ஆற்றல் மிக்க ஆலோசனையால் பலியான ஆட்டின் சோகக் கதை

ஆற்றல் மிக்க ஆலோசனையால் பலியான ஆட்டின் சோகக் கதை


ஒரு பண்ணையில் குகுதிரையும் ஆடும் நண்பர்களாக இருந்தன,ஒருநாள் குதிரைக்கு உடல்நிலை சரியில்லாமல் கிடையில் விழுந்தது,அதன் உரிமையாளர் மருத்துவரை அழைத்து வந்து பார்த்தார்,மருத்துவர் விஷக்கிருமி பரவியுள்ளது மூன்று நாட்கள் மருந்து குடுக்கலாம் சரியாகவில்லைஎன்றால் குதிரையை கொன்று விடலாம்,இல்லை என்றால் இதே நோய் மற்ற குதிரைகளுக்கும்பரவி விடும் என்றார், உரிமையாளரும் சரி என்றார்,இதை கேட்டிக் கொண்டிருந்த ஆடு குதிரையிடம் சென்று நண்பா நீ எழுந்து நிக்க முயற்சி செய் இல்லையென்றால் நீ நிரந்தரமாக முடக்கப்படுவாய்என்றது, குதிரை எதற்கும் அசைந்தபாடில்லை,மறுநாள் மருத்துவர் மருந்து கொடுத்தார், அப்போதும் ஆடு நண்பா ஏன் இப்படியே இருக்கிறாய் எழுந்து நடக்க முயற்சி செய்து பார் என்றது குதிரையிடம் எந்த மாறுதலும் இல்லை,மூன்றாவது நாளும் மருத்துவர் மருந்து கொடுத்தார்,அப்போதும் எந்த முன்னேற்றமும் இல்லை,மருத்துவர் இனிபயனில்லை குதிரையை கொன்று விடலாம் என்றார், உரிமையாளரும் சரி என்றார்.அப்போது ஆடு நண்பா இப்போது நீ எழுந்திருக்கவில்லை என்றால் நீ நிரந்தரமாக தூங்க வேண்டியதாகிரும்என்றது,குதிரை மெதுவாக எழுந்து நின்றது,நடந்தது, கொஞ்சம் கொஞ்சமாக ஓடியது பிறகு நன்றாக ஓடியது,அனைவருக்கும் ஆச்சரியம்!உரிமையாளர் மிக்க மகிழ்ச்சியாக என் குதிரை என் குதிரை தான் என்று பாராட்டினார்,அந்த மகிழ்ச்சியில் அனைவருக்கும் விருந்து வைக்கவேண்டும் என்று,அந்த ஆட்டை பிடித்து விருந்து போடுங்கள் என்றார்,இதுபோலத் தான்,ஒரு நிர்வாகத்தில் திறமை, கடுமையான உழைப்பு இருந்தும்,அதை வெளிக்கொண்டு வந்தசிலரின் ஆற்றல் அவர்களுக்கு பயன்படுவதில்லை,மாறாக அவர்கள் பலியாடு ஆகின்றார்கள்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017