திருக்குறளில் உபமானங்கள்

திருக்குறளில் உபமானங்கள்

உபமானங்கள் என்பது ஒரு பொருளைப் புரியவைப்பதற்கு மிகவும் சிறந்த அணியாகும். அணி அதை அணிபவர்களுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாகும். அதே போல் தான் பாடல்களில் கையாளப்படும் உவமை அணிகள் அந்தப் பாடல்களுக்கு அழகையும், பொருட் தெளிவையும் அளிக்கும் ஆபரணங்களாக அமைகின்றன. திருக்குறளில் பல உபமானங்கள் கையாளப் பட்டாலும், அவைகளில் சிலவற்றைத் தொடர்ந்து கட்டுரைகளில் எழுத உத்தேசித்துள்ளேன்.

உடலில் உயிர் உள்ளே இருக்கிறது. அந்த உடலின் நிழல் வெளிச்சம் இருக்கும் இடங்களிலெல்லாம் வெளியே தெரியும் படி இருக்கும்.

ஒருவன் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அது மற்றவர்களைத் தானே தாக்கும் என்று ஒருவரும் தவறாகக் கருதக் கூடாது என்கிறார் வள்ளுவர். மற்றவர்களைத் தாக்குமோ அல்லது தாக்தாதோ! ஆனால், அந்தத் தீவினையின் கெடுதல் தீவினையைத் தூண்டியவர்களை விடாது தாக்கும் என்று போதிக்கிறார் வள்ளுவர்.

'அந்தக் கெடுதல் தொடர்ந்து தாக்கும்' என்பதை ஒரு உபமானத்தால் விளக்குகிறார். ஒருவனின் நிழல் நீண்டு நெடிதாகப் போனாலும் இறுதியில் அந்த மனிதனை விடாது அவனது காலடியில் வந்து தங்கிவிடும் என்கிறார் வள்ளுவர். முதலில் மனிதனின் நிழல் நீண்டு வெகு தொலைவில் செல்வதாக இருந்தாலும், இறுதியில் அந்த மனிதனை வந்தடைந்து வருத்தும் என்று சொல்வதில் ஒரு சுவை இருக்கிறது. நிழல் நீளுவது மற்றவரைத் தாக்கும் என்று அந்த மனிதன் மனம் மகிழ்ந்தாலும், இறுதியில் அந்த மனிதனும் கேட்டால் துயர்படுவான் என்பதை இந்த நிழல் உபமானத்தால் அழகாக வள்ளுவர் விவரிக்கிறார். ஆதாரம்: திருக்குறள்: 208

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017