குலம்-வள்ளுவரின் கண்ணோட்டம் ஆக்கியோன்: எஸ். சங்கரன். 'சாதி' என்ற சொல்லே ஒரு வேண்டாத ஒன்றாக இப்போது கருதப்படுகிறது. அதை ஒழிக்க பலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதி, குலம், வர்ணம் ஆகிய வார்த்தைகள் ஒருவர் பிறந்த குடியினைக் குறிக்கும். சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், அந்த சாதியின் பெயரால் அரசியல் கட்சிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'எங்கள் சாதி ஜனங்கள் முன்னேற இது அவசியம்' என்பது அவர்கள் வாதம். 'எங்கள் சாதி மக்கள் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். படிப்பு, இருப்பிடம், சுகாதரம், வேலை வாய்ப்பு-இவைகளைப் பெற, தனி ஒதிக்கீடு இருந்தால் தான் எங்கள் சாதி மக்கள் முன்னேற முடியும். சுதந்திர இந்தியாவில் எங்களது ஜனத்தொகைக்கு ஏற்ப ஒதிக்கீடு சதவிகிதம் இருக்க வேண்டும்' என்ப்து தான் அவர்களின் கோரிக்கை. 'சாதியை ஒழுக்க வேண்டுமா?' என்ற கேள்வியே இப்போது அர்த்தமற்றதாகப் போய் விட்டது என்றுதான் பலருக்குப் படும். ஆனால், 'சாதியைப் பற்றி வள்ளுவரின் கருத்து என்ன?' என்பதை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். 'சாதிகள் இல்லையடி பாப்பா...
முன்னுரை: இந்த நீண்ட பதிவு எழுத பல உதவினாலும், சிலம்புச் செல்வரின் சிலப்பதிகார ஆய்வுரையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த ஆய்வுரையைப் படிக்க விழைபவர்கள் மேலே உள்ள தலிப்பினைச் சொடுக்கிப் படிக்கவும். கண்ணகியின் கதையை இளங்கோவடிகள் என்பவர் சிலப்பதிகாரம் என்று தலைப்பிட்டு இயற்றிய இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் கொண்ட ஐபெரும் காப்பியங்களில் இது ஒன்றாகும். (மற்றவை – மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி). இந்நூலில் இயல் இசை நாடகம் ஆகியவைகள் இருப்பதால், சிலப்பதிகாரம் நாடகக் காப்பிய மென்றும் புகழப்படுகிறது. அத்துடன் உரைப் பாட்டும் இசைப்பாட்டும் இடையிடையே இயற்றப்பட்டுள்ளதால், சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்னும் பெருமையையும் உடைத்து. இளங்கோவடிகள் ஒரு சமணமத்ததுறவி. அவர் துறவி ஆனதே தம் அண்ணாவான சேரன் செங்குட்டுவனுக்கு அரச பதவி கிடைக்காது – அது இளைவனான இளங்கோவிற்கே கிடைக்கும் என்று நிமித்தக்காரர் சொல்லவும் அதைப் பொய்யாக்க துறவு பூண்டு, தியாகச் செம்மலாகி, இளங்கோவடிகளானார். கண்ணகியின் கதையுடன் தொடர்புடையது மாதவியின் மகளான மணிமேகலையின் கதையாகும். அ...
குரு அஷ்டகம் ஆக்கம்: ஆதி சங்கர பகவத் பாதாள் ‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ - என்று மூன்று முறை ஆதி சங்கரர் திரும்பத் திரும்ப சிஷ்யனுக்குச் சொல்லி, குரு பக்தியின் அவசியத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இந்த குரு அஷ்டகம் ஒன்பது ஸ்லோகங்களைக் கொண்டது. உண்மையில் அது எட்டு ஸ்லோகங்களைக் கொண்டது என்று தான் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒன்பாதாவது ஸ்லோகம் ‘பலஸ்ருதி’யாக உள்ளது. மேலும், ‘குருவின் கமலப் பாதங்களில் உன் மனம் ஒன்றாவிட்டால், பிறகு என்ன பயன்? என்ன பயன்? என்ன பயன்?’ என்ற வரிகள் முதல் எட்டு ஸ்லோகங்களின் கடைசி வரிகளாக பொதுவாக உள்ளன. இதிலிருந்தும், ஆதி சங்கரர் குருஸ்தானத்திற்கு எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதும், சிருஷ்யர்கள் குருவை அடிபணிந்து, பணிவிடை செய்து, வேதம் படிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, அப்பொழுதான் ‘பயன்’ உண்டாகும் என்பதையும் அறிவுறுத்துகிறார் என்பதை உணரவேண்டும். குரு அஷ்டகம் – தமிழில் – தழுவலான மொழிபெயர்ப்பில் 1. சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்...
Comments