உழைக்கும் மோடி – உயரும் பாரதம்
வரப்புயர நீர் உயரும் என்று தொடங்கும் பாடல் வரிகளின் படம் தான் இடது பக்கத்தில் உள்ளது.
உற்பத்தி உயர வேண்டியது அனைத்து விவசாய விளைபொருட்களும் என்பது தான் ஒளவை நமக்கு அறிவுறுத்தும் பொருளாதார கொள்கையாகும். அதைத் தான் மோடியும் தமது நீண்ட கால வளர்ச்சித் திட்டமான விக்சிட் இந்தியா 2047 என்ற வளர்ந்த பாரதம் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதன் ஆரம்ப முயற்சிதான் பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் குறு - சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ₹6000 மூன்று தவணைகளாக ₹2000 வீதம் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் டிசம்பர் 2018 ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, இதுவரை 22 தவணைகளில் நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை சுமார் ரூபாய் 3.25 லட்சம் கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய 22-வது தவணை கடந்த மார்ச் 13, 2026 அன்று சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு ₹20,000 கோடிக்கும் அதிகமான நிதி அளிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் விவசாயத் தேவைகளுக்கும் (விதை, உரம் வாங்குதல் போன்றவை) மற்றும் அவசரக் குடும்பச் செலவுகளுக்கும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலே உள்ள இரண்டு படங்களும் மோடியின் $30 டிரிலியன் டாலர் இந்திய வளர்ச்சியை
விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
இந்த சமயத்தில் மோடி 2020-ம் ஆண்டு கொண்டு வந்த
மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் உச்ச நீதி மன்ற உத்தரவால் திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தையும் சொல்லவேண்டும்.. உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை ஆராய ஒரு குழுவை
நியமித்தது. அந்த உச்சநீதிமன்றக் குழுவே உச்ச நீதிமன்றத்தின்
மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்த உத்திரவு தவறான ஒன்று என்று திட்டவட்டமாக குற்றம் சாட்டி உள்ளது.
அந்த அறிக்கையின்
முக்கிய அம்சங்கள்:
- 73 விவசாய
அமைப்புகளில், 61 அமைப்புகள் (சுமார் 86%) சுமார் 3.3 கோடி விவசாயிகள்
மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததுடன், அந்தக் குழுவின்
உறுப்பினர் அனில் கான்வத் (Anil Ghanwat) "சட்டங்களை ரத்து
செய்தது அல்லது நீண்ட காலம் நிறுத்தி வைத்தது என்பது, இந்தச் சட்டங்களை ஆதரித்த 'மௌனமான பெரும்பான்மையான' விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி"
என்று
குறிப்பிட்டுள்ளார்.
- குழுவின்
பரிந்துரையின்படி, சட்டங்களை முழுமையாக
ரத்து செய்வதற்குப் பதிலாக, அவற்றில் சில
மாற்றங்களைச் செய்திருக்கலாம்.
இந்தச்
சட்டங்களைத் திரும்பப் பெற்றது ஒரு "பெரிய அரசியல் தவறு" என்றும், இதன் மூலம் வட
இந்திய விவசாயிகள் தங்களுக்குக் கிடைத்த ஒரு பெரிய பொருளாதார முன்னேற்ற
வாய்ப்பை இழந்துவிட்டனர் என்றும் குழுவின் உறுப்பினர் கருத்து
தெரிவித்துள்ளார். இந்தப் பெரும் தவற்றைச் செய்த உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்
கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. விவசாயிகளின்
முன்னேற்றத்திற்கு பல சட்ட திருத்தங்கள் செய்வதில் மோடி எவ்வாறு பல சவால்களை
எதிர்கொண்டார் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகும்.
