திராவிட முன்னேற்றக் கழக ஸ்டாலின் அரசின் ஹிந்து விரோத செயல்கள்

 



கோவில் என்பது ஹிந்து மதத்தின் முக்கியமான அம்சம். ஹிந்துவின் வாழ்வே கோயிலைச் சுற்றித் தான் இருக்கும். ஆகையால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முது மொழி காலம் காலமாக வழக்கில் உள்ளது.

சடங்குகள், திருவிழாக்கள் அனைத்தும் ஊர்க்கோயிலை மையமாக வைத்துத்தான் நிகழும். கோயில்கள் பக்தியின் ஊற்றுக் கண்ணாக விளங்கி, ஹிந்து தர்மத்தை நமக்கு போதிக்கிறது. உபன்யாசங்கள், கலை நிகழ்ச்சிகள், கல்வி போதிக்கும் கூடங்கள், சடங்குகள் நேர்த்திக் கடன்கள் ஆகிவைகளை நிகழ்த்தும் இடங்கள் என்று  கோயில்கள் தான் ஹிந்துவின் மையதர்மஸ்தலமாக விளங்கியது.

ஆட்சி செய்த அரசர்கள் அனைவரும் கோயில்குளம்அன்ன சத்திரம்சாலை அமைத்தல் போன்ற தர்ம காரியங்களைச் செய்யும் போது முதலில் கோயில் கட்டுவது தான் முக்கியமானதாக முதலிடம் பெறுகிறது. ஆகம விதிகளின்படி கோயில்கள் கட்டி, விக்கிரகச் சிலைகளை உருவாக்கி, அங்கு நித்திய பூஜைகள் முறையாக நடக்க வேதம் பயின்ற பிராமணர்களை நியமித்து, பல நிலங்களை மான்யமாக கோயிலுக்கு அளித்து ஹிந்து சமயத்தைக் காத்தார்கள்.

தமிழ்நாட்டை பல அரசர்கள் ஆண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் வசிப்பதற்கு ஆடம்பரமான அரண்மனைகளைக் கட்டியதாகத் தெரியவில்லை. ஏனென்றால் தமிழ் நாட்டில் அரசர்களின் அரண்மனை என்று சொல்லும் அளவுக்கு எந்தக் கட்டிடமும் இல்லை. ஆனால் வட இந்தியாவில் அரசர்களின் அரண்மனைகள் தான் பிரமாண்டமாகவும், கோயில்கள் பல சிறியவைகளாகவும் உள்ளன. 

ஹிந்து மதமும், ஹிந்து தர்ம்மும் தழைக்க கோயில்கள் அதில் உறையும் தெய்வங்கள் நித்திய பூஜையோடு நன்றாக பராமரிக்கப்படவேண்டும் என்பதில் தமிழ் மன்னர்கள் அனைவரும் ஒன்று பட்டு ஆட்சி செய்துள்ளார்கள். இந்தக் கோயில்களால் சிற்பக்கலையும் சிறப்பாகத் தழைத்துள்ளது.

சிவன் சொத்தைத் திருடினால், குல நாசம் என்பார்கள். கோயில் என்றாலே பக்தியோடு சென்று, தரிசித்து, ஆண்டவன் அருளை வேண்டி பிரார்த்தித்து வாழ்வை சிறப்பாக்க விழையும் மக்கள் தான் அப்போது இருந்தார்கள். சிலைகள் திருட்டோ, சிலைகளை உடைப்பதோ நடந்த்தில்லை. இந்த விஷ விதைகளை அன்னிய மதங்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு தான் ஹிந்து மதத்திற்கும், ஹிந்து கோயில்களுக்கும், ஹிந்து சிலைகளுக்கும் ஞானி உண்டாக்க விதைத்தது பல நூற்றாண்டுகளாகியும் முடிவில்லாமல் பெரிய விருஷ்டமாகி வளர்த்து விட்டது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் அரசர்கள் ஹிந்துக்கோயில்களின் சொத்துக்களை கொள்ளை அடிப்பதும், கோயில் சிலைகளை உடைப்பதும், கோயில் நகைகளை சூறையாடுவதும் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. அதோடு ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதும் நடந்துள்ளது.

ஹிந்துக்களாலும், அப்போது ஆண்ட ஹிந்து அரசர்களாலும் இந்த அநியாயத்தை எதிர்த்துப் போரிட முடியவில்லை.

