Posts

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - ஆணவமா? அவசியமா?

Image
சங்கரராமன் கொலை வழக்கு - ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு - இந்த இரண்டு வழக்குகளும் தமிழக அரசின் ஆணவமான போக்கின் உச்ச கட்டம் என்பதுதான் நிதரிசன உண்மை . நவம்பர் 2004 சமயத்தில் சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஸ்ரீஜயேந்திரர் ஜெயிலில் அடைபட்டிருக்கும் போது கூட , மீண்டும் அவர் ஜெயிலிருந்து பெயிலில் வெளியே வரக் கூடாது என்ற எண்ணத்தால் , ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் அவரைக் கைதி செய்ய தமிழக அரசால் உத்திரவு விடப்பட்டது . நவம்பர் 17, 2004 அன்று தமிழ் நாட்டு முதல் அமைச்சரான செல்வி ஜெயல்லிதா அவர்கள் சட்ட சபையில் தெரிவித்தது :’ ராதாகிருஷ்ணன் ‘ சோமசேகர கனபாடிகள் ’ என்ற புனைப்பெயரில் தன்னைப் பற்றி மிகவும் கடுமையான குற்றச் சாட்டுக்களை கடிதங்களாக எழுதியுள்ளார் என்று ஜெயேந்திரர் சந்தேகப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது . அதனால் ஜெயேந்திரர் அடியாட்களை நியமித்து , ராதாகிருஷ்ணனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .’ ஆனால் இதே புனைப்பெயரில் சங்கரராமன் ஜெயேந்திரரைப் பற்றிப் புகார் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது . ஒரு புராதன மடத...

பிரான்ஸ் நைஸ் நகரத்தை நரகமாக்கிய முஸ்லீம் தீவிரவாதி

Image
14- ம் தேதி ஜீலை பிரான்ஸ் தேச மக்களுக்கு ஒரு முக்கியமான தினமாகும் . அது நாடு சுதந்திரமடைவதற்கு முதற்கட்ட போராட்டமான பாஸ்டில் சிறை தகர்ப்பு நாளாகும் . அதை பிரான்ஸ் நாடு தங்களது தேசிய தினமாகக் கொண்டாடி வருகின்றனர் . நைஸ் நகர மக்கள் 14- ம் நாள் ஜூலை 2016 அன்று அங்குள்ள கடற்கரையில் திரளாகக் கூடி வாணவேடிக்கைகளைப் பார்த்துக் களித்துக் கொண்டிருந்தனர் . அப்போது இரவு நேரம் . யாரும் எதிர்பார்க்காத நிலையில் மொஹமத் லஹோயஜ் பவுஹ்லெல் என்ற துனிஷியாவில் பிறந்து பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று நைஸ் நகரில் வசிக்கும் 31- வது நிரம்பிய இந்த முஸ்லீம் வெடிபொருட்கள் நிரம்பிய ஒரு 19 டன் கொள்ளளவுள்ள பெரிய டிரக் வண்டியை அந்த மக்கள் திரண்டிருந்த கடற்கரையில் வேகமாகவும் , தாறுமாறாகவும் கொலைவெறித் தாக்குதலுடன் ஓட்டியும் , துப்பாக்கியால் சுட்டும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அவனது வெறிச்செயல் தொடர்ந்துள்ளது . ஒரு இருசக்கர வாகன ஓட்டி அந்த டிரக் வண்டியின் கதவைப் பிடித்து உள்ளே செல்ல முயன்ற போது கீழே விழுந்து இறந்து விட்டான் . பிறகு அந்த முஸ்லீம் கொலைவெறி பிடித்த தீவிரவாதியை போலீஸ் சுட்டு வீழ...

ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரசின் தர்மசங்கடம் ஆக்கம்: பவித்திரன்

Image
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு இத்தாலிய கீழ்க்கோர்ட்டில் அக்டோபர் 2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்று என்பதை வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன் . Finmeccanica என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Giuseppe Orsi என்பவரையும் , முந்தைய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத் தலைவரான Bruno Spagnolini ஆகிய இருவர்களுடன் இந்தியாவின் முந்தைய விமானப் படைத்தளபதி எஸ் . பி . தியாகியையும் போதிய ஆதரமில்லை என்று சொல்லி அவர்கள் அனைவரையும் ஊழல் குற்றச் சாட்டிலிருந்து கீழ்க்கோர்ட் விடுவித்தது . ( இத்தாலியைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஃபின்மெகானிகா என்ற தாய் நிறுவனத்தின் கிளைதான் யு . கே . யில் உள்ள அகஸ்டாவெஸ்ட்லேண்டாகும் .) இருப்பினும் , அந்த கோர்ட் அந்த இரு இத்தாலிய அதிபர்களையும் ‘ தவறான விலைப்பட்டியல் ரசீது ’ தயார் செய்த குற்றத்திற்காக குறைந்த பட்ச தண்டனையாக இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது . அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு இத்தாலி மிலான் மேல் கோர்ட்டில் தொடங்கப்பட்டது . ஏப்ரல் 2016 அன்று மேல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது ....