பிராமணர்களைப் பற்றிய தவறான குற்றச் சாட்டுக்கள்

இந்தக் கட்டுரை முக நூலின் அடிப்படையில் தழுவி எழுதப்பட்டுள்ளது. இணைப்பு

பிராமணர்களைப் பற்றிய குற்றச் சாட்டுக்களின் பட்டியல்:
Ø  இந்தியாவின் கீழ் ஜாதியினர்களை பிராமணர்கள் அடிமைகளாக்கி அவர்களை வாழவிடாமல் தடுத்தனர்.
Ø  தீண்டாமை பிராமணர்களால் உண்டாக்கப்பட்டது.
Ø  ஜாதியை உருவாக்கியவர்கள் பிராமணர்கள்.
Ø  5000 வருடங்களாக பிராமணர்களால் இந்தியா ஒடுக்கப்பட்டுள்ளது.
Ø  சம்ஸ்கிருத பாஷையை மற்றவர்கள் படிக்க விடாமல் தடுத்தனர்.
Ø  ஹிந்து தர்ம சாஸ்திரப் புத்தகங்களை பிராமணர்கள் எழுதி, தங்களது ஆதிக்கத்தை சமூகத்தில் நிலை நாட்டினார்கள்.
இப்படி எத்தனையோ குற்றச் சாட்டுக்கள். பட்டியல் இன்னும் நீளும். இதில் என்ன ஆச்சரியம் என்றால், படித்த இப்போதைய பிராமணர்களும் இவைகளை 100% உண்மை என்று நம்பி, தங்கள் இணத்தவர்களையே இழிவானவர்களாகக் கருதி, தலைகுனிகிறார்கள். ஆனால், இது சரித்திரத்தின் சன்னிதானத்தில் பொய் என்று தெரிகின்றது. பொய் எப்படி மெய்யாக வேஷம் தரித்து உலகத்தில் நடமாடுகின்றது என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

முதன் முதலில் ஹிந்து மதத்தில் ஒரு பிரமணக் கடவுளும் இல்லை. அனைத்துக் கடவுள்களும் கீழ் ஜாதி - தலித் மற்றும் காட்டு வாசிகளாகத் தான் இருக்கிறார்கள். கடவுள் கொள்கையை பிராமணர்கள் உருவாக்கவில்லை.

இந்தியாவை எந்த ஒரு பிராமண ராஜாவும் ஆளவில்லை. மற்றவரை அடிமை கொள்ள, ஒருவர் பதவியில் இருக்க வேண்டும். ஆனால், பிராமணர்களின் தொழில் கோயில் பூசாரி, மதச் சடங்குகள் செய்யும் சாஸ்திரிகள். அவர்களின் சம்பாத்தியமே பெரிய நிலச்சுவாந்தார்கள் - அப்பிராமணர்கள் கொடுக்கும் தக்ஷணை தான். சில பிராமணர்கள் வேத பண்டிதர்கள் - அவர்கள் சம்பளம் வாங்காமல் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள்.

வேத இலக்கியங்கள் அநேகமாக அப்பிராமணர்களால் உருவாக்கப் பட்டதாகும். மிகவும் சக்தி வாய்ந்த தர்ம சாஸ்திரமான மனுஸ்ம்ருதியை எழுதிய மனு பிராமணர் இல்லை. பிராமணன் என்றால் அது தொழிலைக் குறிக்குமே அன்றி - ஜாதி இல்லை.

சம்ஸ்கிரதம் பிராமணர்களுக்கு மட்டும் என்றால், காட்டு வாசியாகத் திரிந்த வால்மிகி எப்படி சம்ஸ்கிரத பாஷையில் ராமாயணம் எழுதமுடியும்? வேத வியாசர் ஒரு மீன்பிடிக்கும் இனத்தின் பெண்ணின் வயிற்றில் பிறந்தவர். சம்ஸ்கிரத நூல்களில் பல புராசீனமான மூல நூல்கள் அனைத்தையும் எழுதியவர்கள் பிரமணர்கள் அல்லாதார். ஒரு சில நூல்கள் தான் பிராமணர்களால் எழுதப்பட்டதாகும்.

வேத வியாசர், வசிஷ்டர், வால்மீகி, கிருஷ்ணர், ராமர், அகஸ்தியர், விஸ்வாமித்திரர், புத்தர், மஹாவீர், துளசிதாசர், திருவள்ளுவர், கபீர், விவேகானந்தர், காந்தி, நாராயண குரு போன்றோர்கள் அனைவரும் பிராமணர்கள் இல்லை. மேலும், பல பக்தி நூல்கள் பிராமணர்கள் அல்லாதாரால் இயற்றப்பட்டுள்ளன.