பகவான் காப்பாற்றுவார். தர்மம் காப்பாற்றும். பகவான் மீண்டும் அவதாரம் எடுத்து இந்த அன்னியர்களை அழிப்பார் ஹிந்துமத்தைக் காப்பார்என்று தத்துவம் பேசியே வாளெடுத்துப் போரிட்டு இந்தியாவையும் ஹிந்துக் கோயில்களையும் காப்பாற்றத் தவறி விட்டனர் அப்போதைய ஹிந்து அரசர்கள், மக்கள் அனவரும்.

புத்தர் போதித்த அஹிம்சா தத்துவமும் சேர்ந்து ஹிந்துக்களை வீரமற்றவர்களாகவும், கோழைகளாகவும், கொள்கை அற்றவர்களாகவும் ஆக்கிவிட்டன.

ராமர் பிறந்த புண்ணிய பூமியில் கட்டியிருந்த கோயிலை இடித்துத் தள்ளி மசூதியைக் கட்டினான் பாபர். அந்தக் கட்டிடம் தொழுகை இன்றி பாழும் கட்டிடமாகவே பல நூற்றாண்டுகள் இருந்துள்ளன. அந்த பாபர் மசூதி ஹிந்து எழிச்சியால் தரைமட்டமாக்கப்பட்டதற்கு உலகமே ஹிந்துக்களைத் திட்டித் தீர்த்தது.

ராமர் கோயிலை இடித்து எழிப்பிய மசூதியை மீண்டும் ராமர் கோயில் கட்டத்தானே                இடித்தார்கள்!’ என்ற உண்மை கூட உணரப்படவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டது தர்மம் தான் என்ற மனநிலையில் உள்ள சில இந்துக்களை ஹிந்துத்துவா வாதிகள்என்று இகழ்ந்து அவர்களை இந்துக்களிலும் பலர் மதிப்பதில்லை. பிற மதத்தினரோ ஹிந்துக்கள் பெருவாரியான ஜனத்தொகை கொண்டவர்களாக இருப்பினும்ஒற்றுமை இல்லாத காரணத்தால், மீண்டும் மீண்டும் முஸ்லீம் மதத்தினர் தங்கள் பணம், பிரசாரம், மூளைச் சலவை ஆகியவைகளால் நம் கோயில் வழிபாடுகள், சிலை வழிபாடுகள், சம்பரதாயங்கள், சடங்குகள் அனைத்தையும் துவம்சம் செய்ய தொடர்ந்து முயன்று வருகிறார்கள். அதற்கு சில அரசியல் கட்சிகளையும் அரவணைத்து வெற்றி பெற்று வருகிறார்கள்.

அதற்கு நாஸ்திக வாதம் உள்ளத்திலும், ஒருவனே தேவன்என்று உதட்டளவில் ஓட்டிற்கு கூவும் திராவிடக் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுடன் சில தோழமைக் கட்சிகளும் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்தவுடன் ஹிந்து விரோதப் போக்கு அபரிமிதாகப் போய் விட்டது.

பெரியாரின் நாத்திக முள்ளை தமிழ் நாட்டில் கோயிலை ஒரு அரசாங்க அலுவல் போல் ஆக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஆட்சி ஈடுபட்டுள்ளது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழில் கட்டாய அர்ச்சனை, கோயில் நகைகளை உருக்குதல் என்று ஹிந்து மதத்திற்கு அடிமேல் அடியாக சம்மட்டி கொண்டு ஸ்டாலின் அரசு ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கோயில்களையும், ஹிந்து வழிபாட்டு முறைகளையும் அடித்து அராபிய முஸ்லீம் அரசர்கள் போல் கோலோட்சுகிறது. இந்த அரசின் வலுவான ஹிந்துமத எதிர்ப்பு நடவடிக்கைகளால் தூண்டப்பட்டு பல கோயில்களின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் அரசு மே மாதம் பதவி ஏற்ற பிறகு 5 இடங்களில் கோயில் சிலைகள் உடைப்பு, சிலைகள் அவமதிப்பு நடந்துள்ளன.

ஜூன் மதம் – 3, ஜூலை மாதம் – 1, செப்டம்பர் மாதம் – 1 என்ற அளவில் இந்த அராஜகம் நடந்துள்ளது. விழுப்புரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி,  ராணிபேட், பெரம்பலூர் என்று நடந்த இடங்களும் பரவலாக உள்ளன.

