ஆகமக் கோயில்களில் அரசியல் தலையீடு - ஹிந்துமதம் சீரழியும் அபாயம்


அனைத்து ஜாதியினரும் கோயில் அர்ச்சர்களாக நிர்ணயிப்பது பெரியார் கொள்கை. அதை ஆதரிப்பது திமுக கட்சியின் கொள்கை. அந்த சமூக நீதி செயல்படாமல் முள்ளாக குத்திக் கொண்டிருந்தது. அந்த முள்ளை நாங்கள் நீக்கி சமூக சமத்துவம் உண்டாக்கி விட்டோம்” – என்று இன்றைய திமுக தலைவரும், தமிழ்நாட்டு முதல் அமைச்சருமான திருவாளர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் முழக்க மிட்டார் - இல்லை இல்லைதம்பட்டமடித்தார்.

ஸ்டாலின் குறிப்பிட்டது முள்ளே இல்லைஏனென்றால், ‘அனைத்து ஜாதியினரும் கோயில் அர்ச்சராக வேண்டும்என்பது கொள்கை அளவில் ஹிந்து மதம் ஏற்றுக் கொண்டு செயல்பட்ட ஒரு மரபு முறையாகும். அதுவும் செயல் வடிவில் இருக்கும் முறையாகும்.

அந்தணர் அல்லாத பூஜாரிகள் இப்போது உள்ள பல தமிழ் நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர்களாகவும், சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை செய்பவர்களாகும் அதிக அளவில் உள்ளனர். இது பெரியார் பிறப்பதற்கு முன்பே உள்ள நிலையாகும்.

ஆகம விதிகளின் படி அரசர்களாலும், மற்றவர்களாலும் நிறுவப்பட்டு பல மான்யங்கள் அளிக்கப்பட்ட கோயில்களில் வழி வழியாக கடைப்பிடிக்கப்படும் மரபினால் அந்தக் கோயில்களில் பிறப்பால் பிராமணர்களாக உள்ளவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் இல்லை. வழி வழியாக காலம் காலமாக அந்தத் தெய்வக் காரியம் வம்சத்தின் சந்ததியினருக்கு அனாதி காலமாக வழங்கப்பட்ட ஒன்றாகும். இது அதைக் கட்டிய அரசர்கள் வழங்கிய சாசன வழி உத்திரவாதமாகும். இந்த வழக்கத்தை ஒரு முள் என்பது தவறான கண்ணோட்டம் மட்டுமல்ல, நாத்திக வாதியான பெரியாரின் ஹிந்துமத அழிவிற்கு அடிகோலும் சமூக அநீதியான முள்ளாகும்.

ஸ்டாலின் பரம பக்தர் போல் பெரியாரின் நாஸ்திக்க் கருத்துக்களை எதிர்ப்பவராக வேஷம் போட்டு முருகன் வேல் ஏந்தி ஓட்டு கேட்டதற்கு அர்த்தமே இல்லாமல் ஹிந்துக்களின் வழிவழி மரபுப் பழக்கங்களை முள் என்று சொல்லுவது ஹிந்து பக்தர்களுக்குச் செய்யும் துரோகம். ஹிந்து பக்தர்களின் நெஞ்சில் குத்திய முள்ளாகும். குறிப்பாக அந்த தெய்வ காரியத்தில் ஈடுபட்டவர்களின் கண்களை முள்ளால் குத்தியதற்குச் சமமாகும்.

ஹிந்து தர்மத்தை கோயில் மரபு மாறாமல்கடமையைச் செய்; பலனை எதிர்பாராதேஎன்ற கண்ணன் வாக்கை உடல் பொருள் ஆவி என்று அத்தனையையும் அர்ப்பணித்து தெய்வ சேவை செய்யும் அப்பாவி ஏழை அந்தண அர்ச்சகர்களின் கண்களில் பெரியார் முள்ளச்; சொருகி அதில் சந்தோஷிப்பதால் அரசாளும் முதல்வருக்கு அழகல்ல. அது தர்மமும் அல்ல.

