2021 ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெறுபவர் – தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரஸாக் குர்னாஹ் (வயது 73)
குர்னாஹ் தமது 18-வது வயதில் தாம் பிறந்த சொந்த நாடான தான்சானியாவை விட்டு 1960 வருடத்தில் பிரிடிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றவுடன் நடைபெற்ற வன்முறை – கலவரங்களால் பிரிட்டனில் குடிபெயர்ந்தார். அவரது தாய் மொழி தான்சானியாவில் பேசப்படும் ஸ்வாஹிலி. ஆனால் அவர் ஆங்கிலத்தில் தான் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இனி மேல் தான் அவரது நூல்கள் ஸ்வாஹிலி மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அவர் கதைகள், கட்டுரைகள், நாவல்கள் அனைத்தும் அகதிகளை முன்னிலைப்படுத்தியே எழுதப்பட்டவைகளாகும்.
அவர் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயங்கும், மறுக்கும் பல ஐரோப்பிய நாடுகளின் மன நிலைகளை மூர்க்கமாகச் சாடுகிறார்.
‘அகதிகளுக்கு இடம் அளித்தால் ஏதோ தங்களால் பல இடங்களுக்குச் செல்ல முடியாமல் போய்விடும் என்பது போல் கஞ்சத் தனமாக – சுயநலமாக எதிர்க்கிறார்கள். பல நாடுகளிலிருந்து வரும் அகதிகள் ஒன்றும் வெற்றுக்கைகளோடு வரவில்லை. அகதிகளில் பலர் திறமைசாலிகள். உழைக்கும் குணமுள்ளவர்கள். ஆகையால் அடைக்கலம் கொடுத்த நாட்டிற்கும் அந்த அகதிகளால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும். அகதிகளை ஏழையின் அவதாரமாகவும், ஒன்றுக்கு உதவாதவர்களாகவும் நினைக்க வேண்டாம். முதலில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுங்கள். பிறகு அவர்கள் உங்களுக்கு வழங்கும் வள்ளல்களாக இருப்பார்கள்.’
குர்னாஹின்
நாவல்களில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய பாரடைஸ் மற்றும் டெசெர்வேஷன் ஆகியவை
குறிப்பிடத்தக்கவை, இவர் இப்பொழுதும் பிரிட்டனில் வசித்து
வருகிறார்.
ஸ்வீடன்
நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு
வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படிக் குறிப்பிட்டப்பட்டுள்ளது: “கலாச்சாரங்கள் மற்றும்
கண்டங்களுக்கு இடையேயான வளைகுடா நாடுகளில் அகதிகள் குறித்து இவர் எழுதிய
புத்தகத்திற்காக அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.”.
Comments