இந்த அராஜத்தை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல் படங்களையும் வாசகர்களின் முன் படைக்கிறோம்:

1. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழானஞ்சூர் கிராமத்திலுள்ள கைலாசநாதர் சிவன் கோவிலில் சிவன், கணேசர், பார்வதி, நந்தி ஆகிய சிலைகள் மூர்க்கமான முறையில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது சோழ மன்னர் குலோத்துங்கன் மூன்றாவது அரசரால் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த கோயில்.


2. பெரம்பலூர் மாவட்டத்தில் சிவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், சிவாச்சூர் பெரியாண்டவர் கோயில் விக்கிரங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த இடிபாடுகளைப் பார்த்தால் உங்கள் உள்ளம் கொதிக்கும்.

சிவாச்சூர் காளியம்மன் காஞ்சி மஹா பெரியவாளின் குலதெய்வம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கோயில் தமிழ்நாட்டு அரசின் ஹிந்து அறநிலைத் துறையின் கீழ் நிர்வகிப்படுகிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று ரத்தக் கண்ணீர் விட வைக்கும் புகைப்படங்கள்



3. திருநெல்வேலி மாவட்டம் ஆத்திரி குன்றில் இருக்கும் குடைவறைக் கோயிலில் இருக்கும் பாறையில் முஸ்லீம் மதச் சின்னமான பிறை யுடன் அல்லா என்ற எழுத்தும், 786 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டு கோயிலின் புனிதத்தை மாசுபடுத்தியுள்ளார்கள். அந்தக் குன்றில் உள்ள அருள்மிகு அனுசுயாதேவி சமேத ஆத்திரி பரமேஸ்வரர் கோயில் மற்றும் கோரக்கார் கோயிலும் ஹிந்து சமய அறம்காவலர் துறையில் கீழ் பராமரிக்கபடுகிறது. அந்தக் குன்றைச் சுற்றி ஓடும் காதனா என்னும் நதி நீர்வற்றா ஆத்திரி கங்கா தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. அபூர்வ வெள்ளை ஆமை வாசம் செய்யும் நதியாகவும் இருக்கிறது



4. ராணிபேட்டையில் இருக்கும் கோண்டாபுரம் கிராமத்தில் இருக்கும் கோயில் அம்மன் மற்றும் துர்கா சிலைகள் மிகவும் அருவருக்கத்தக்க முறையில் புனிதமான அம்மன் சிலைகள் கெடுக்கப்பட்டுள்ளன. அம்மன் சிலைகளை அலங்கரித்த ஆடைகளைக் களைந்து, தங்கள் விந்துவை வெளிக்கொணர்ந்து காமக் களியாட்டம் ஆடி இருக்கிறார்கள் அந்த அயோக்கியர்கள்.  


கையிலே வேலெடுத்து ஓட்டு வாங்கி வென்று முதல்வராக அமர்ந்திருக்கும் ஸ்டாலின் தான் பெரியாரிஸ்ட் என்பதை தான் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வெளிப்படுத்தி விட்டார். அதற்கு சரியாக ஒத்து ஊத அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் எள் என்பதற்குள் எண்ணையாக செயல்படுகிறார்.

இவ்வளவு அராஜகங்கள் நடந்த போதிலும் இந்த அரசு ஹிந்துக்களுக்கு நியாயம் வழங்கும் என்று நம்புவது முட்டாள் தனம். ஹிந்துக்கள் ஒரே அணியாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டால் ஒழிய ஹிந்துக் கோயில்களுக்கு பாதுகாப்பு என்பது பகல் கனவாகத் தான் இருக்கப் போகிறது.

ஹிந்துக்கள் ஒற்றுமையுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டிய கால கட்டம் இது.

வாய்மை ஸ்டாலின் அரசை இதற்குப் பொறுப்பாக்கி குற்றம் சுமத்துகிறது. அதற்குத் தண்டனையாக இரு குழல் துப்பாக்கி போல் ஒன்றாகச் செயல்படும் ஸ்டாலின்சேகர்பாபு இருவருக்கும் முள் கீராடமும், சவுக்கும் கொடுத்து (கவுக்கால் அவர்களே தங்களுக்குத் தண்டனை கொடுக்க வசதியாக வழங்குகிறது சவுக்கை )வன்மையாக தமிழக அரசைக் கண்டிக்கிறது












































Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017