1000 வருடங்கள் கடந்த சோமநாதர் ஆலயம் மீட்பு ஆண்டு 2026 -ல் கோலகல விழா



சோமநாத் ஸ்வாபிமான் பர்வ் = சோமநாத் ஆன்மிக–தேசிய சுயமரியாதை விழா - 11 - 01 - 2026

 குஜராத் மாநிலத்தின் புனிதத் தலமான சோமநாத் திருத்தலத்தில் நடைபெற்ற சோமநாத் ஸ்வாபிமான் பர்வ் நிகழ்ச்சி, இந்தியாவின் ஆன்மிக மரபு, பண்பாட்டு பெருமை மற்றும் தேசிய தன்னம்பிக்கை ஆகியவற்றை நினைவுகூரும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. 

இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி ஜி கலந்து கொண்டு, சோமநாத் ஆலயம் இந்திய நாகரிகத்தின் “ஸ்வாபிமானத்தின் சின்னம்” எனக் கூறினார். பலமுறை இடித்தழிக்கப்பட்ட பின்னரும் சோமநாத் ஆலயம் மீண்டும் மீண்டும் எழுந்து நின்றது இந்தியாவின் அடங்கா ஆன்மிக சக்தியையும் பண்பாட்டு உறுதியையும் பிரதிபலிக்கிறது என்று மோடி முழங்கினார். 

மேலும், சோமநாத் ஆலயத்தின் மறுகட்டுமான வரலாற்றில் சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் காட்டிய உறுதி, இன்றைய இந்தியாவுக்கு ஊக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த “ஸ்வாபிமான் பர்வ்” நிகழ்ச்சி, கடந்த கால மரபுகளை நினைவுகூர்ந்து, எதிர்கால இந்தியாவின் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு ஆன்மிக–தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. 

அந்த விழாவில் பல கலைஞர்களின் ஆர்ப்பாட்டமான நடனம், மேளம், சிவபிரானின் உடுக்கைகளின் ஒலிகள், சிவபிரானின் சூலாயுதம் என்று மோடி ஜியின் தலைமையில் நடந்த ஊர்வலம் மிகவும் சிறப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. அவரை சோமனாத புர மக்கள் பூச்சொறிந்து வாழ்த்தி வரவேற்றனர்

அந்த அற்புதமான விழாவில் மோடிஜி அவர்கள் உரை ஸ்வாமி விவேகானந்தரின் சிகாகோ உரை போல் மக்கள் மனத்தில் பதியும் வண்ணம் அமைந்துள்ளது

முஸ்லீம் அரசர்களின் அவர்கள் மதமான இஸ்லாத்தை ஹிந்து மக்களிடம் திணிக்க பல விதமான வன்முறைகளைக் கடைப்பிடித்தனர் என்பது சரித்திரம். இந்துக்களின் மேல் வரி, மதம் மாறாதவர்களைக் கொல்லல், இந்துக் கோயில்களை இடித்தல் - அங்குள்ள விக்கிரகங்களைச் சூரையாடி தங்கள் அரண்மனைகள் - மசூதிகளின் வாயில்களில் முஸ்லீம்கள் மிதித்துத்துக்கொண்டு செல்லும் வண்ணம் அந்த வளாகத்தில் பதித்தல், இந்துப் பெண்களின் கற்பை அழித்தல் என்று இந்து மக்களின் ரத்தம் கொதிக்கும் அளவில் துன்பப்படுத்தி உள்ளனர்.

 அந்த ரணம் ஆறாமல் பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. போலி செக்குலரிசம், முஸ்லீம்களின் ஓட்டு வங்கிக்கான அரசியல் என்று மெளனமாக ரத்தக் கண்ணீர் வடித்தார்கள் இந்து மஹா ஜனங்கள்.  

2014 ஆண்டு தான் மோடி பிரதமராக பதவி ஏற்றதும் ஹிந்துக்களின் ரத்தக் கண்ணீருக்கு ஒரு விடிவு காலம் பிறந்தது. அதன் தொடர்ச்சி தான் இந்த சோமநாத் ஆலய விழாக் கொண்டாட்டம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் தினமாகும் இது

மோடியின் முழு உரையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்

"ஒருபுறம் பகவான் மகாதேவரின் அருளும், மறுபுறம் சூரியனின் கதிர்களும், மந்திரங்களின் எதிரொலியும், பக்தியின் எழுச்சியும் இணைந்துள்ளது. இந்த தெய்வீக சூழல் இந்த நிகழ்வை மேலும் அதிக தெய்வீகமாகவும், பிரமாண்டமாகவும் ஆக்குகிறது. 

சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக, சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவில் தீவிரமாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு பெரிய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். 

இந்த கொண்டாட்டம் பெருமை, மரியாதை, கண்ணியம் மற்றும் அறிவு, மகத்துவம், பாரம்பரியம், ஆன்மீகம், உணர்தல், அனுபவம், மகிழ்ச்சி, நெருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. 

எல்லாவற்றிற்கும் மேலாக, இது மகாதேவரின் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது. 

சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சூழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் எனது மனதில் மீண்டும் மீண்டும் எழுகிறது.  நமது மூதாதையர்கள், தங்கள் நம்பிக்கைக்காகவும், தங்கள் கடவுள் மகாதேவருக்காகவும், தங்களிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்து தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, படையெடுப்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றதாக நம்பினர்.  இப்போது, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், சோம்நாத் மகாதேவ் கோவிலின் மேல்  கொடி பறக்கிறது. அது இந்தியாவின் வலிமையையும் திறனையும் பறைசாற்றுகிறது. சோம்நாத்தின் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் தலைவணங்குகிறேன். 