யுரியா உரம் தட்டுப்பாட்டை மோடி அரசு கையாண்ட
விதம் மிகவும் பாரட்டுக்குரியதாகும். விவசாயத்திற்கு வழங்கப்படும் மானிய விலை யூரியா, பிளைவுட் (Plywood), பெயிண்ட் மற்றும்
ரப்பர் போன்ற தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டதை முழுவதும் தடை செய்ய, யூரியாவில் வேப்ப எண்ணெய் பூசி,
அது தொழிற்சாலை பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாக மாற்றி,
'வேப்பம்பூ பூசப்பட்ட
யூரியா' (Neem Coated Urea) என்று
சந்தைப் படுத்தியது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். இதனால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதுடன், வேப்ப எண்ணெய்
பூசப்பட்ட யூரியா மண்ணில் மெதுவாகக் கரைவதால், செடிகள் நீண்ட நேரத்திற்கு நைட்ரஜனை உறிஞ்ச
முடிகிறது. இது உரத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது.மேலும்,
எண்ணெய்க்கு இயற்கையிலேயே பூச்சிகளை விரட்டும்
குணம் இருப்பதால், இது பயிர்களைத் தாக்கும் சில வகை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பை அளிக்கிறது. அது மட்டுமல்ல. வேப்ப எண்ணெய் ஒரு 'நைட்ரிஃபிகேஷன் இன்ஹிபிட்டர்' (Nitrification Inhibitor) ஆகச் செயல்படுகிறது. இது மண்ணில் உள்ள
நைட்ரஜன் ஆவியாகிக் காற்றோடு கலப்பதையும், நிலத்தடி நீரில் கலந்து வீணாவதையும் குறைத்து
மண் வளத்தைப் பாதுகாக்கிறது. சமீபத்தில், அரசாங்கம் 'யூரியா கோல்ட்' என்ற புதிய வகை யூரியாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சல்பர் (Sulphur) சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணில்
சல்பர் சத்து குறைபாட்டைப் போக்கவும், யூரியாவின் பயன்பாட்டைக் குறைக்கவும் இது கொண்டு
வரப்பட்டுள்ளது. இது தான் மோடி அரசின் சாதனையின் சிறப்பு
அம்சமாகும்.
முந்தைய பிரதமந்திரியான படித்த பொருளாதார மேதை
என்று புகழப்பட்ட திரு. மன்மோஹன் சிங் மோடியின் அனைத்து கிராமங்களிலும், கிராம வீடுகளிலும் மின்சாரம் என்ற திட்டத்தை
எதிர்க்கும் விதமாக ‘இது படிக்காத ஏழைகளை மின்சாரத்தால் கொல்லும் திட்டம்’ என்ற அளவில் தமது
கருத்தை வெளியிட்டார். அதே போல் ஹார்வேர்ட் படித்த மேதை நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமோ மோடியின்
டிஜிடல் இந்தியாவையும், அவரது யுபியை வங்கி பண வர்தகத்தையும் ‘இது ஒரு போதும் சாத்தியப்படாது. மின்சாரம், இண்டர்நெட் வசதி
இல்லாத கிராமங்களிலும், நகரங்களிலும் இதைச் செயல்படுத்த முடியாது. இது படு தோல்வியில் முடியும்’ என்று தன் கருத்தைத்
தெரிவித்தார். ஆனால் ‘ஜன் தன்’ என்ற ஆதார் அட்டை அடையாளம், மொபைல் மூலம் JAM Trinity-இல் (JAM = Jan Dhan + Aadhaar + Mobile) டிஜிடல் இந்தியா
வெற்றி பெற்றுள்ளது.
அது மோடியின் வெற்றியாகவும், உலக அளவில் கவனத்தை
ஈர்த்து அந்த திட்டத்தை பல நாடுகளும்
பாராட்டி, தங்கள் நாட்டிலும் செயல்படுத்த முன்வந்துள்ளன. இந்தியாவின் "யுபிஐ" (UPI) தொழில்நுட்பம் இன்று சிங்கப்பூர், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம்
உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது இந்தியாவின்
மென்பொருள் திறனுக்கு உலக நாடுகள் வழங்கும் அங்கீகாரமாகும்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்ட
த்தில் எந்தப் பணமும் முதலில்
செலுத்தாமலும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் விதி முறை என்பது மிகவும் புரட்சிகரமான
விதியாகும்.
