குலம்-வள்ளுவரின் கண்ணோட்டம் ஆக்கியோன்: எஸ். சங்கரன். 'சாதி' என்ற சொல்லே ஒரு வேண்டாத ஒன்றாக இப்போது கருதப்படுகிறது. அதை ஒழிக்க பலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதி, குலம், வர்ணம் ஆகிய வார்த்தைகள் ஒருவர் பிறந்த குடியினைக் குறிக்கும். சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், அந்த சாதியின் பெயரால் அரசியல் கட்சிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'எங்கள் சாதி ஜனங்கள் முன்னேற இது அவசியம்' என்பது அவர்கள் வாதம். 'எங்கள் சாதி மக்கள் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். படிப்பு, இருப்பிடம், சுகாதரம், வேலை வாய்ப்பு-இவைகளைப் பெற, தனி ஒதிக்கீடு இருந்தால் தான் எங்கள் சாதி மக்கள் முன்னேற முடியும். சுதந்திர இந்தியாவில் எங்களது ஜனத்தொகைக்கு ஏற்ப ஒதிக்கீடு சதவிகிதம் இருக்க வேண்டும்' என்ப்து தான் அவர்களின் கோரிக்கை. 'சாதியை ஒழுக்க வேண்டுமா?' என்ற கேள்வியே இப்போது அர்த்தமற்றதாகப் போய் விட்டது என்றுதான் பலருக்குப் படும். ஆனால், 'சாதியைப் பற்றி வள்ளுவரின் கருத்து என்ன?' என்பதை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். 'சாதிகள் இல்லையடி பாப்பா...
Comments