சஞ்சீவ் பட்டின் நேர்மையின்மை
2002 குஜராத் கலவரத்தை
பெரிசு படுத்தி, இங்குள்ள பெரிய புள்ளிகள், அரசியல்வாதிகள், அரசு சாரா அமைப்புகள், பல முஸ்லீம் கட்சிகள், காங்கிரஸ் - இடது சாரி கட்சிகள், பல உலக அமைப்புகள் ஆகியவைகள் கடந்த
பத்தாண்டுகளுக்கு மேலாக மோடியை ஒரே அடியாக வீழ்த்த திட்டம் தீட்டி - உள் நாட்டிலும் - வெளிநாட்டிலும் பணப் பிரயோகம்
- பதவி அதிகாரம் - துஷ்பிரசாரம் - போலீஸ் வழக்குள் - நீதி மன்ற வழக்குள் - அயல் நாட்டில் அவதூறுப் பிரசாரங்கள், யு.எஸ். விசா மறுப்பு - என்று பல முனைகளிலும்
தாக்கி அவர்கள் அனைவரும் தரம் தாழ்ந்து, வீழ்ந்து, தோற்றனர். அதற்குக் காரணம் மோடி தமது நேர்மை,
தைர்யம், தன்னம்பிக்கை ஆகியவைகளுடன் போலியான மதச்
சார்பின்மையைப் புறம் தள்ளி மக்களின் நன்மதிப்பைப் பெற்றதாகும்.
2002 குஜராத் கலவரத்திற்கு
மூல காரணமான கோத்ரா ரயில் பெட்டியை சுமார் 2000 பேர்கள் கொண்ட
கும்பல் சூழ்ந்து கொண்டு கற்களை எரிந்து தீயிட்டதினால் ரயில் பெட்டிகள் இரண்டு எரிந்து,
அதில் இருந்த 59 இந்து கரசேவகர்கள் - அதில் 27 பெண்கள் மற்றும் 10 குழந்தைகளும்
அடக்கம் - எரிந்து உயிர் துறந்தனர். 48 நபர்களுக்கு மேல் காயம் அடந்தனர்.
இந்த சம்பவத்தால் குஜராத்தில்
மதக் கலவரம் நடந்து,
அதில் 790 முஸ்லீம்களும், 254 ஹிந்துக்களும் கொல்லப்பட்டனர்.
மேலும் அதில் 2500 பேர்கள் சொற்ப காயத்துடனும்
- 223 பேர்கள் காணாமலும்
போய்விட்டனர்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
அதிகமாகப் பேசப்படவில்லை.
ஆனால், 2002 குஜராத் மதக் கலவரம் உலகலாவிய அளவில்
பல நிலைகளில் கண்டிக்கப்பட்டுள்ளன. அதிலும் மோடியை இந்தக் கலவரத்தைத்
தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, தனிக் கோர்ட் அமைத்து விசாரணை
நடத்தி மோடியை நிரபராதி என்று தீர்ப்பு சொன்ன போதிலும், இன்னமும்
மோடியை தீவிரமாக வெறுக்கும் முஸ்லீம் மற்றும் இந்துக்களும் இருக்கின்றனர்.
சஞ்சீவ் பட் என்பவர் குஜராத்தின்
கலவர நேரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணி ஆற்றியவர்.
அவர் மோடிக்கு எதிராக ‘கோத்ரா ரயில் எரிப்பிற்கு
பழி வாங்க இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்டி, போலீஸை
செயலாற்றத் தடுத்தார்’ என்று குற்றம் சாட்டினார். அவரது செயல்பாட்டில் குறை கண்ட குஜராத் அரசாங்கம் ஆகஸ்ட் 2011 அன்று பட்டை தற்காலிக பதவி நீக்கம் செய்தது. ஆகஸ்ட் 2015 அவர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
சஞ்சீவ் பட்டின் மேல் இரண்டு
முதல் தகவல் அறிக்கைகளை குஜராத் அரசாங்கம் போட்டது. பட் தமக்குக்
கீழே வேலை பார்த்தவரை 2002 குஜராத் கலவரத்தைப் பற்றி தன் கருத்துப்படி
சத்தியப் பிரமாணப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய நிர்பந்தித்தது - ஒரு மூத்த சட்ட அதிகாரியின் மின் அஞ்சல்களைக் கள்ளத்தனமாக திருடியது ஆகியவைகளாகும். இந்த முதல் தகவல் அறிக்கைகளை குஜராத்
போலீஸ் விசாரிக்காமல், கோர்ட் அதிகாரத்திற்கு உட்பட்ட தனி விசாரணைக்
கமிஷன் அமைத்து விசாரிக்க உத்திரவிட வேண்டும் என்று சஞ்சீவ் பட் உச்ச நீதி மன்றத்த்தில்
மனு தாக்கல் செய்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்து,
உச்ச நீதி மன்றம் சஞ்சீவ் பட்டின் உள் நோக்கத்தையும், கறை படிந்த மனத்தையும், தவறான செயல்பாட்டினையும் மிகவும்
தீவிரமாக தன் தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.