சோம்நாத் சுயமரியாதைப் பயணம் ஆயிரம் ஆண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையில், 1951-ல் இது மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, இப்போது எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவது  அதிர்ஷ்டவசமான தற்செயல் நிகழ்வாகும். இந்த விழா  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அழிவின் நினைவாக மட்டுமல்லாமல், ஆயிரம் ஆண்டு உறுதியான பயணத்தின் கொண்டாட்டமாகவும், இந்தியாவின் பெருமையின் கொண்டாட்டமாகவும் திகழ்கிறது.  சோம்நாத்தை அழிக்க எண்ணற்ற முயற்சிகள் நடந்ததைப் போலவே, அந்நிய படையெடுப்பாளர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவை அழிக்க முயன்றனர். இருப்பினும், சோம்நாத்தும் இந்தியாவும் உறுதியுடன் இருக்கிறது. 




ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி 1026-ம் ஆண்டு, கஜினி முகமது சோம்நாத் கோயிலைத் தாக்கிய வரலாற்றை ஒருவர் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.  சில ஆண்டுகளுக்குள் சோம்நாத் கோவில் மீண்டும் கட்டப்பட்டு, பன்னிரண்டாம் நூற்றாண்டில் மன்னர் குமாரபாலர் பிரமாண்டமான மறுசீரமைப்பை மேற்கொண்டார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அலாவுதீன் கில்ஜி மீண்டும் சோம்நாத்தைத் தாக்க முயன்றான். 

பதினான்காம் நூற்றாண்டில் முசாபர் கான் சோம்நாத்தைத் தாக்கினான்  ஆனால் அவர்களது முயற்சிகள் தோல்வியடைந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் சுல்தான் அகமது ஷா கோயிலை தாக்க முயன்றான்.  அவரது பேரன் சுல்தான் முகமது பெகடா அதை ஒரு மசூதியாக மாற்ற முயன்றான்.  ஆனால் மகாதேவரின் பக்தர்களின் முயற்சியால் கோயில் மீண்டும் புத்துயிர் பெற்றது.  பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில், ஔரங்கசீப் சோம்நாத்தை சேதப்படுத்தி மீண்டும் ஒரு மசூதியாக மாற்ற முயன்றான். ஆனால் அஹில்யாபாய் ஹோல்கர் சோம்நாத்தை மீண்டும் உயிர்ப்பித்தார். 



சோம்நாத்தின் வரலாறு அழிவு மற்றும் தோல்வியின் வரலாறு அல்ல; மாறாக வெற்றி மற்றும் மீண்டு எழும் மறுகட்டமைப்பின் வரலாறாகும்.  படையெடுப்பாளர்கள் தொடர்ந்த நிலையில், மத பயங்கரவாதத்தின் புதிய தாக்குதல்கள் நடந்த சூழலில், ஒவ்வொரு சகாப்தத்திலும் சோம்நாத் மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டது.  பல நூற்றாண்டுகள் நீடித்த போராட்டம், இவ்வளவு நீடித்த எதிர்ப்பு, இவ்வளவு அபரிமிதமான பொறுமை, படைப்பாற்றல், மறுகட்டமைப்பில் மீள்தன்மை, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கை உலக வரலாற்றில் ஈடு இணையற்றது. 



நமது முன்னோர்களின் வீரத்தை நாம் நினைவில் கொண்டு, அவர்கள் காட்டிய துணிச்சலில் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். நமது முன்னோர்களின் தியாகங்களும் துணிச்சலும் நம் மனதில் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 

|சோம்நாத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகவான் மகாதேவரின் பெயர்களில் ஒன்று மிருத்யுஞ்சய்.  அவர் மரணத்தை வென்றவர்.  அவரே காலத்தின் உருவகமானவர். சோமநாதத்தை அழிக்க முயன்ற படையெடுப்பாளர்கள்  வரலாற்றில் சில கருப்புப் பக்கங்களை எழுதி உள்ளனர். ஆனால் இந்தக் கோயில் இன்னும் உயர்ந்து நிற்கிறது.

சில வரலாற்றாசிரியர்களும் அரசியல்வாதிகளும் படையெடுப்புகளின் வரலாற்றை மறைக்க முயற்சித்ததாகவும், உண்மையை மறைக்கும் வகையில் புத்தகங்களை எழுதி உள்ளனர்.  சர்தார் படேல் சோம்நாத்தை மீண்டும் கட்டியெழுப்ப உறுதிமொழி எடுத்தபோது, அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1951-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் சோம்நாத்துக்கு வந்தபோது கூட ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக, சோம்நாத்தின் மறுகட்டமைப்பை எதிர்க்கும் சக்திகள் இன்றும் நாட்டில் தீவிரமாக உள்ளன. தற்போது இந்தியாவிற்கு எதிரான சதித்திட்டங்கள் வாள்களுக்குப் பதிலாக பிற வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையால் அனைவரும் விழிப்புணர்வு, வலிமை, ஒற்றுமை போன்றவற்றின் மூலம் பிரிவினை சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும்.

 

இந்த விழாவின் மேலும் மிக முக்கிய போட்டோக்கள்:





Comments

Popular posts from this blog

வள்ளுவம் 4 - குலம்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017