வால்மீகி ஜென்ம தினம் – 20 – 10 – 2021 – புதன் கிழமை
வால்மீகி
அஸ்வின் மாதத்தின் முழு நிலவில், மகரிஷி வால்மீகி சுமார் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முன்பு வேடுவர் என்ற மிகவும் பிற்படுத்தப் பட்ட
குலத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது.
அவரது அப்பா
பெயர் சர்சானி. அம்மா பெயர் சுமாலி. அவரது இயற்பெயர் ரத்னாகர். கொள்ளை – கொலை
என்பது தான் அவர் தொழிலாக இருந்தது.
ஒரு சமயம்
ரத்னாகர் நாரத முனிவரிடம் கொள்ளை அடிக்க முயன்றபோது, நாரதர்
‘ஏன் இந்தக் கொள்ளைத் தொழில் செய்கிறாய்?’ என்று வினவ
ரத்னாகர் ‘என் குடும்பத்தைக் காப்பாற்ற’ என்று விடை பகிர்ந்தான். ‘நீ செய்வது பாப
காரியம். இந்தப் பாவ காரியத்தில் பயன்பெறும் உன் உறவினர்கள் உன் பாபத்தில் பங்கு
கொள்வார்களா?’ என்று கேட்டதற்கு ரத்னாகர் ‘நான்
கொள்ளை அடிக்கும் பொருட்களை அனுபவிப்பவர்கள், இதனால்
ஏற்படும் பாவத்திலும் அவர்கள் பங்கு கொள்வார்கள்’ என்று சொன்னவுடன் ‘நீ இதை உறுதி
செய்ய அவர்களிடம் கேட்டு பிறகு வா’ என்று நாரதர் சொல்ல, ரத்னாகர்
அவனது உறவினர்கள் ‘நீ செய்யும் பாவத்தில் பங்கு பெறமாட்டோம்’ என்ற பதிலைக் கேட்டு
அதிர்ந்தான். நாரத மகரிஷியிடம் சரணடைந்து ராம நாமத்தையே சரியாக உச்சரிக்காமல்
‘மரா’ என்று சொல்லியே பல காலம் தவம் இருந்து புற்று மண் அவரை முழுவதும்
மூடிவிட்டது. அவரது தவத்தினை மெச்சிய பிரம்மா ‘நீ உயந்த முனியாகி விட்டாய். இனி நீ
வால்மீகி என்று போற்றப்படுவாய்’ என்று அருள் புரிந்தார். வால்மீகி என்றால் கறையான்
புற்றிலிருந்து தோன்றியவர் என்று பொருள்.
வால்மீகியைத்
தான் சம்ஸ்கிரத பாஷையின் ஆதி கவி என்பர். அவர் இயற்றிய
சம்ஸ்கிரத ஸ்லோகம் தான் அந்த தேவ பாஷைக்கு
முதல் ஸ்லோகமாகப் போற்றப்படுகிறது.
அந்த ஸ்லோகத்தை
வால்மீகி இயற்றக் காரணமாக இருந்த்து ஒரு சோக காட்சியாகும். வால்மீகி கங்கை ஆற்றின்
அருகில் தாமசா என்ற ஓடையில் இறங்கி
ஸ்நானம் செய்யும் போது, அந்தக் குளத்தில் ஆண் – பெண் கொக்குகள்
இன்பசாகரத்தில் மூழ்கி இருக்கும் பொழுது வேடன் எய்த அம்பால் பெண் கொக்கு இறக்க,
அந்த துக்கத்தில் ஆண் கொக்கும் உயிரை விட்டது. இந்தக் காட்சி
வால்மீகியின் உள்ளத்தை உருக்கியது. அம்பு எய்து கொன்ற வேடனை வால்மீகி
ஆறாத்துயரத்தில் மூழ்கிய நிலையில் அந்த வேடனைச் சபிக்கும் விதமாக ஒரு சம்ஸ்கிரத
பாடலைப் பாடினார்.
அந்தப் பாடல்
தான் இது:
मा निषाद प्रतिष्ठां
त्वमगमः शाश्वतीः समाः।
यत्क्रौञ्चमिथुनादेकमवधीः
काममोहितम्॥'
mā niṣāda pratiṣṭhā tvamagamaḥ śāśvatīḥ samāḥ
yat krauñcamithunādekam avadhīḥ kāmamohitam[19]
இதன் பொருள்:
எல்லை இல்லா பல நீண்ட வருடங்கள் நீ நிம்மதி இழந்து உழல்வாய்.
ஏனென்றால் ஒரு
காதல் வயப்பட்டு களித்திருக்கும் ஒரு பறவையை நீ கொன்று விட்டாய்.
ஆதிகவி வால்மீகி
இயற்றிய இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு
காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை
விளக்குகின்றன. அவை:
1. பால
காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி,
திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.
2. அயோத்தி
காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த
காலத்துக் கதைப் பகுதி.
3. ஆரண்ய
காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும்.
4. கிஷ்கிந்தா
காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில்
இராமனது வாழ்க்கை.
5. சுந்தர
காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே
சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.
6. யுத்த
காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.
7. உத்தர
காண்டம்: இராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு
அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.
வால்மீகி ராமர்
காலத்தில் வாழ்ந்தவர். ராமரின் மனைவியையும், லவ-குச
என்ற அவர்களது பிள்ளைகளையும் தமது ஆசரமத்தில் வைத்து காப்பாற்றியவரும் வால்மீகி
ஆவார். லவ-குச என்ற இரு சிறுவர்களுக்கும் குருகுலக் கல்வி, வில்-வித்தை
போன்ற க்ஷத்திரிய தர்மத்திற்கு உகந்த போர்ப்பயிற்சியையும் கற்பித்த குருவாகவும்
திகழ்பவர்.
ஜெய் வால்மீகி !
ஜெய் ஸ்ரீராம். ஜெய் சீதா தேவி ! ஜெய்
லவ – குச !
Comments