கும், அவரது மனைவி மீனவ குலத்தைச் சார்ந்த சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவராவார். குலத்திற்கும் குருஸ்தானத்த...