பீஹார் அசம்பளி தேர்தல் முடிவுகள் - நவம்பர் 2025

பொதுவாக மக்கள் ஒரே கட்சியினை மீண்டும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் அமர்த்தும் அளவில் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒன்று என்பது தான் மீடியாவின் கணிப்பு. ஆனால் மோடி குஜராத்தில் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று மாநில முதல்வராகத் தேர்வு பெற்றார். அதே போல் மோடி பாரதப் பிரதமராக 2014 ஆண்டு தனிப் பெரும் கட்சியாக மொத்த சீட்டுக்களான 543-ல் 282 பெற்றும், 2019 ஆண்டு நடந்த அடுத்த லோக் சபா தேர்தலில் 303 இடங்களை பிஜேபி மட்டுமே பெற்றும், அதற்கு அடுத்த தேர்தல் 2024-லிலும் 240 இடங்களைப் பெற்றும் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது 'ஆண்டி இன் கம்பன்ஸி' என்ற ஆட்சிக்கு எதிரான மன நிலையை வென்று ஜெயித்துள்ளது மோடியின் ஆட்சிக்கு மக்களிடையே கிடைத்த ஆதரவாகும். அதற்கு மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார். 

பீஹாரிலும் நிதிஷ் குமார் கட்சியான ஜனதா தால் யுனைட்டட் - பிஜேபி கட்சியும் சேர்ந்து ஆட்சியில் இருந்து 2025 தேர்தலைச் சந்தித்தது.  'தேர்தலை நிதிஷ் குமார் தலைமையில் என்.டி.. கட்சிகள் சந்திக்கும்' என்றும், 'ஜெயித்தால் மீண்டும் நிதிஷ் குமார் தான் முதல்வர் வேட்பாளர்' என்பதையும் முன் வைத்தே தேர்தலைச் சந்தித்தது. அதற்கு  எதிர்பார்ததை விட மக்களின் ஆதரவு பெருகி மீண்டும் நிதிஷ் குமார் தலைமையில் என்.டி.. ஆட்சி பீடத்தில் அமர இருக்கிறது

வெற்றியின் அளவைப் பார்க்கும் பொழுது சென்ற ஐந்தாண்டு கால நிதிஷ் ஆட்சியை மக்களின் பெரும்பான்மையினர் ஆதரித்தது தெரியவருகிறது. மொத்தமுள்ள 243 இடங்களில் என்.டி.. 202 இடங்களில் வென்றுள்ளது. இது 83% என்பது இந்த வெற்றி சாதாரணமானதல்ல - பெரும் ஹிமாலய வெற்றி என்பதைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல - என்.டி.. வெற்றியும் பல இடங்களில் எதிர் கட்சிகளை விட அதிக ஓட்டுக்களைப் பெற்றே வென்றிருக்கின்றன. மேலும் இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் ஓட்டுப் போட்டுள்ளனர் என்பதையும் பார்க்க வேண்டும்

லல்லுவின் மகன் தேசஸ்வி யாதவின் ஆர்ஜேடி 135 இடங்களில் போட்டி இட்டு 25 இடங்களில் வெற்றி, வோட் சோர் யாத்திரை யுவ ராஜா காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டி போட்டு 6 இடங்களை மட்டுமே பெற்று பப்பு என்ற ராகுலும், டப்பு என்ற தேசஸ்வியும் தோல்வியில் சாதனை படைத்துள்ளனர்

 மிகவும் உரக்க சத்தம் போட்டு பிரசாரம் செய்த தேர்தல் யுத்தி நிபுணர் பிரசாந் கிஷோர் 238 இடங்களில் நின்று ஒரு இடத்திலும் ஜெயிக்காமலும், 236 இடங்களில் டெபாசிட் இழந்தும் மிகவும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.  இனி அரசியலிருந்து விளகுவதாகவே அவர் அறிவித்து விட்டார். இந்தத் தோல்வியினால் அவர் மிகவும் துவண்டு போய் விட்டது மீடியா போட்டோக்களைப் பார்த்தால் விளங்கும். ஒரு போட்டோ சாம்பில் இங்கு பிரசுரம்.   

இந்த தேர்தலில் பிஜேபிக்கு முஸ்லீம்கள் ஓட்டளித்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது. பீஹார் தேர்தல் நடக்க இருந்த முதல் நாள் இரவில் டெல்லியில் தீவிரவாத கார் மூலம் வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் (இதில் 13 பேர்கள் இறப்பு - 21 பேர்கள் காயம்) பிஜேபிக்கு முஸ்லீம் ஓட்டர்களின் ஆதரவு ஒரு அரசியல் திருப்பமாகும். படித்த டாக்டர்களே இந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகவும், களத்தில் நேரிடையாகவே தற்கொலைப் படைகளாக இறங்கும் மன நிலையையும் பார்க்கும் பொழுது 'எங்க முஸ்லீம்களுக்கு ஒரு நல்ல வழிகாட்ட ஒரு தேவ தூதன் பிறக்க மாட்டானா?' என்ற ஏக்கம் தீவிரவாதத்தை எதிர்க்கும் தேச பக்தி உள்ள முஸ்லீம்களுக்கு மனத்தில் எழுந்துள்ளதையே இது காட்டுகிறது. 