மோடியின் மேக்-இன்-இந்தியா & -இன்-இந்தியா & ஸ்டார்ப் அப் இந்தியா
திட்டம் பாரத தேசத்தை அனைத்து தொழில் துறையிலும் தன்னிறைவு அடையச் செய்யும்
முயற்சியாகும். இந்தியாவில் முதலீடு செய்து, பொருள் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்தும், உள்ளூரில் விற்றும் செயல்படும் அயல் நாட்டுத் தொழில் மையங்கள், தங்கள் தொழில் நுட்பத்தையும் இந்தியாவுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஷரத்து முக்கியமான ஒன்றாகும்.
மோடி அயல் நாட்டுப்
பயணத்தின் போது கையெழுத்தான பல ஒப்பந்தங்கள் மேக் இன் இந்தியாவிற்கு ஒரு ஒளிமயமான
எதிர்காலத்தை உறுதி செய்யும் முயற்சிகளாகும்.
|
மோடி பதவி ஏற்ற
வருடமான 2014-ல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் |
|
யூனிகார்ன்
நிறுவனங்கள் 400-க்கும் கீழ். ஆனால் தற்போதோ 110+ விகித வளர்ச்சி
அடைந்த நிலையில் 1,25,000 + நிறுவனங்கள் உருவாகி உள்ளன. |
தற்போது இந்தியா உலகின் 5-வது பெரிய
பொருளாதாரமாக உள்ளது.
30 டிரில்லியன் டாலர் (
30 டிரில்லியன் டாலர்
என்பது இந்திய மதிப்பில் சுமார் 2,500 லட்சம் கோடி ரூபாய் ஆகும்) இலக்கை எட்டும்போது, இந்தியா உலகின் 2-வது அல்லது 3-வது மிகப்பெரிய
பொருளாதாரமாக உருவெடுக்கும்.
அமெரிக்கா மற்றும்
சீனாவிற்கு இணையான ஒரு பொருளாதார
சக்தியாக இந்தியா மாறும்.
இதற்கு
சில புள்ளி விவரங்களைப் பட்டியல் இட்டுள்ளோம். இதன் மூலம் 100 ஆண்டு 2047 வருடத்தின்
சுதந்திரதினத்தில் $30 டிரிலியன் பொருளாதார வளர்ச்சியை பாரதம்
எட்டிவிடும் என்ற நம்பிக்கை ஏற்படும்.
இந்தியாவின் அசுர
வளர்ச்சி:
ஒரு புள்ளிவிவரப் பார்வை
கடந்த தசாப்தத்தில் இந்தியா அடைந்துள்ள
முன்னேற்றத்தைச் சுருக்கமாகக் காட்டும் அட்டவணை:
|
துறை (Sector) |
2014-க்கு முன் (தோராயமாக) |
தற்போதைய நிலை (2025-26) |
வளர்ச்சி மாற்றம் |
|
பொருளாதார வரிசை |
10-வது இடம் |
5-வது இடம் (3-வது இடத்தை நோக்கி) |
பிரம்மாண்ட உயர்வு |
|
டிஜிட்டல் பரிவர்த்தனை |
மிகக் குறைவு |
உலகின் 46% (Global Real-time payments) |
உலகத் தலைமை |
|
தேசிய நெடுஞ்சாலைகள் |
91,287 கி.மீ |
1,46,000+ கி.மீ |
இரு மடங்கு வேகம் |
|
விமான நிலையங்கள் |
74 |
150+ |
100% உயர்வு |
- ஏற்றுமதி சாதனை: இந்தியாவின்
ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள்
மற்றும் சேவைகள்) முன் எப்போதும்
இல்லாத வகையில்
$750 பில்லியன் கடந்த ஆண்டு தாண்டியுள்ளது.
