பாரதியின் 100-வது நினைவு தினம் – 11 – 09 - 2021
|
திருவல்லிக்கேணியில்
அதுவும் பாரதி வசித்த துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவிற்கு வெகு சமீபத்தில் உள்ள
துளசிங்கப் பெருமாள் சந்தில் ஒண்டிக்க்குடித்தனத்தில் குடியிருந்தோம். பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம்
பாரதி வசித்த அந்தச் சிவப்புக் கட்டிடத்தைத் தாண்டித் தான் நான் செல்ல வேண்டும்.
அப்பொழுதெல்லாம் பார்த்தசாரதி கோயில் பின் பக்கத்து நரசிம்யர் ஸ்வாமி
கோபுரத்தை – அது பாரதி வீட்டிற்கு சிறிது தள்ளி எதிரே உள்ளது
– கும்பிடும் போதெல்லாம் பாரதியை மனதிலே நினைத்து அந்த சிவப்புக் கட்டிடத்திற்கும்
ஒரு கும்பிடு போடுவது என் வழக்கம்.
அந்த கட்டிடம் இப்போது
பாரதி நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த நினைவகத்தை பி. ஆறுமுகம் அவர்களுடன் சென்று தரிசிக்கும்
பாக்கியம் பெற்றேன். அதன் புகைப்படங்களையும் இங்கு காண்பீர்கள்.
பாரதி தன் சுய சரிதைக்
கவிதையில் கடைசிப் பாட்டில் ஆதி சங்கரரின் அத்வைதத்தைச் சொல்லி முடிக்கிறான். இதோ அந்தக் அழகு கவிதை வரிகள்:
சாமி நீ; சாமி நீ; கடவுள்
நீயே;
தத்துவமஸி; தத்துவமஸி; நீயே அஃதாம்;
பூமியிலே நீ கடவு
ளில்லை யென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமி நீ அம்மாயை
தன்னை நீக்கி
ஸதாகாலம் ‘சிவோஹ’மென்று
ஸாதிப்பாயே .
Comments