தவத்தின் தரம்

தவத்தின் தரம்

தவம், தவத்தின் குணம் இவைகளை அற்புதமாக விவரிக்க இரண்டு உபமானங்களை வள்ளுவர் உபயோகிக்கிறார்.

அவைகள் தான் இவைகள்:
1. சுடச் சுடத் தீயில் வாட்டிய தங்கத்தின் ஒளி அது தீயின் ஜ்வாலையையும், சுடும் நேரத்தையும் பொறுத்திருக்கும் என்பதை தவத்திற்கு பொருத்தி விளக்குகிறார்.
2. சிவந்த குன்றிமணியின் மூக்கில் உள்ள கருமையை தவத்தின் கருமையாக்கி விடுகிறார்.

துறவுக்குத் தவம் வேண்டும்.

தவம் என்றால் என்ன?

உடலை வருத்தி உணவைச் சுருக்கி, காற்று, பனி, வெயில், மழை இவைகளால் உடலை வருத்தி உள்ளத்தின் தீய எண்ணங்களைப் பொசுக்கித் தூயதாக்கி ஞானச் சுடராகத் திகழும் நிலைதான் தவம். அது தான் துறவியின் உன்னத நிலை.

துறவி தன் உடலைத் துன்பத்தால் சுடச் சுடச் தான் பாபம் நீங்கி ஞானம் பிறக்கும் என்கிறார் வள்ளுவர். அதைச் சொல்லும் பொழுது தங்கத்தை உபமானமாகச் காட்டுகிறார். பொன்னை அதாவது தங்கத்தை உருக்க உருக்கத் தான் -அதாவது வள்ளுவர் வாக்கில் சொல்வதானால், பொன்னை சுடச் சுடத் தான், பொன்னில் உள்ள அழுக்குப் போய் தக தக வென்று தங்கம் ஒளிவிடும். அழுக்கான தீய எண்ணங்கள் தீயின் ஜ்வாலையில் பொசுக்கி ஞானம் பெற்ற தூய துறவும் அந்தத் தங்கத்தைப் போல் ஜொலிக்கும் என்கிறார் வள்ளுவர்.

அந்தத் தீயானது மனத்தின் அழுக்கை முழுதும் பொசுக்கி விடுமா? துறவிகள் அனைவரும் முழுத் தூய்மை உடையவரா? என்ற கேள்விகளை வள்ளுவர் எழுப்புகிறார். அதற்குப் பதிலையும் கொடுக்கிறார். முற்றும் துறவிக்குக் கூட ஒரு துளி இருண்ட மனம் உண்டு என்று எச்சரிகை செய்கிறார். எவ்வளவு தான் உடலைச் சுடச் சுடச் துன்பம் படும்படிச் செய்தாலும், மனத்தின் இருளை முழுதும் நீக்க முடியாது.

அதற்குச் சொல்லும் உபமானம் தான் ஜோர்.சிவப்பான குன்று மணியைப் பார்திருப்பீர்கள். நல்ல சிவப்பான குன்றுமணியின் மூக்கில் கருப்பான நிறம் இருக்கும். அந்தக் கருப்பின் அளவு ஒவ்வொரு குன்று மணிகளிலும் மாறுபட்டிருப்பினும், எல்லா குன்றுமணியிலும் ஒரு சிறிய கடுகளவாவது மூக்கில் கருப்பு காணப்படும். அது இயற்கையின் அம்சம். இப்படித் தான் துறவிகளும் இருப்பார்கள். புறத்தே குன்றுமணியின் சிவப்பு நிறத்தைப் போல் அதிகமாக தூய்மை உள்ளவர்களாக இருந்த போதிலும், குன்றுமணியின் மூக்கில் உள்ள சிறிய கருமைபோல் இருண்ட மனதை உடையாரும் உலகத்தில் உளர் என்று வள்ளுவர் மக்களை எச்சரிக்கிறார்.இருப்பினும் தவம் வலிது. தவசிகள் அறத்தின் அம்சம்.(குறள்: 267. 277)

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017