பெரியாரிஷ்டிகளின் சகிப்பின்மை
பெரியாரிஷ்டிகளின் சகிப்பின்மை
திராவிடக் கழகத்தின் தார் எழுத்துக்கள் தமிழ்நாட்டின் மூலை
முடுக்குகளிலெல்லாம் பெரிய பெரிய எழுத்துக்களில் பளிச் சென்று
எழுதப்
பட்டிருக்கும்.
'பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பார்ப்பானை
அடி.'
'கடவுளை நம்புவன் முட்டாள்.'
'கடவுள் இல்லை. இல்லவே இல்லை'
கடவுள் என்றால் எல்லா மதக் கடவுளா? என்று தி.க.வினரைக் கேட்டால்,
நேரிடையான பதில் கிடைக்காது. மற்றவர்கள் ஹிந்துமதக்கடவுளைத் தான்
தி.க.வினர் குறிப்பிடுகின்றனர் என்று நம்புவதையே தி.க.வினர்
விரும்புகின்றனர்.
சமீபத்தில் பழனி நகரில் ஹிந்து முன்னணி சார்பில் பெரியார் படத்துடன்
போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அந்தப் போஸ்டரில்
பெரியார் கூறுவது போன்று வியாசகம் இருந்தன.
'பிள்ளையாரை உடைத்த எனக்கு பிள்ளைகளே இல்லை.
சிலை வழிபாடு
வேண்டாம் என்றேன்.
எனக்கு தமிழகம் முழுவதும் சிலை அமைத்த திராவிடர் கழகத்
தொண்டனே, இன்று காக்கைகளுக்கு கக்கூசாக நிற்கிறேன்.'
போலீசில் இது குறித்து, தி.க.வினர் புகார் செய்ததால், போலீசார் அனைத்து
போஸ்டர்களையும் கிழிக்க
நடவடிக்கை எடுத்தனர்.
ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையும், திகவினரின் சகிப்பின்மையும்
வெட்டவெளிச்சமாகிவிட்டது.
Comments