ஆகம கோயில்களில் பத்தியோடு பணிபுரியும் அந்தண அர்ச்சகர்களை இந்த ஸ்டாலின் அரசு ஒரு அரசாங்க ஊழியராக நினைப்பதே அடிப்படைத் தவறாகும். அவர்கள் செய்யும் தொழில் வயிற்றுப் பிழைப்புக்கு சம்பளம் வாங்கி ஊதியம் செய்யும் அலுவலராக தரம் தாழ்த்துவது அவர்களை அழிக்கும் செயலாகும். அவர்களை முள் கொண்டு குத்தி தாக்கும் செயலாகும். தெய்வத்தை நம்மாத ஸ்டாலின் செய்தாலும், குற்றம் செய்த ஸ்டாலின் இதற்கான தண்டனைப் பரிசை அடைவது தெய்வ சங்கல்பம். இதற்குப் பிராயச் சித்தம் செய்யும் எண்ணம் நாஸ்திகரான ஸ்டாலினுக்கு வராதுதான். ஆனால் பாதிக்கப்பட்ட ஏழைப் பிராமண அர்ச்சகர்களின் கண்களைக் கொடூரமாக முள் கொண்டு குத்தி அவர்களின் பக்தியையும், சேவையையும் செய்ய விடாமல் திடீரென்று வெளியேற்றி அவர்களின் குடும்பத்தையே வீதியில் தள்ளியது அரசின் அராஜகத்தையே காட்டுகிறது. அவர்களுக்குபிராமணராக இருப்பதால் விடிவியல் கிடையாதுஎந்த வித மாற்று உதவியும் கிடையாதுஎன்ற நிலைதான் சமூக நீதியா ? அல்லது சமூக அநீதியா? மக்கள் மன்றத்தில் தான் இதற்குத் தீர்ப்பு கிடைக்க வேண்டும்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அனுமதிக்கப் பட்டு பல கோயில்களில் சேவை செய்கிறார்கள் என்பது இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கோயில்கள் தான் தமிழ் நாட்டில் அதிகம். ஆனால் இப்போது சமூக நீதி என்ற போர்வையில் திமுக அனைத்து ஜாதியினரும் அனைத்துக் கோயில்களிலும் அர்ச்சகராக வேண்டும் என்று சட்டம் மூலம் அதை நிறைவேற்றுகிறது.

இது ஒரு மிகவும் சிறுபான்மை ஜாதியினரான பிராமணர்களை ஒழிக்கும் திட்டமாக செயல்படுவதால், இது ஒரு சமூக அநீதி என்பது தான் உண்மை நிலை. அதுவும் இதை பெரியாரின் பெயரில் தமிழ்நாட்டுக் கோயில்களில் கொண்டு வருவதாகச் சொல்வது ஹிந்து மதத்தை மதிக்காமல், மரபை மீறி, சமூக நீதிசமத்துவம் என்று சொல்லி தமிழ் ஹிந்துக்களை முள்ளால் குத்துவதற்குச் சமம்.

பெரியாரின் கட்டுரைகள் பல ஆபாச வாசகங்கள் கொண்ட சாக்கடை நீரை எழுதுகோலில் மையாக ஊற்றி எழுதிய பல முற்களாகும். அதை நிரந்தமாக நீக்கி, ஹிந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டியது ஒரு நேர்மையான அரசின் கடமையாகும். அந்தக் கடமையை ஆற்றத் தவறிய ஸ்டாலினை தெய்வம் தண்டிக்கும் என்பது தான் ஆஸ்திகர்களின் சாபமாகும்.