முஸ்லீம் திவிரவாதிகள் பம்பாய் குண்டு வெடிப்பு தினமான 26/11/2008 & பாபர் மசூதி இடிப்பு தினம் 06/12/1992 ஆகியவைகளுக்கு பழி வாங்க அந்த இரண்டு தினங்களான 26 நவம்பர் & 06 டிசம்பர் ஆகிய நாட்களில் இந்தியாவின் பல இடங்களில் வெடி குண்டுத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் போட்டதை நமது தேசிய பாதுகாப்பு வீரர்களின் தேடுதல் வேட்டையில் கண்டு பிடிக்கப்பட்ட பல வெடிபொருட்கள், விஷ மருந்துகள் போன்றவைகள் பிடிபட்டுள்ளதால் தெரிய வருகிறது. அயோத்தியா ராமர் கோயிலையும் குண்டு வைத்துத் தகர்க்கும் திட்டமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது நமது பாதுகாப்பாளர்களின் சிறப்பான முறியடித்த வெற்றியாகும். இதற்கு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது.   

அமைதியை விரும்பும் மக்கள் இதனால் மிகவும் கவலை கொண்டுள்ளனர். ஆனால் மோடியின் தலைமையில் பாரத மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. 

இந்த பிஹார் தேர்தலில் மோடி - நிதிஷ் குமார் இன்னும் பல தலைவர்கள் - குறிப்பாக மோடி என்ற ராமனுக்கு அனுமாராக தன்னை பாவிக்கும் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான்  (சென்ற அசம்பளி தேர்தலில் 1 இடத்தை பெற்ற கட்சி இந்த தேர்தலில் 29 இடங்களில் போட்டு போட்டு, 19 இடங்களில் வெற்றி பெற்று அபார சாதனை பெற்றுள்ளது) பல பெரிய பட்டாளமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  

சிராக் பாஸ்வான் இப்போது நிதிஷ் குமாரின் தலைமையை ஏற்றுள்ளார் என்பது ஒரு பெரிய அரசியல் திருப்பமாகும். அது என்.டி.. க்கு ஒரு புதிய பலம் கொடுக்கும் செயலாகும்.

 தேர்தலில் நிற்பதற்கு குறைந்தது 25 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். 25 - 07 - 2000 அன்று பீஹாரில் மதுபானியில் பிறந்த 25 வயதே ஆன மைதிலி தாக்கூர் என்ற இளம் பெண் வேட்பாளரை பிஜேபி களம் இறக்கி அவரை வெற்றி கொள்ள வைத்துள்ளது மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவர் பக்திப் பாடகர் என்பதால் மக்களிடையே பிரபலமாகி உள்ளார். 14 - 10 - 2025 -ல் தான் பிஜேபியில் சேர்ந்தார். உடனேயே தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றுவிட்டார். இது பிஜேபி கட்சியில் தான் நடக்கும் என்று பொது மக்கள் ஆச்சரியமும், பாராட்டும் தெரிவிக்கின்றனர். அவர் மீடியாவில் மிகவும் பிரபலமாகி விட்டார்

இந்த தேர்தல் பிரசாரத்தில் மோடியின் பங்கு மிகவும் அதிகம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்

மோடியின் பரம எதிரிகளான யோகேஷ் யாதவ் இந்தியா டுடே என்ற மீடியாவின் இன்னொரு மோடி எதிர்ப்பாளரான ராஜ்தீப் சர்தேசாயிடம் மனம் வெதும்பிச் சொன்னது: '2024 லோக் சபா தேர்தலில் மோடி என்.டி.. 400 இடங்கள் பெறும் என்று எதிர்பார்த்துச் சொன்னார். ஆனால் பெற்ற இடங்கள் 293 மட்டுமே. ஆனால் வருகிற 2029 லோக் சபா தேர்தலில் மோடி அரசு அந்த 400 இட இலக்கை அடைந்து விடும் நிலையில் உள்ளது.' 

மோடியின் உழைப்பும், மோடியின் உலகத் தலைவர்களிடம் கொண்டுள்ள நட்பும், பாரத தேசத்தின் உன்னதமான லட்சியமான 'முன்னேறிய இந்தியா 2027', பலமான ராணுவம், ஊழலற்ற மத்திய ஆட்சி, விண்ணையும் ஆளும் திறமையான இஸ்ரோ - நீண்ட பட்டியல் - ஆகியவைகள் அனைத்தும் பாரத தேச பக்தர்கள் அனைவரையும் பெருமை படச் செய்யும்.   

தேர்தல் களத்தில் மோடி என்றாலே அதில் அமித்ஷாவும் அடங்கும். ஏனென்றால் மோடியும் - அமித்ஷாவும் ஈருயிர் ஓருடல் என்ற அளவில் தேர்தலில் உழைப்பவர்கள். இது மாதிரியான இரட்டையர்கள் அரசியல் கட்சியில் இருப்பது அபூர்வம். இதுவும் என்.டி.. வெற்றிக்கு முக்கிய காரணமாகும்

இந்த அற்புதமான பீஹார் வெற்றிக்கு மூல காரண கர்த்தர்களான மோடி - நிதிஷ் குமார் ஆகியவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து, நல் ஆட்சி வழங்க விழைகிறோம்

ஜெய் ஹோ மோடி - ஜெய் ஹோ நிதிஷ் குமார்.  



Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017