- வறுமை ஒழிப்பு: நிதி ஆயோக்
அறிக்கையின்படி, கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து (Multidimensional Poverty) வெளியே வந்துள்ளனர்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: சூரிய ஆற்றல்
உற்பத்தியில் இந்தியா உலகில் 4-வது இடத்தில் உள்ளது. இது 'பசுமை பாரதம்' என்ற இலக்கிற்கு வலு சேர்க்கிறது.
- இந்தியாவில்
வேலைவாய்ப்பு 2017–18இல் 47.5 கோடி இருந்தது; அது 2023–24இல் 64.33 கோடி ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஆறு
ஆண்டுகளில் சுமார் 16.83 கோடி புதிய வேலைவாய்ப்புகள் சேர்க்கப்பட்டதாக
மத்திய அரசு கூறுகிறது.
அதே
காலகட்டத்தில் வேலை இல்லாமை விகிதம்
6.0% இலிருந்து 3.2% ஆகக் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாலைப் போக்குவரத்து
அமைச்சகத்தின் 2025 ஆண்டு இறுதி
மதிப்பீட்டின்படி, தேசிய நெடுஞ்சாலை
நீளம் 2014 இல் 91,287 கி.மீ.
இருந்தது; தற்போது 1,46,560 கி.மீ.
ஆக
உயர்ந்துள்ளது —
சுமார் 61% வளர்ச்சி. அதுமட்டுமல்ல,
இயக்கத்தில்
உள்ள அணுகல்-கட்டுப்படுத்தப்பட்ட
அதிவேக பாதைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேகள்
93 கி.மீ.
இலிருந்து 3,052 கி.மீ.
ஆக உயர்ந்துள்ளன.
சாலைகள் என்பது
வெறும் கான்கிரீட் அல்ல;
அவை சந்தை, முதலீடு, வேலை, பொருள் நகர்வு, மற்றும் பகுதி சமநிலைக்கான முதுகெலும்பு.
- 'சுதர்சன சக்ரா' என்பது இந்தியாவின்
பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது. புராணங்களில் தீமையை
அழிக்கும் சுதர்சன சக்ராவைப் போலவே, இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு
ஏவுகணை அமைப்பு (S-400 Triumf) இன்று நாட்டின் வான்வெளியைப் பாதுகாக்கும் 'சுதர்சன சக்ரா'வாகக் கருதப்படுகிறது.
இது எதிரி
நாட்டு விமானங்கள், ஏவுகணைகள் மற்றும்
ட்ரோன்களை 400 கி.மீ தூரத்திலேயே
கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.
நிலம், நீர், ஆகாயம் என மும்முனைத்
தாக்குதல்களையும் முறியடிக்க இது உதவுகிறது.
- தற்சார்பு பாதுகாப்பு (Atmanirbhar Bharat in Defence): முன்பு வெளிநாடுகளையே
நம்பியிருந்த இந்தியா, இன்று உள்நாட்டிலேயே
அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கிறது.
- தேஜஸ் (Tejas): இந்தியாவின்
சொந்தத் தயாரிப்பான போர் விமானம்.
- அக்னி மற்றும் பிரமோஸ்
(Agni & BrahMos): உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாகக்
கருதப்படும் பிரமோஸ், இந்தியாவின்
வலிமைக்குச் சான்று.
- ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant): இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம்
தாங்கி போர்க்கப்பல், கடல் எல்லையில்
சுதர்சன சக்ராவைப் போலச் சுழன்று பாதுகாப்பளிக்கிறது.
- 3. சைபர் பாதுகாப்பு
மற்றும் விண்வெளிப் போர் (Mission Shakti)
- மிஷன் சக்தி (Mission Shakti): விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களைத்
தாக்கி அழிக்கும் திறனைப் பெற்றதன் மூலம், விண்வெளிப்
பாதுகாப்பில் இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுத்துள்ளது.