ஹிந்துக் கடவுள்களையும், இந்து மக்களையும், தமிழ் மக்களின் பக்தியையும், தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியங்களையும், தமிழ்ப் பெண்களையும், தமிழ் மக்கள் தெய்வமாகப் போற்றும் கண்ணகி போன்றவர்களையும், வள்ளுவர்கம்பர்இளங்கோ ஆகிய தமிழ்  வளர்த்த வள்ளல்களையும், தமிழர் பண்பாடுகளையும் மதித்து எழுதிய திருக்குறள், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களையும் இழுவுபடுத்திய பெரியாரின் முற்கள் தான் எத்தனை ? அவைகளை எப்போது ஸ்டாலின் எடுக்கப் போகிறார்? என்று வாய்மை கேள்வி எழுப்புகிறது.

பெரியாரின் மொழிகள் பல பொன் மொழிகள் அல்ல. புண் மொழிகள். முள் மொழிகள். அவைகளை எடுத்தால் தான் தமிழும், தமிழ் சமூகமும் நேர்வழியில் செயல்படும்.

அப்படி என்ன தான் பெரியார் சொல்லிச் சென்றார் என்பதற்கு அவரின் பல சொற்கள் ஆபாசச் சொற்கள். அச்சிட முடியாத சாக்கடையாக நாறும் சொற்கள்.

  • vதமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி பாஷை என்ற பெரியாரின் முள்ளை எடுப்பது எப்போது?
  • v  தமிழ் இலக்கியங்களான திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவைகளை இழிவாகச் சித்தரித்த பெரியாரின் முள்ளை எடுப்பது எப்போது?
  • v  தமிழ் பெண்களின் கற்பு வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி, தமிழர்களின் வீட்டையே வேசி விடுதியாக்கிய பெரியாரின் முள்ளை எடுப்பது எப்போது?
  • v  தமிழ் மொழியின் புனிதத்தை அழித்து தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட பெரியாருக்கு தமிழக மெங்கும் சிலைகள் நிறுவி ஒவ்வொரு சிவ-விஷ்ணு-விநாயக-முருக பக்தர்களின் மனங்களில் பல முறை பலவிதமாக குத்திய பல முற்களை எடுப்பது எப்போது?

ஆனால், இத்தகைய பல பெரியாரின் புண்செயல் முள்களை எடுக்க திராவிடக் கட்சிகளை நம்புவது அறியாமை. ஏனென்றால் இந்த பெரியாரின் புண்செயல் மொழிகள் தான் அவர்களின் பைபில் புத்தகம். இதை ஹிந்து மத தர்மத்தையும், சர்வ மத நம்மிக்கையையும் காக்கும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் பிஜேபி போன்ற கடசிகளால் தான் இது சாத்தியமாகும்.

கோயில் ஊழியத்தைக் கைங்கர்யம் என்று தான் சொல்வார்கள். அது ஊதியத்திற்கு செய்ய்ம்  வேலை இல்லை. ஆண்டவனுக்கு பக்தியுடன் எந்தவித பொருள் ஆதாயமும் எதிர்பார்க்காமல் ஆத்மார்த்தமாக ஆகம விதிகளின் படி சேவை ஆற்றுவதாகும்.

இந்த பக்தியை வெறும் இரண்டு வருட படிப்பில் பெற்றுவிட முடியாது. அறிவை விட குணம் மிக மிக முக்கியம். மேலும் அர்ச்சகர்களின் அர்ப்பணிப்பு மரபு வழிக் குணமாகும். உணவு, உடை, உறைவிடம், உண்ணும் உணவு ஆகியவைகள் அனைத்தும் சாத்வீக வழியில் அந்த அர்ச்சகர்களின் வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டும்.

குணம் என்பது சத்வ, ரஜோ, தமோ என்று மூன்று வகைப்படும். இதில் சத்வ குணம் கொண்டவர்கள் தான் ஆண்டவன் சந்நிதியில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள்.

