கடல் நீரில் எரியும் விளக்கு

இலங்கையில் உள்ள முல்லைத் தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை எனும் கிராமத்தில் உள்ள பத்தினித் தெய்வம் கண்ணகியின் கோயிலில் கடல் நீரில் விளக்கெரியும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

மதுரையை எரித்த கண்ணகி தெற்கு நோக்கிச் சென்ற போது, நந்திக் கடல் அருகே வந்த போது மிகுந்த பசி ஏற்பட அங்கே மாடு மேய்க்கும் சிறுவர்களிடம் தனக்கு பொங்கல் ஆக்கித் தருமாறு கேட்க, விளக்கேற்ற எண்ணை இல்லையே என்று தவிக்க, கண்ணகிகவலை வேண்டாம், கடல் நீரில் விளக்கேற்றவும்என்று சொல்ல அதன் படி கடல் நீரில் விளக்கெறிவதைக் கண்டு அதிசயித்தனர். இந்த நிகழ்ச்சியைத் தான் வற்றாப்பளைக் கோயிலில் இன்றும் ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

ஆண்டுதோறும் வைகாசி பெளர்ணமி அன்று இவ்விளக்குகளை எரிக்க தேவைப்படும் கடல் நீரை எடுக்கும் சடங்கை பாக்குத்தண்டம் என்று அழைக்கின்றனர்.

கடல் நீர் நிறம்பிய குடத்திற்குப் பூஜை செய்ய முள்ளிவலை கட்டா விநாயகர் கோயிலில் குடத்தின் வாய்ப்பகுதியை வெள்ளைத் துணியால் கட்டி நடுவில் துளையிட்டு திரி போட்டு விளக்கேற்றுவர்.

கடல் நீரில் விளக்கேற்றி எரிய வைப்பது என்பது ஒரு ஆச்சரியமான நிகழ்வு.

 

Comments

Popular posts from this blog

வள்ளுவம் 4 - குலம்

கண்ணகியின் மதுரை எரித்த பிரம்மாண்ட பிழை

குரு அஷ்டகம் ஆக்கம்: ஆதி சங்கர பகவத் பாதாள்