‘தொட்டதெல்லாம் பொன்னாக்கும் ஜெய் அமித் ஷா’
Wire என்பது தீவிரமாக இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு இ-பத்திரிகை. அதன் சில கட்டுரைகள் நேர்மைக்கும், உண்மைக்கும் மதிப்பளிக்காமல் பத்திரிகை சுதந்திரம் - அரசியல் கொள்கைகள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தாக்கும் ஒரு மூன்றாம் தர – நான்காம் தர பத்திரிகை – மஞ்சள் பத்திரிகை ரகம் என்று கூடச் சொல்லாம். இதற்கு அதன் பல கட்டுரைகளை ஆதாரமாகக் காட்ட முடியும். ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கும் ஜெய் அமித் ஷா’ என்ற தலைப்பில் ரோஹினி சிங் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். இந்த ஆங்கிலக் கட்டுரையின் முழுமையான பதிப்பை இந்தத் தொடர்பை கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். அதில் ஜெய் அமித் ஷாவின் இரண்டு கம்பனிகளான – Temple Enterprise Private Ltd. & Kusum Finservice – இரண்டும் ‘மோடி பிரதமராவதற்குப் பிறகும் ஜெய் அமித் ஷாவின் தந்தையான பி.ஜே.பி.யின் பிரிசிடெண்ட் அமித் ஷா தலைமைப்பொறுப் பேற்றபிறகும் – அதன் விற்பனை பல் மடங்கு அதிகரித்துள்ளது’ என்பதைச் சுட்டிக்காட்டி, இதன் காரணமாக இந்த கம்பனிகளின் செயல்பாடுகளில் மோடி-ஷா இருவரும் அந்தக் கம்பனிகளுக்கு உதவி இருக்கவாய்ப்புள்ளதாக அந்த கட்டுரையாளர் ...