தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் முஹமத் இக்லாக் கோடூரக் கொலை

தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் முஹமத் இக்லாக் கோடூரக் கொலை

.பி.யின் சரித்திரத்தில் 28-ம் தேதி செப்டம்பர் மாதம் ஒரு பெரும் கருப்பு நாளாகும். அன்று 50 வயது முஹமத் இக்லாக் என்ற முஸ்லீம் இந்து மத வெறியர்களால் ஈத் பண்டிகையில் மாட்டுக் கறி சாப்பிட்டார் என்பதற்காகவும், மிச்ச முள்ள மாட்டுக் கறியை தன் வீட்டில் பிறகு சாப்பிடுவதற்கு பாதுகாத்து வைத்தார் என்பதற்காகவும் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது 22 வயது பையன் டானேஷ் பலமான அடியுடன் மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைத்துள்ளார்.

இது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியையும், மோடியின் மேல் வெறுப்பையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. என்றாலும், இதை மீடியாவும், அறிஜீவிகளும் பெரிய அளவில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்தியாவில் இந்துக்கள் பலர் மிகவும் கொடூரமாக முஸ்லீம்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஏன், இந்த தாத்ரி சம்பவத்திற்குப் பிறகு இந்துக்களின் கொலைகள் இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்றாலும், அந்த சம்பவங்கள் பத்திரிகைகள் - மீடியாக்களில் எந்தவித மனச் சஞ்சலமின்றி இயந்திரத்தனமாக வெளியிடப்படுகின்றன

இந்தச் சம்பவத்திற்கு மோடி உடனேயே கண்டனம் தெரிவிக்க வில்லை என்ற குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது. மோடி இது குறித்துச் சொன்னது: ‘தாத்ரி சம்பவம் மிகவும் வேதனை தரும் ஒன்றாகும். மிகவும் விரும்பத்தகாததும் ஆகும். ஆனால், இதில் மத்திய அரசாங்கத்தின் பங்கு என்ன? அரசியல் எதிர்க் கட்சிகள் மதக் கலவரங்களைப் பயன்படுத்தி அதை ஓட்டு சேகரிக்கப் பயன்படுத்துகிறார்கள். சிறுபான்மை ஓட்டைப் பெற இதைப் பயன்படுத்த முயல்கிறார்கள். இந்த மாதிரியான சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. இதை பி.ஜே.பி. எப்போதும் எதிர்த்தே வந்துள்ளது. போலி மதச் சார்பின்மைக்கு பி.ஜே.பி. எதிரி. இன்றும், இந்த அசம்பாவித சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் போதும், அதே விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்குத் தீர்வு ஆரோக்கியமான உரையாடல்களால் தான் உண்டாகும்.’

அருண் ஜெட்லி, ‘இந்த சம்பவத்தை சாக்காக வைத்து, போராட்டத்திற்கு ஒரு கருவை உருவாக்கி அரசியல் கட்சிகள் குளிர் காய்கின்றனர். இது அவர்களின்கொள்கையின் சகிப்புத் தன்மை இல்லாமையையேகாட்டுகின்றது. மேலும், காங்கிரஸ் மற்றும் இடது சாரிக் கட்சிகள் மக்களின் மதிப்பை இழந்து தவிக்கின்றன. அதைப் பெற சுலபமான வழி ஒரு பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் மோடி அரசுக்கு எதிராக ஒரு பேப்பர் போராட்டத்தை உண்டு பண்ண முயல்கிறார்கள்என்று கூறி உள்ளார்.

மோடி அமைச்சரவையில் உள்ள நிர்மலா சீதாராமன் வெகு அழகாக இது குறித்து தம் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசைக் குறை கூறும் இடங்களில், தயவு செய்து அதைச் செய்யுங்கள். ஆனால், ஒரு மாநிலப் பிரச்சனையைக் குறித்து - மோடியின் கருத்து என்ன? அவர் ஏன் மவுனம் சாதிக்கிறார்? என்று கேள்வி எழுப்பி அந்த பதிலைப் பற்றி, இந்த நாடு குட்டிச் சுவராகப் போய்க் கொண்டிருக்கிறதுஎன்று நீங்கள் புலம்ப வைப்பதால், பிரச்சனையின் தீவிரத்தைத் தவிர்ப்பதற்கு இது ஏதுவாகும். ஒரு ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழியில்லாமல் போய், பி.ஜே.பி.யை ஓரம் கட்டி, குற்றம் சுமத்தி, எங்கள் நிலையைச் சொல்ல முடியாமல் செய்து விடுகின்றனர். இதற்கு ஒரு உதாரணம் காட்டுகிறேன். கேரளாவில் ஒரு கேள்வித் தாளில் உள்ள ஒரு கேள்வி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பிடிக்காமல் இருந்த காரணத்தினால், அந்த கேள்வித் தாளைத் தயாரித்த பேராசிரியரின் கை துண்டிக்கப்பட்டது. இந்த தத்ரி சம்பவத்திற்கு நடந்த விவாதத்தைப் போல் அப்போது ஏன் நடக்க வில்லை? விவாதங்கள் எப்போதும் ஏன் ஒரு தலைப்பட்சமாகவும், ஒரு சில நபர்களாலும் சாசனம் செய்யப்படுகின்றன?