அந்தத் தீர்ப்பின் சாராம்சம்:
சஞ்சீவ் பட்டின் குற்றச் சாட்டுகள் முற்றிலும் பொய்யானவைகள், ஆதாரமற்றவைகள்.
மேலும், சஞ்சீவ் பட் காங்கிரஸ் அரசியல் தலைவர்களுடன்
தொடர்ப்பு கொண்டதுடன், நர்மதா பச்சோ அண்டோலனுடன் மின் அஞ்சல்
தொடர்பு கொண்டு, அவர்களை அரசியல் போராட்டம் நடத்தி, குஜராத் கலவர கோர்ட் கேசை தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்க, டெல்லியில் அரசியல் கருத்துக்களை உருவாக்க ஒரே குழுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும்
என்று கூறி உள்ளார். மேலும், டெல்லி அரசை,
சாக்கியா ஜாஃப்ரியின் முதல் தகவல் அறிக்கையின் படி குஜராத் அரசியல் தலைவர்கள்
மற்றும் குறிப்பிட்ட போலீஸ் அதிகரிகள் ஆகியவர்களின் மேல் குற்ற நடவடிக்கை எடுக்க வற்புறுத்த
மின் அஞ்சல் அனுப்பு உள்ளார். ஜட்ஜ் நானாவதி கமிஷன் முன்னிலையில்
தான் கொடுத்த அறிக்கையை தகுந்த படி வெளியிட்டு,
அதனால் லாபம் அடைய முயல வேண்டும் என்றும் அரசியல்த் தலைவர்கள் மற்றும்
அரசு சாரா அமைப்புகளுக்கும் மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அத்துடன்
சஞ்சீவ் பட், அரசு சாரா அமைப்பு வழக்கறிஞர் மற்றும் சமூக சேவர்கள்
ஆகியவர்களால் தூண்டப்பட்டுள்ளார். அது மட்டுமல்ல. சஞ்சீவ் பட் மீடியா மூலம், மூன்று பேர் அடங்கிய உச்ச
நீதிமன்ற கோர்டையே தனக்குச் சாதகமாகச் செய்ய முயன்றுள்ளார்.
இதை எல்லாம் சொல்லி முத்தாய்ப்பாய்ச்
சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சஞ்சீவ் பட்டிற்கு மட்டும் அல்ல, அவரது காங்கிரஸ் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கும் ஒரு பெரிய மரண அடி ஆகும்: ‘சஞ்சீவ் பட்டின் செயல்பாடுகளில் குறைகள் இல்லை என்று சொல்ல முடியாது.
மேலும் அவர் இந்த கோர்டில் தூய்மையான கைகளுடன் வந்துள்ளார் என்றும் சொல்ல
முடியாது.’
கடவுளே நேரில் வந்து, ‘மோடிக்கும் 2002 குஜராத் மதக் கலவரத்திற்கும் தொடர்பு
இல்லை’ என்று சொன்னாலும், மோடியை வெறுக்கும்
கும்பல் நம்பத்தயாராக இல்லை. அது தான் இந்தியாவின் சாபக் கேடு.
ஆனால், இந்திய மக்களில் பெரும்பாலோர் இப்போது மோடியை
ஆதரிக்கத் தொடங்கி விட்டனர். முன்னேற்றம் என்ற மந்திரச் சொல்
மேலும் பலரை மோடியின் பக்கம் ஈர்க்கும் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
Comments