9/11 – 2001 - நியூ யார்க் இரட்டை கோபுரம் தாக்கு – 20 –வது ஆண்டு நினைவு தினம்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்
கடந்த 2001ம் ஆண்டு 11-ம்
தேதி செப்டம்பர் மாதத்தில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களை விமானம்
மூலம் மோதி தகர்த்தனர் அல் கொய்தா தீவிரவாதிகள். ஒசாமா பின்லேடன் தலைமையில்
இயங்கிய அல்கொய்தா அமைப்பு நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் சுமார் 2,753 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் இதயத்திற்குள் புகுந்து
தீவிரவாதிகள் நடத்திய அந்த முதல் பெரும் தாக்குதல் அமெரிக்கர்களை அதிர வைத்தது.
அலறடித்தது.
அந்த கொடூரமான சம்பவத்தின் 20-வது நினைவு தினம் அனுசரிக்கும் அதே வேளையில் அமெரிக்கப் படைகள் வாபஸ்
ஆனதினாலும், தோகா ஒப்பந்தத்தினாலும் தாலிபான் ஆட்சி
ஆப்கானிஸ்தானில் பதவி ஏற்றுள்ளது அமெரிக்காவிற்கு பெருத்த ஏமாற்றமும், பின்னடைவுமாகும். ஏனென்றால் தோகா அமைதி ஒப்பந்தத்தின் பல அம்சங்கள்
மீறப்பட்டதுடன் பதவி ஏற்றவர்களில் மொத்தமுள்ள 33
பேர்களில் 17 பேர்கள் – அதாவது பாதிக்கும்
அதிகமானோர் அமெரிக்கா – யுஎன் செக்குரிடி கவுன்சிலால் பயங்கரவாதிகள் என்று
முத்திரை குத்தப்பட்ட நபர்கள் என்பதால் அமெரிக்காவிற்கும், யு.என்.சபைக்கும்
மூக்குடைப்பாகும்.
Comments