- டிஜிட்டல் இந்தியாவில்
சைபர் தாக்குதல்களை முறியடிக்க வலுவான பாதுகாப்பு வளையங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.
இது போல் பல விவரங்கள் உள்ளன.
2047-ல் தனிநபர் வருமானம்
உயரும்போது, ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் வாழ்க்கைத்தரம் பின்வருமாறு மாறும்:
- அனைவருக்கும் சொந்த
வீடு மற்றும் நவீன போக்குவரத்து வசதிகள்.
- உயர்தர கல்வி மற்றும்
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைத்தல்.
- டிஜிட்டல் வசதிகள்
மூலம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களுக்கு இணையான வேலைவாய்ப்புகள்.
- கதி சக்தி (Gati Shakti): சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை
ஒன்றிணைக்கும் தேசிய பெருந்திட்டமாகும்.
- வந்தே பாரத் & புல்லட் ரயில்: போக்குவரத்துத்
துறையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், பயண நேரத்தைக்
குறைப்பதோடு வணிகத்தையும் வேகப்படுத்துகிறது.
- எக்ஸ்பிரஸ்வேகள்: மாநிலங்களை இணைக்கும்
அதிவேக நெடுஞ்சாலைகள் இந்தியாவின் பொருளாதார நரம்புகளாகச் செயல்படுகின்றன.
- தூய்மை பாரதம் (Swachh Bharat): பொது சுகாதாரத்தில் ஒரு மக்கள் இயக்கத்தை
உருவாக்கியது.
- ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission): ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம்
குடிநீர் வழங்கும் திட்டம் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளது.
- ஆயுஷ்மான் பாரத்: உலகின் மிகப்பெரிய
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஏழைகளுக்கான
மருத்துவச் சுமையைக் குறைத்துள்ளது.
- நதி நீர்
இணைப்புத் திட்டம்: 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் Ken–Betwa இணைப்பு திட்டம் செயலாக்க நிலைக்குள் நுழைந்த ஒரேயொரு
முன்னுரிமைத் திட்டமாக அரசே குறிப்பிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பீட்டு செலவு
₹44,605 கோடி.
- “லட்சபதி திதி” முயற்சி பெண்சக்தியின்
சமூக-பொருளாதாரப் புரட்சியை
உருவாக்கியுள்ளது. அரசின்
விளக்கப்படி,
வருடத்திற்கு ₹1 லட்சம் அல்லது அதற்கு
மேற்பட்ட குடும்ப வருமானம் ஈட்டும் சுயஉதவி குழு
பெண் உறுப்பினரே “லட்சபதி திதி.” 2026
மார்ச்
அறிக்கையின் படி,
மூன்று கோடி பெண்கள் லட்சபதி திதிகளாக உயர்ந்துள்ளதாகவும், 10 கோடி பெண்கள் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவி
குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன. இது ஒரு திட்ட வெற்றியல்ல;
“பெண்களுக்கு
உதவி”
என்ற
பார்வையிலிருந்து “பெண்கள்
நாட்டின் உற்பத்தி ஆற்றல்” என்ற நிலைக்கு நகரும் மாற்றம்.
- பெண்கள்
தொழிலதிபர்களாக உருவெடுக்கும் மற்றொரு பெரிய தளம் முத்ரா மற்றும் தொடர்புடைய கடன் திட்டங்கள்.
சமீபத்திய அரசு
தகவலின்படி,
PM Mudra Yojana கணக்குகளில் 68% பெண்கள், ஒப்புதல் அளிக்கப்பட்ட
தொகையில் 44% பெண்கள் பங்கைப்
பெற்றுள்ளனர்.
