வகுப்புக் கலவரத் தீயில் கொழுந்து விட்டு எரியும் மால்டா
முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய பிரமுகரான அஸாம் கான் நவம்பர் 2015 அன்று ‘ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். ஆகையால் தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்’ என்று சொன்னார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஹிந்து மஹா சபாவின் தலைவர் காம்லேஷ் திவாரி, ‘உலகத்தின் முதல் ஓரினச் சேர்க்கையின் முதல் நபர் தீர்க்கதரிசி முஹமத்’ என்று சொல்லி அது இந்தியாவின் முஸ்லீம் மக்களைக் கொதிப்படைய வைத்தது. ஒரு லட்சம் முஸ்லீம்களுக்கும் மேல் முசாபர்நகர் வீதிகளில் குவிந்து திவாரிக்கு மரண தண்டனை விதிக்கும்படி போராடினர். திவாரியை 1-ம் தேதி டிசம்பர் மாதம் உத்திரப்பிரதேச மாநிலம் கைது செய்து சிறையில் அடைத்தது. 3-ம் தேதி ஜனவரி 2016 அன்று மால்டாவில் முஸ்லீம் மதத்தினர் ‘ஷாரியா சட்டத்தின் படி திவாரியைத் தூக்கில் போட வேண்டும்’ என்று மதக் கலவரத்தில் ஈடுபட்டனர். அந்தக் கூட்டத்திற்கு நோட்டீஸ், சுவரொட்டிகள் ஆகியவைகளை அச்சடித்து வழங்கியவர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பீஹார் மாநில ராஜ்ய சபா எம்.பி.யான குலாம் ராசூல் பால்யாவி என்பவராகும். ஒரு பிஹார் எம்.பி. உ.பி.யில் நடந்த சம்பவத்திற்கு வங்காளத்தில் மதக் கலவரத்திற்கு உதவி இருக்கிறார். அந்த அளவிற்கு செக்குலர் அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். அதிலும் முஸ்லீம் அரசியல்வாதிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்தக் கலவரத்தின் பின்னணியைச் சிறிது ஆராயவேண்டும்.
மால்டா பங்களாதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள மாநகரமாகும்.
முஸ்லீம் அகதிகளின் வரவால் மால்டா ஜனத்தொகையின் தன்மையே மாறிவிட்டது. மதக் கலவரம் என்பது அங்கு
முன்பு நடந்ததே இல்லை. ஆனால் இப்போது கடந்த சில வருடங்களில் மாறிவிட்ட்து.
30-03-2013 அன்று அனைத்து
வங்காள சிறுபான்மை கவுன்சில்,
அனைத்து வங்காள சிறுபான்மை வாலிபர் சங்கம், மதராசா
மாணவர்கள் யுனியன், முஸ்லீம் மதி உரையகம் (Muslim
Think Tank), அனைத்து வங்காள இமாம் முயாசின் அசோசியேஷன் ஆகியவர்கள் ஒன்று
சேர்ந்து 1971 வங்காள யுத்தக் கைதிகளுக்கு ஆதரவாக ஒரு பெரும்
பேரணியை கூட்டினர். மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பங்களாதேசத்தின்
தீவிரவாதக் குழுவான ஜமாத்-ஐ-இஸ்லாமி
2014 தேர்தலில் நேரடியாகவே பிரசாரம் செய்தனர். மேலும், மம்தாவின் மாநில அரசு முஸ்லீம்களுக்கு பலவிதமான
சலுகைகளை வாரி வழங்கி உள்ளது. 400 முஸ்லீம் என்.ஜி.ஓ.க்கள் முற்றிலும் முஸ்லீம்கள்
மட்டும் அங்கத்தினர்களாகக் கொண்டு வங்காளத்தில் செயல்படுகின்றன. மேலும், எந்தவிதமான தரக்கட்டுப்பாடும் இன்றி
597 மதராசாப் பள்ளிகளுக்கு அரசாங்க அங்கீகாரம் கொடுத்துள்ளது.
இதே மால்டாவில், சமீபத்தில் பெண்கள் கால்பந்து
விளையாட்டை - அது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்று முஸ்லீம்
மதகுருக்கள் எதிர்ப்புத் தெரிவித்தவுடன் அந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
முஸ்லீம் முக்காட்டை அணிந்து கொண்டு,
நமாஸ் செய்து முஸ்லீம்களின் அன்பையும்,
ஓட்டுக்களையும் மம்தா பெற்றுள்ளார்.
