Posts

நீதிபதி கர்ணன் பூண்ட தலித் கவச அங்கி

Image
நீதிபதி சின்னஸ்வாமி ஸ்வாமிநாதன் கர்ணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 30-03-2009 நியமனமானார். அந்த தினத்திலிருந்து அவர் தாம் சார்ந்த நீதித் துறையைப் பற்றியும், தம் சக நீதிபதிகளைப் பற்றியும் குறைகூறி வந்துள்ளார். இதை அவர் மீடியா மூலம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு நீதிபதி பதவிக் கருப்புக் கோர்ட்டை விட, ஜாதி தலித் கவச அங்கியைத் தான் தம் பதவியில் மிகவும் விரும்பி அணிந்துள்ளார். அந்த தலித் கவசத்தை அவர் மிகவும் விரும்பத்தகாத வகையில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதை கீழே உள்ள விவரமான அவரது செயல்கள் தோலுருத்துக் காட்டும் என்பது திண்ணம். நவம்பர் 2011 அன்று தாழ்த்தப்பட்ட ஜாதி தேசிய ஆணையத்தில், கர்ணன் ‘தாம் ஒரு தலித் என்பதால், சக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்னைத் துன்புறுத்தியும், தண்டித்தும் கொடுமைப் படுத்துகிறார்கள். என் வேலையிலும் குறிக்கிடுகின்றனர்’ என்று குற்றம் சாட்டி உள்ளார். இதற்குச் சான்றாக, கர்ணன் தன் சகநீதிபதியுடன் ஒரு கல்யாணத்திற்குச் சென்ற போது, அந்த சகநீதிபதி தமது காலை வேண்டுமென்றே என் ...

2579-வது கவுதம புத்தரின் வருடப் பிறந்த நாள் – 10-05-2017

Image
  புத்தர் (563-483 கி.மு.) நேபாலில் உள்ள லும்பினியில் வைகாசி மாதம் பவுர்ணமி நாளில் பிறந்து, புத்தகயாவில் ஞானோதயம் பெற்று, மத்தியப் பிரதேச சாரநாத்தில் தமது 8 அம்ச தர்மத்தை முதன் முதலாக உபதேசம் செய்து, உத்திரப் பிரதேச குஷிநகரில் தமது 80-வது வயதில் முக்தி அடைந்தார். புத்த ஜெயந்தி, விசாக், வைசாகா – என்று பல பெயர்களில் புத்தரின் விழா கொண்டாடப்படுகிறது. புத்தர் பிறந்த தினம், புத்தர் ஞானம் பெற்ற தினம், புத்தர் முத்தி அடைந்த தினம் எல்லாம் இந்த வைகாசி மாத பூர்ண சந்திரன் ஒளி விடும் ஒரே நாள் என்பது ஒரு பெரிய ஆச்சரியமான செய்தி. புத்தர் என்றால் ‘உத்தம புருஷர்’ என்றே பொருளாகும். புத்தரின் முக்கிய போதனை ‘நான்கு புனிதமான உண்மைகள்’ என்பதில் அடக்கம். துக்கம், துக்கத்தின் மூலம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்திப்  பாதை – ஆகியவைகள் தான் அந்த நான்கு புனித உண்மைகளாகும். முதல் உண்மை மனித வாழ்க்கையின் பிரச்சனைக்கு  காரணம் – துக்கம் என்றும், இரண்டாவது உண்மையில் துகத்திற்கான காரணங்களை அறிய வேண்டும் என்றும் போ...

ஜம்மூ காஷ்மீர் செனானி - நஸ் ரீ சுரங்கப்பாதை

Image
வீடியோ இணைப்பு: https://www.thequint.com/news-videos/2017/03/25/chenani-nashri-tunnel-in-jammu-and-kashmir ( குறிப்பு : இந்த சுரங்கப்பாதையைப் பற்றிய விபரம் மேலே இணைப்பைச் சொடுக்கி அதன் வீடியோ இணைப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும் . மிகச் சிறிய வீடியோ - கட்டாயம் பார்க்கவும் - ஆசிரியர் ) 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கப் பாதையின் நீளம் 9.2 கி . மீ . அது செனானி - ரஸ் ரீ ஆகிய இரு இடங்களை இணைக்கும் ஹிமாலயமலையின் சுரங்கப்பாதை . இதற்கு ஜூலை மாதம் 2011 அன்று  ₹ 2,519 ரூபாய் செலவில் ஐந்து வருடத்தில் கட்டி முடிப்பதாக காங்கிரஸ் மன்மோஹன் சிங்கின் ஐக்கிய முற்போற்கு கூட்டணி அரசு சர்க்கார் அடிக்கல் நாட்டியது . மோடி அரசு பதவி வகித்தவுடன் அந்த கட்டுமானப் பணிகள் முடிக்கி விடப்பட்டு , அந்த சுரங்கப்பாதையில் உலகத் தரம் வாய்ந்த அளவில் பல நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் , கேமராக்கள் , ரேடியோ , காற்றோட்டம் , தீ தடுப்பு , சிக்னல்கள் , தகவல் தொடர்பு மற்றும் மின் சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் கட்டப்பட...