பலர் சாகித்திய அகாடமி பட்டங்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இதில் முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர்கள் போராடுகிறார்கள் தானே? அவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள் தானே? அவர்களை ஒடுக்க ஏதாவது மத்திய அரசாங்கம் செய்கிறதா? இல்லையே!

கால்பர்கி கர்நாடகாவில் கொலை செய்யப்பட்டார். அங்கு நடப்பது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. தாத்ரி உ.பி.யில் உள்ளது. அங்கு சமஜ்வாதக் கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது. இங்கெல்லாம் பி.ஜே.பி.யின் ஆட்சி இல்லை. ஆனால், போராடும் அனைவரும், மத்திய அரசைக் குறிவைத்தே போராடுவதான ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். அப்படி என்றால், சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்தில் உள்ளது என்பதை மறந்து, அவர்கள் மாநில அரசாங்கத்தின் பங்கினையே மறுக்கும் அளவில் போராடுகிறார்களா? அதனால், போராட்டம் முறையான அளவில் இருக்கும் அளவில் அறிவு ஜீவிகள் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

சீதாராமன் - ஜெட்லி - மோடி விளக்கங்களின் பிண்ணனியில் ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். காம்ரேட் ஜோதி பாசுவைத் தெரியாதவர்கள் அரசியலில் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் பிரதமந்திரியாக்க முயற்சிகள் நடந்ததும் பலருக்கும் தெரிந்திருக்கும். முன்னேற்றம் என்பது அவரது அகராதியில் தனி அர்த்தம் உண்டு. மின்சாரம் கிராமங்களுக்கு அளிக்க வேண்டும் என்றால், ‘மின்சாரத்தையா ஏழைகள் சாப்பிடப்போகிறார்கள்? அது அவசியமில்லைஎன்று ஒதிக்கியவர். ஆனால், ஜோதி பாசுதான் மதச் சார்பின்மைக் கொள்கையின் கடவுள் என்றால் மிகையாகாது. அவர் வாஜ்பாய் பிரதமராகத் தேர்வு செய்த செய்தி கேட்டவுடன், ‘நான் வாஜ்பாயை பிரதம மந்திரியாக ஏற்க மாட்டேன்என்று பகிரங்கமாக தம் கருத்தை வெளியிட்டார். அப்போது அவர் வங்காளத்தின் முதல் அமைச்சராக இருந்துள்ளார். ஆனால், அப்போது இது குறித்து மீடியாவோ - பத்திரிகையோ அவரை கேள்வியோ அல்லது இந்த அவரது கருத்து குறித்து விவாதமோ நடத்த வில்லை.

இது தான் மீடியா - பத்திரிகை தர்மமா? - என்று மக்கள் மன்றத்தில் கேள்வி எழும் நாளும் தூரத்தில் இல்லை.

இந்தக் கருத்துக்களை எல்லாம் விட ஒன்றை வாசகர்கள் கவனிக்க வேண்டும். இன்னும் பல அறிவுஜீவிகள் டெல்லி அரசாங்க பங்களாவில் அங்கீகாரம் இல்லாமல் தங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியும் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கின்றனர். ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள் சட்டத்தை மதிக்காமல் பங்களாவைக் காலி செய்து முன் உதாரணமாகத் திகழ்வதில்லை. தங்கள் பட்டங்களை ஒப்படைக்கும் இவர்கள் தங்களின் பதவி - பங்களா ஆகியவைகளையும் ஒப்படைத்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி டெல்லியில் வந்த பிறகு, வெங்கைய நாயுடு சட்டத்திற்குப் புறம்பாக தங்கி இருந்த பெரும் புள்ளிகள் பலரை அரசாங்க பங்களாக்களை காலி செய்ய வைத்துள்ளார். இது வரை 461 பங்களாக்கள் காலி செய்யப்பட்டுள்ளன. இதில் லல்லு, அம்பிகா சோனி, குமாரி செல்ஜா, கே.சி.தியாகி, முன்னால் பிரதமந்திரி சந்திரசேகரின் மகன்கள் மற்றும் அஜித் சிங்கின் மகன்கள் ஆகியவர்கள் அடங்கும். இந்த அவரது அதிரடிச் செயலால் வெங்கைய நாயுடுவை - எவிக்க்ஷன் மேன் - என்ற பட்டப்பெயரைப் பெற்றுள்ளார்.

மோடியின் அரசு வந்த பிறகு மீடியா - பத்திரிகை நிருபர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் - பதவிகள் - பணங்கள் எல்லாம் தடை பட்டு விட்டன. அறிவு ஜீவிகளின் அரசாங்கச் சலுகைகள் மறுபரிசீலனைச் செய்யப்படுகின்றன. இவைகள் எல்லாம் தான் மோடியின் அரசை எப்படியாவது கவிழ்த்து, தங்களுக்குச் சாதகமான கட்சிகள் - தலைவர்களை பதவியில் அமர்த்த துடிக்கின்றனர்.

ஆனால், மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இனி பத்திரிகையோ - மீடியாவோ எது சொன்னாலும், அதன் மூலத்தை அறிந்து, மக்கள் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்.

விடிவுகாலம் உண்மையாக உழைப்பவர்களுக்கு என்பது தெளிவானால், இந்தியா இங்கும் எங்கும் நிமிர்ந்து நிலைத்து நிர்க்கும்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017