இதன் காரணமாக,
2012 வருடம் வரை
12/14 என்ற குறைந்த அளவு எண்ணிக்கையில் ஏற்பட்ட மதக் கலவரங்கள்,
2013-ல் 106 என்ற அளவில் அதிகரித்து, வங்காளத்தை ஒரு மதக்கலவர மாநிலமாக மாற்றி விட்டது.
இதைப் பற்றி மாநில அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
2-ம் தேதி அக்டோபர்
2014 அன்று பர்த்வான் என்ற இடத்தில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடம் வெடிகுண்டினால் தரை மட்டமாகியது.
அதற்குக் காரணமான சகில் அஹமத்,
சோவான் மண்டல் என்ற இரண்டு முஸ்லீம் தீவிரவாதிகள் அந்த குண்டு வெடிப்பில் உயிர் இழந்துள்ளனர்.
ஹசான் சாஹேப் பலத்த காயம் அடைந்துள்ளான்.
அந்த வெடி மருந்து தயாரிப்பதில் உதவியாக இருந்த செத்துப்போனவர்களின் மனைவியர்களைக் கைது செய்து,
சரியாக விசாரணை செய்யவில்லை.
தேசிய புலனாய்வுத் துறையை இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரிக்கவோ,
இதை
பயங்கரவாதச் செயல் என்ற அளவில் விசாரணையை முடுக்கி விடவோ மம்தா தயாராக இல்லை.
இதன் காரணமாக,
மம்தாவின் ஆட்சியில்,
வங்காளம் தேசிய விரோத சக்திகளுக்கும்,
ஜிகாட் செயல்களுக்கும் சொர்க்க பூமியாகி விட்டது. முஸ்லீம்களைக் கவரும் விதமாக துர்க்கா தேவியின் சிலைகளைக்
கடலில் கரைக்கும் விழாவையே முஸ்லீம்களின் ஈத் பண்டிகையின் காரணமாக அடுத்த நாளுக்குத் தள்ளி வைத்துள்ளார் மம்தா.
அந்த அளவுக்கு அவர் முஸ்லீம்களுக்குச் சலுகைகளை வழங்கி உள்ளார்.
மால்டா மதக் கலவரத்தில் ஹிந்துக்களும் அவர்களின் உடைமைகளும்
தாக்கப்பட்டுள்ளன. காலியாசாக் போலீஸ் நிலையம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. மால்டாவைச் சுற்றி உள்ள பாலியாதங்கா, மொதாபாரி,
டாங்கா, காலியாசாக், மொஹபத்பூர்
ஆகிய இடங்கள் முஸ்லீம்களின் தேசிய விரோதச் செயல்களுக்கான இடங்களாகும். அங்கெல்லாம், கள்ள நோட்டுக்கள், கள்ளத்தனமான குடியேற்றங்கள், கள்ள துப்பாக்கி உற்பத்தி
செய்யும் தொழிற்கூடங்கள், கள்ளத்தனமாக பொருட்களை கடத்தல் ஆகியவைகள்
நடந்து வந்துள்ளதை, சமீபகாலத்தில் போலீஸுடன் எல்லைப் பாதுகாப்பு
படைவீர்ர்கள் முஸ்லீம்களின் தேசவீரோதச் செயல்களைக் கண்டுபிடித்து, அதில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியலைத் தயார்செய்து, தகுந்த
நடவடிக்கை எடுக்கும் நிலையில் இருந்தனர். இதை அறிந்த ஒரு குறிப்பிட்ட
முஸ்லீம் பகுதியினர் மால்டா கலவரத்தைப் பயன்படுத்தி, தங்களைப்
பற்றிய குறிப்பேடுகள் உள்ள காலியசாக் போலீஸ் நிலையத்தை முற்றிலும் தீயிட்டுக் கொளுத்தி
உள்ளனர். மேலும், ஊரக வளர்ச்சி அலுவகத்தை
தாக்கியும், 6 ஹிந்துக்களின் வீடுகளைச் சூரையாடியும்,
35 வாகனங்களுக்கு மேல் தீக்கிரையாக்கியும் மால்டா மதக்கலவரம் மம்தாவின்
அரசுக்கு அவக்கேட்டை அளித்துள்ளது. இதில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் தொடர்ப்பு இருப்பது
சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மூலம் தெரியவருகிறது.
மம்தா ஓட்டு வங்கி அரசியல் காரணமாக மீண்டும் பதவியில் அமரவேண்டும்
என்ற வேட்கையில் தீய மற்றும் தீவிரவாத மற்றும் தேசிய விரோத சக்திகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை
நேர்மையாக நடத்தாமல், வருகிற தேர்தலை மனதில் கொண்டு அரசியல் செய்கிறார்.
வங்காள மக்கள் இதைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்று
நம்புவோமாக.
Comments