வாழ்க்கைச் சித்திரம்: நான் கடந்த கரடுமுரடான வாழ்க்கைப் பாதை - பி. கிருஷ்ணன்

Image
முன்னுரை : வாழ்கையில் எதிர்படும் தடைக் கற்களை தவிடு பொடியாக்கி முன்னோருவோர் அதிரடி வீரர்கள் . அதே தடைக் கற்களை படிக்கட்டுகளாக்கி அதையே அடித்தளமாக்கி வெற்றி காண்போர் அஹிம்சா வீரர்கள் . முந்தையதில் வீரமும் தீரமும் வெளிப்பட்டால் , பிந்தையதில் பொறுமையும் , திறமையும் ஒளிர்விடும் . இரண்டும் வெற்றிக்கு வித்திடும் உத்திகள் தான் . முந்தியதில் கோபமும் பழிவாங்கும் எண்ணமும் மேலோங்கி இருக்கும் . ஆனால் , பிந்தையதில் வெறுப்பும் , வேதனையும் மேலோங்கி , மற்றவர்களின் அறியாமையை நினைத்து - அடிபணிய வைத்து வெற்றிக் கொடி நாட்டுவார்கள் . எனது இன்னுயிர் நண்பன் பி . கிருஷ்ணன் தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கி முன்னேறிய வெற்றி அஹிம்சா வீர்ர் . அவரது வாழ்க்கைச் சித்திரம் இதைப் பிரதிபலிக்கும் என்று நினைக்கிறேன் .   இப்பொழுதெல்லாம் நமது பள்ளித் தோழர்களைப் பார்த்து உரையாடுவது மிகவும் அரிதாக விட்டது . அதிலும் மிகவும் அன்னோன்னியமாக குடும்ப நண்பரைப் போல் பழகிய சில பள்ளித் தோழர்களுடன் தொடர்பு கொள்வதும் அரிதாகி விட்டது . தொலை தொடர்பு சாதனங்கள் பல உள்ள இந்த நிலையிலும் , ஏன் பள்ளித் தோழர்களைத் தொடர்பு ...

பி.எஸ்.எடியுரப்பாவின் 10 கோடி ஊழலில் கோர்ட் தீர்ப்பு 2008

Image
வருடம் நடந்த கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பி . ஜே . பி . யை முதன் முதலாக ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர் என்ற பெருமை பி . எஸ் . எடியுரப்பாவிற்கு ஏற்பட்டு , அவரும் 30 மே 2008 முதன் மந்திரியாகப் பொறுப்பேற்றார் . ஆனால் , அவரது துரதிஷ்டம் சந்தோஷ் ஹெக்டே என்ற கர்நாடகாவின் லோகயுக்தா (2006- லிருந்து ஜூன் 2010 வரை பதவி வகித்தவர் ) மற்றும் அப்போதைய கர்நாடக கவர்னராக இருந்த எச் . ஆர் . பரத்வாஜ் ஆகிய இருவரின் மூலம் வந்தது .   பங்களூர் மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக கனிவளச் சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியது - நிலம் வாங்கியதில் முறைகேடு ஆகியவைகளை ஆய்வு செய்த அறிக்கையை ஏற்று பரத்வாஜும் எடியூரப்பாவின் மேல் வழக்குப் பதிவு செய்து , போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் உத்திரவிட்டார் . அதனால் , எடியுரப்பா 15-10-2011 அன்று கைதி செய்யப்பட்டு , 23 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு , விசாரிக்கப்பட்டுள்ளார் . பி . ஜே . பி . யின் அப்போதைய மேலிடம் அத்வானியின் சொல்படி , எடியுரப்பாவைக் காப்பாற்ற முயலவில்லை . சந்தேஷ் ஹெக்டேயிடம் அத்வானிக்கு ஒரு தனி நம்பிக்கை உண்டு என்பதை இங்கு க...