சாத்வீக உணவில்லாமல் அசைவ உணவு உண்பவர்களை எப்படி ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக அனுமதிக்கலாம் ? இது சாதி சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. குணம் சம்பந்தப்பட்டது

ஸ்டாலின் அப்பா பராசக்தி சினிமாவில் ஒரு வசனம் எழுதியுள்ளார்: ‘கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகக் கூடாது.’ ஆனால், அவரது வாரிசு ஸ்டாலின் கோயிலில் அர்ச்சகர் நியமனத்தில் சத்வ குணத்தோரை நியமிப்போம் என்ற உத்திரவில் - அசைவ உணவு உண்பவர், குடிப்பவர், உடையில்நடைமுறையில் குறையில்லாமல் நடக்காதவர் அர்ச்சகராவதற்குத் தகுதி இல்லை என்ற உத்திரவாதம் இல்லை ஆகையால் இக் குறைகள் கொண்டவர்களும் கோயில் அர்ச்சகராகவதற்கும் இது வழி வகுக்கும்

ஹிந்து தர்மத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்த கோயில் வழிபாட்டில் தலையிடுவது நாஸ்திக திமுகவின் முதல் முயற்சியாகும்

இதில் ஒரு வருத்தம் வரும் செயல் என்னவென்றால், புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி அர்ச்சகர்களைக் குற்றம் சொல்லுவதாக கொள்ள இது வழி வகிக்கிறது. இதில் அவர்களைக் குற்றமோ, குறையோ சொல்வது வாய்மையின் எண்ணம் இல்லை. அவர்கள் உண்மையிலேயே தெய்வ பக்தியும், ஹிந்துமதச் சடங்குகளில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்களாக சத்வ குணாதிசயர்களாக இருப்பின் அவர்களுக்கு தெய்வ குற்றம் வராது. இல்லாவிடில் தெய்வம் அவர்களையும் பழிவாங்கும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இரண்டு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பெரியார் சிலைக்கு மாலை அனுவித்து வணங்கியுள்ள செய்தியும், படமும் வெளிவந்துள்ளன. இப்படி கடவுள் இல்லைஇல்லவே இல்லைஎன்று பகிர்ந்த பெரியாருக்கும் பயபக்தியுடனும், நன்றியுடனும் மாலை அணிவித்து மரியாதை செய்பவர்களை கோயில் சிலைகளுக்கு அபிஷேஷம்அர்ச்சனை செய்ய அனுமதித்து, அவர்களின் கைகளின் மூலமாக பிரசாதங்களை வாங்குவதை எந்த ஹிந்து பக்தனும் விரும்பமாட்டான். இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் குறையும். இதற்காகத் தான் இந்தஎல்லா ஜாதியினரும் அர்ச்சகர்கள் எல்லா கோயில்களிலும்என்ற புதிய பெரியார் வழிமுறை எந்த  அச்சமும் ஆதாரமில்லாத ஒன்று என்று தள்ளிவிட முடியாது.

இறுதியாக, இந்த தவறான அரசு ஆணை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். கோயில் சேவையை சம்பளம் வாங்கும் அரசு ஊழியரின் கையில் ஒப்படைப்பது தவறான முடிவாகும். பிராமணனை ஒழிக்க கோயிலையே கொடியவர்களின் கைகளில் ஒப்படைக்க ஸ்டாலின் முடிவெடுத்து அதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளார். இது ஸ்டாலின் ஹிந்து மதத்தைக் குத்தும் முதல் முள். முளையிலேயே அதை வளர விடாமல் கிள்ளி எறிய வேண்டும். அதை பிஜேபி தான் செய்ய முடியும்.

திமுக உதய சூரியன் விதைத்த இந்த முற்கள் விடியலை இருளடையச் செய்யும். உண்மையான விடியலுக்கு தாமரை தமிழ் நாட்டில் மலர வேண்டும். மலர்ந்து தமிழ் நாட்டையும், தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கோயில்களையும், சர்வ ஜாதியினரின் மத வழிபாட்டையும் காத்து, தர்ம்ம் தழைக்கச் செய்ய வேண்டும்.

 


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017