உண்மை என்பது பொய்யாகும் எழுத்து: ஜயந்திநாதன்

 உண்மை என்பது பொய்யாகும்   எழுத்து: ஜயந்திநாதன்

உண்மை என்பது பொய்யாகும் என்ற தலைப்பு பலரையும் ஆச்சரியப்பட வைக்கும். ஆனால் அது தான் உண்மை. நீங்கள் அதை நம்பித்தான் ஆக வேண்டும்.

உண்மை இது தான்: நாம் எல்லாம் பொய்யர்கள்.

இது புராதன காலத்திலிருந்தே இருப்பதாகப் படுகிறது.

மஹாபாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடக்கிறது. குருக்ஷேத்திரத்தை 'தர்ம' க்ஷேத்திரம் என்று தான் சொல்கிறார்கள். உண்மை க்ஷேத்திரமாகச் சொல்ல வில்லை. உண்மை வேறு தர்மம் வேறு.

'யாதும் தீமை இலாத சொலல்' என்ற வள்ளுவ வாக்கு வாய்மைக்கு ஒரு இலக்கணமாக அமைகிறது. இது தர்மம். ஆனால், சொல்லும் சொற்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பதை மறுக்க முடியாது.

இதற்கு எல்லோரும் சொல்லும் ஒரு உதாரணம் ஒன்று உண்டு.

ஒருவனைக் கொல்ல ஒரு கொலையாளி அவன் வீட்டிற்கு வருகிறான். வாசலில் காவல் காக்கும் காவலாளியிடம், உன் எஜமான் வீட்டில் இருக்கிறானா?' என்று கேட்கிறான். அதற்கு அந்தக் காவலாளி, 'இல்லை. அவர் வெளியூர் சென்றுள்ளார்' என்று பொய் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் சொல்வது தர்மத்தின் பால் விளைந்த உண்மை. இருப்பினும்சொல்லால் அவன் கூறியது என்னவோ பொய் தான். இங்கு பொய் தான் மெய்போல் போற்றப் படுகிறது.

மஹாபாரத யுத்ததில் துரோணரை அழிக்க கிருஷ்ணன் ஒரு யுத்தி செய்கிறான்.

துரோணருடைய பிள்ளை பெயர் அஸ்வத்தாமன். ஒரு யானையின் பெயரும் அஸ்வத்தாமன்.

அஸ்வத்தாமன் என்ற யானை வீழ்த்திக் கொல்லப்பட்டதை, வீரர்கள் 'அஸ்வத்தாமன் இறந்து விட்டான்' என்று உரக்கக் கூவிக் கொண்டாடு கின்றனர். அதைக் கேள்விப் பட்டு, துரோணர் தன் பிள்ளையே இறந்து விட்டானோ என்று ஐயப்படுகிறார்.

தர்மர் பொய் சொல்ல மாட்டார். ஆகையால், தர்மர் வாயால் உண்மையை அறிய ஆசைப்படுகிறார்.

தர்மர் உண்மையைத் தான் உரக்கச் சொல்கிறார்.

'அஸ்வத்தாமா ஹத குஞ்சரக' என்பது தான் தர்மர் சொன்னது.

ஆனால், 'குஞ்சரக' என்ற சொற்கள் துரோணருக்குக் கேட்காத படி தன் சங்கை ஊதி விடுகிறான் கிருஷ்ணன்.

'அஸ்வத்தாம ஹத' - அதாவது 'அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்' என்ற இரு வார்த்தைகள் தான் துரோணர் காதில் விழுகின்றன. புத்திர சோகத்தால், பலம் இழந்து, போரில் உயிரிழக்கின்றார்.

யுத்தியால் உண்மையான சொற்களும், உருக்குலைந்துவிடுகிறது. இது தர்மத்தைக் காப்பதற்காக என்று சமாதானம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது.

வழி வழியாக வந்த ஒரு கதை ஒன்று உண்டு. ஒரு ராஜா, 'மிகப் பெரிய பொய்யனுக்கு ஒரு பெரிய பரிசு' என்று அறிவித்தார்.

பலரும் பலவிதமான பொய்களைக் கூறினார்கள். 'நான் சூரிய கிரகத்திற்குச் சென்று திரும்பி உள்ளேன்.'; 'நான் சொர்கத்திற்குச் சென்று, இப்போது தான் திரும்பி வந்தேன்.'; 'நான் கடவுளைச் சந்தித்தேன்.'

இவைகளை எல்லாம் கேட்ட ராஜா பரிசுக்கு இவைகள் உகந்ததாகத் தேர்வு செய்ய வில்லை.

திடீரென்று ஒருவன் ராஜாவின் முன் தோன்றினான். அவன் அரசவையில் சொன்னான்: ராஜா, நான் என் வாழ்நாளில் ஒரு பொய் கூட இதுவரை சொன்னது இல்லை!

ராஜா உடனே அவனைப் பார்த்துச் சொன்னார்: இதோ, பிடி பரிசினை!

ஆகையால், 'பொய்யே பேசியதில்லை' என்றதுதான் ஒரு பெரிய பொய்யாகிப் பரிசினைப் பெறத் தகுதியினைப் பெறுகிறது. இது தான் பெரிய உண்மையாகும்!

இந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகப் பார்க்கப்படும் 'ரியாலிட்டி ஷோ' நன்மையைவிட தீமைகளைத் தான் ஏற்படுத்தப் போகிறது.

'என்னைத் தோலுருத்துக் காட்டுகிறேன், பார்' என்று சொல்லும் பல பிரபலங்கள் இதனால்தங்கள் சொந்த பந்தங்களுக்கு மனக் கஷ்டத்தையும் துக்கத்தையும் கொடுக்கிறார்கள்.

'ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு சாத்தான் ஒலிந்து கொண்டிருக்கிறான். அவனை வெளியே விடாதீர்கள்!' என்ற உண்மையைணரவேண்டும்.

முழுத் தூய்மையும், முழு உண்மையும் மனிதராகப் பிறந்தவர்களிடம் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த நிலை அடைந்தால், அவன் வாழ்வு இவ்வுலகில் முடிவடைந்து விடும்.

சில உண்மைகள்றங்கினால் தான் உலகம் நிம்மதியாக உறங்க முடியும். தூங்கிக் கொண்டிருக்கும் அந்த சாத்தானை எழுப்பி, உங்கள் மற்றும் உங்களைச் சார்ந்தோருடைய நிம்மதியைக் கெடுத்து, நரக வாழ்வை உண்டாக்காதீர்கள்.

உண்மையை விட உயர்ந்ததுங்கள் நிம்மதி. 

சில சமயங்களில் உண்மையைறங்க விடுவது தான் உத்தமம்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017