6 நாட்கள் கந்தர் சஷ்டிவிரதம் – நவம்பர் 2021 - 4-ம் தேதியிலிருந்து 9-ம் தேதி சூர சம்ஹாரத்தோடு முடியும் விரதம்
முழு முதற் கடவுளான முருகன் ஜெயந்திநாதராக அசுர சக்திகளான
ஆணவ சூரனையும், கன்ம சிங்கனையும், மாயா மல தாரகனையும் அழித்து
பூமியில் தர்ம்ம் தழைக்கச் செய்த உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
அந்த ஆறு நாட்களிலும் விரதம் இருந்து, முருகன் புகழ் பாடி, ‘வெற்றி
வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேள் முருகனுக்கு அரோகரா, வேல்
வேல் – வெற்றி வேல், ஓம் சரவண பவ ஓம் – என்று வீரத்தோடு
பக்தியுடன் கோஷித்து உள்ளம் தூய்மை பெறுவார்கள் முருக பக்தர்கள்.
விரதம் இருக்க முடியாவிடினும், முருகன் புகழ் பாடிப் பிரார்த்தித்து அவன்
அருள் பெருவோமாக.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் வெற்றி மேல் வெற்றி வாழ்க்கை
முழுவதும் கிட்டப் பிரார்த்திக்கிறோம்.
Comments