மேலும் பெணகள், எஸ்.சி.,
எஸ்.டி. முதல்முறை தொழில்முனைவோருக்கான
புதிய கடன் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் பொருள், பெண்களை சுயஉதவி
குழுவில் வைத்துக் கொண்டிருக்கும் மட்டத்தைக் கடந்து, கடன், சந்தை, வியாபாரம், உற்பத்தி, மற்றும் தன்னிறைவு பொருளாதார வலையில்
இட்டுச் செல்லும் முயற்சி வலுப்பெற்றுள்ளது. “பெண்சக்தி”
என்பது இங்கு
ஒரு மேடைச் சொல் அல்ல;
கடனுடன், சந்தையுடன், வருமானத்துடன், தொழில்முனைவுத் திறனுடன் இணைந்த பொருளாதார
சொல்.
- ஒரு நாட்டு
உயர்வில் சுத்தமும் ஒழுங்கும் அடிப்படைப் பங்காற்றுகின்றன.
தூய பாரதம் இதை ஒரு அரசியல்-நிர்வாக
பண்பாட்டாக மாற்றிய முயற்சி. 2025
ஆண்டு இறுதி
அரசு மதிப்பீட்டின்படி, 83% க்கும் மேற்பட்ட கிராமங்கள் ODF Plus Model நிலையை
எட்டியுள்ளன; 5.27 லட்சம்
கிராமங்களில் திடக் கழிவுகள் மேலாண்மை ஏற்பாடுகள், 5.41 லட்சம்
கிராமங்களில் திரவக் கழிவுகள் மேலாண்மை ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இதற்கு
- இதனுடன்
நெருக்கமாக சம்பந்தப்பட்டது கங்கை தூயப்படுத்தும் Namami Gange திட்டம். 2025 ஜூலை அரசு
தகவலின்படி, கங்கை மற்றும்
அதன் கிளைநதிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் 502 திட்டங்கள் ஒப்புதல்
பெற்றுள்ளன; அதில் 323 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன
- நீரைச் சுற்றிய
தேசியக் கண்ணோட்டத்தின் மற்றொரு பரிமாணம் நதி இணைப்பு. இந்தியாவில்
மொத்தம் 30 நதி இணைப்பு
திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது; அவற்றில் Ken–Betwa திட்டம்
செயலாக்க நிலைக்குள் வந்திருக்கும் முதன்மைத் திட்டமாக உள்ளது.
இதன் மதிப்பீட்டு செலவு
₹44,605 கோடி.
இந்த உன்னத விக்சித் பாரத் 2047 என்பதை மோடி மக்கள் இயக்கமாகவே உருவாக்கி விட்டார். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா பிரியாஸ்,சப்கா விஸ்வாஸ்-அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி; அனைவரின் முயற்சி அனைனவரின் நம்பிக்கை –என்பது பாரத மக்களின் குரலாக ஒலிக்கச் செய்வதிலும் மோடி வெற்றி பெற்று விட்டார் என்று பல தேர்தல் வெற்றிகள் மூலம் தெரிய வருகிறது.
மோடி உயர்வான இலக்கை நிர்ணயித்து அதற்கான திட்டங்களைத் தீட்டி அவைகள் நிறைவேற்றப்படுவதையும் கண்காணித்து அயராது உழைக்கிறார்.
அவரது உழைப்பு நிச்சயம் பலன் தரும். 30 டிரிலியன் டாலர் இலக்கை அடைய இன்னும் 21ஆண்டுகளே உள்ளன. மோடி அடுத்துவரும் 2029 ஆண்டு லோக் சபா தேர்தலில் நின்று ஜெயிப்பது சர்வ நிச்சயம்.
அதன் பிறகு புதிய பிரதமர் பதவி வகிப்பார்.
அவர் அடுத்த 16 ஆண்டுகள் பாரத தேசத்தை மோடியின் தொலை நோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி 30 டிரிலியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும்.
மக்களின் ஆதரவும், ஆண்டவன் அனுக்கிரகமும் இருப்பின் இது நிச்சயம் நிகழும் என்ற நம்பிக்கை வாய்மைக்கு உண்டு.
சத்திய மேவ ஜெயதே! ஜெய் விக்சித் பாரதம்






Comments