தமிழனும் தலைநிமிர வாழ்த்துவோமே! ஆக்கம்: நைத்ருபன்.

 தமிழனும் தலைநிமிர வாழ்த்துவோமே!

ஆக்கம்: நைத்ருபன்.




1.

'கற்றது கைமண்ணளவு,

கல்லாதது, உலகளவு.' -

அவ்வையின் அமுதவாக்கு,

அனைவரும் அறியவேண்டும்.

2.

அன்னை மொழி அமுதம் தான்;

அறிவு வளர போதுமா அது, ஐயா!

அன்னிய மொழி தான் ஆங்கிலம்,

அவசியம் வேண்டும் அது, ஐயா!

3.

தாய் மொழிப் பற்று கொள்வோம்!

பிறமொழி வெறுப்ப தென்ன?

பிராந்திய மொழிகள் வேண்டும்!

பிறதேசத்து மொழிகள் கற்போம்!

4.

தாய்ப்மொழிப் பற்று மட்டும்,

தரணியில் தலைநிமிர,

போதாது, போதாது, போதாது!

போற்றுவோம் பல மொழிகளையுமே!

5.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்!'

யாம் போற்றும் தமிழ் மரபு,

தரணி மொழிப் பற்றுக்கு வித்திட்டு,

தமிழனும் தலை நிமிர வாழ்த்துவோமே!

 



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017