பீஹார் அசம்பளி தேர்தல் முடிவுகள் - நவம்பர் 2025
பொதுவாக மக்கள் ஒரே கட்சியினை மீண்டும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் அமர்த்தும் அளவில் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒன்று என் பது தான் மீடியாவின் கணிப்பு . ஆனால் மோடி குஜராத்தில் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று மாநில முதல்வராகத் தேர்வு பெற்றார் . அதே போல் மோடி பாரதப் பிரதமராக 2014 ஆண்டு தனிப் பெரும் கட்சியாக மொத்த சீட்டுக்களான 543-ல் 282 பெற்றும், 2019 ஆண்டு நடந்த அடுத்த லோக் சபா தேர்தலில் 303 இடங்களை பிஜேபி மட்டுமே பெற்றும், அதற்கு அடுத்த தேர்தல் 2024-லிலும் 240 இடங்களைப் பெற்றும் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது 'ஆண்டி இன் கம்பன்ஸி' என்ற ஆட்சிக்கு எதிரான மன நிலையை வென்று ஜெயித்துள்ளது மோடியின் ஆட்சிக்கு மக்களிடையே கிடைத்த ஆதரவாகும். அதற்கு மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார். பீஹாரிலும் நிதிஷ் குமார் கட்சியான ஜனதா தால் யுனைட்டட் - பிஜேபி கட்சியும் சேர்ந்து ஆட்சியில் இருந்து 2025 தேர்தலைச் சந்தித்தது . ' தேர்த லை நிதிஷ் குமார் தலைமையில் என் . டி . ஏ . கட்சிகள் சந்திக்கும் ' எ...