இன்றைய இனிய சிந்தனை:

ஒவ்வொரு நாளையும் நீங்கள் அறுவடை செய்ததை வைத்து மதிப்பிடாதீர்கள் . நீங்கள் பூமியில் விதைத்த விதைகளைக் கொண்டு தீர்மானியுங்கள் . ரோபர்ட் லுயிஸ் ஸ்டீபன்ஸன் . விளக்கம் – எஸ் . சங்கரன் : அறுவடை என்றால் பலனை அடைதல் என்று பொருள் . விளைந்த பயிரை அறுவடை செய்வதற்கு முன் நிலத்தை உழுது , விதைகளை விதைத்து , நீர் பாய்ச்சி , உரம் இட்டு செயல்பட்டால் தான் பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிட்டும் . அறுவடையை விட மீண்டும் மீண்டும் விதைத்து வயலைப் பராபரிப்பதில் தான் ஒருவனின் தொடர் வெற்றி இருக்கிறது . அறுவடையின் பலனை மகசூல் மூலம் தெரிந்து கொள்ளலாம் . மகசூல் அமோகமாக இருக்க விதைகள் அல்லது நாற்றுக்கள் தரமாக இருக்க வேண்டும் . காய்க்கும் மரங்களின் பழக்களைப் பறித்து மட்டும் காலம் கழித்தால் , அந்த மரம் ஒரு சில வருடங்களில் காய்ப்பதை இழந்து பட்டுப் போகும் . ஆகையால் புதிய புதிய மரங்களின் விதைகளையும் , மரக் கன்றுகளையும் நிலத்திலே விதைத்தும் – பதித்தும் தொடர்ந்து பழங்கள் கிடைக்க வழி ச...