அக்ஷய திரிதியை திருநாள் – 29-04-2020 – சனிகிழமை



ட்சயஎன்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை, 'அட்சயதிரிதியைதிருநாளாகக் கொண்டாடுகின்றோம். இந்த வருடம் ஏப்ரல் 29 -ம் தேதி சனிக்கிழமை (சித்திரை-16) அன்று அட்சய திரிதியை வருகிறது.

அட்சயதிரிதியை சிறப்புகள் :

பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான்.
பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம்.

திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.

வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம்.

பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும்.  இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.

பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள்,  ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர்.  இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை

பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான்.

கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான்.

பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான்.  இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.

அட்சய திரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம்?

அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.  பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம்.

என்னென்ன பொருட்களைத் தானம் தரலாம்?

ஒரே இடத்தில் செல்வம் குவிந்திருப்பதை இறைவன் விரும்புவதில்லை. இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இல்லாமை நீங்கப் படைக்கப்பட்ட நாள்.

ஒரு கையளவு நெல் பல மூட்டை அரிசியை உருவாக்க முடியும் . அதே போல நாம் கொடுக்கும் சிறு தானமும் பல மடங்காகத் திரும்ப வரும்

இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள்.

Comments

Popular posts from this blog

வள்ளுவம் 4 - குலம்

கண்ணகியின் மதுரை எரித்த பிரம்மாண்ட பிழை

குரு அஷ்டகம் ஆக்கம்: ஆதி சங்கர பகவத் பாதாள்