பிராமணர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள் இல்லை. பதவியால் சக்திவாய்ந்தவர்கள் இல்லை என்பது சரித்திர உண்மை. பிராமணனின் இயல்பே ஏழ்மையாக இருப்பதே குணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமணர்களின் தொழில் மிகவும் உயர்ந்ததாகச் சமூகம் ஏற்றுக் கொண்டாலும், பிராமணர்கள் பிச்சை எடுத்துத் தான் வயிறு வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர்.

பிராமணர்கள் செய்த மிகப் பெரிய நன்மை சம்ஸ்கிரதத்தை வாய்மொழியாக காலம் காலமாகக் காப்பாற்றி வந்தது தான். ஆங்கிலத்தைக் கற்றால், பணம் சம்பாதிக்கலாம். ஆனால், சம்ஸ்கிருத்த்தை ஒருவரும் விரும்பிப் படிப்பதில்லை. ஏனென்றால், அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஆகையால், எந்தவிதமான ஆதாயமும் எதிர் பார்க்காமல், சம்ஸ்கிரதத்தை பிராமணர்கள் கற்று வந்துள்ளார்கள். உண்மை அப்படி இருக்கும் போது, பிராமணர்கள் தான் மற்றவர்களை சம்கிருதம் கற்க விடாமல் தடுத்து, சம்ஸ்கிரதத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர் என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்பது தெளிவு.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்இந்தியாவில் தீண்டாமை என்பது கி.பி.400 ஆண்டுகளுக்குப் பிறகு தான் உண்டானது. அதாவது மாட்டு மாமிசம் சாப்பிடுபவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்த போதுஎன்கிறார். முஸ்லீம் முற்றுகையின் போது, பல இந்துக்களை மதம் மாற்றி, அவர்களைக் கேவலப்படுத்தும் விதமாக மனித மலங்களைச் சுமக்கவும், பசு மாமிசத்தைச் சாப்பிடவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மதமாற்றமான வேறு சில இந்துக்கள் தோல் பதனிடும் வேலையில் அமர்த்தப்பட்டார்கள். இவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், மிகவும் கீழ்த்தரமான அழுக்கான வேலைகள் செய்யச் செய்து, இப்படியாக தலித் இனத்தவர்களை முஸ்லீம் அரசுகள் உருவாக்கி விட்டனர்.

முஸ்லீம்களின் ஆராஜகத்தின் காரணமாக கி.பி.500 வருடத்திற்குப் பிறகு தான் இந்தியாவில்சதிஎன்ற விதவைகள் உயிரோடு உடன் கட்டை ஏறும் பழக்கம் வந்தது. அடிமை வியாபாரம் என்பது இந்தியாவில் முஸ்லீம் படை எடுப்பினால் உருவான அவலம்.

பிராமணர்கள் ஒருபோதும் கலவரம் செய்தது கிடையாது. ஆனால், அவர்கள் ஆராபியர்களாலும், போர்ச்சுகீசியர்களாலும், பிரிட்டிஷ் மிஷினரிகளாலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவுரங்க சீப் 150,000 பிராமணர்களை அவர்கள் குடும்பத்துடன் கொன்றுள்ளான். அவுரங்க சீப் ஒவ்வொரு நாளும் அநேக பிராமணர்களைக் கொன்று அவர்களின் பூணூல்களை அவர்களின் ரத்தத்தால் முக்கிஎடுக்கும் காட்சியைப் பார்த்த பிறகு தான் தன் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிடுவானாம். மேலும், லட்சக்கணக்கான கொங்கிணி பிராமணர்கள் போர்சுகீசரால் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரத்தின் சராவட் பிராமணர்கள் கொடூரமாக்க் கொல்லப்பட்டுள்ளனர். மொஹமட் பின் காசிம் என்ற முதல் ஆராபி கொள்ளையன் இந்திய பிராமணர்களை முஸ்லீம்களைப் போல் சுன்னத் செய்யும் படி கட்டாயப்படுத்தி, அதை எதிர்த்தவர்களை 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். அதே போல் 19-ம் நூற்றாண்டில், திப்பு சுல்தானின் படைவீர்ர்கள் மேல்கோட்டையில் வாழும் 800 மாண்டயம் அய்யங்கார்களை தீபாவளி அன்று கொன்று குவித்தான். தர்மத்தையும், அஹிம்சையையும், சமாதானத்தையும் நம்பி வாழ்ந்த பிராமணர்கள் இத்தகைய கொடூரமான துன்பங்களை அனுபவித்தார்கள்.

இப்படித்தான் பிராமணத்துவேஷம் இந்தியாவை ஆக்கிரமித்த இப்படிப்பட்ட அன்னிய படையெடுப்பினால் விதை ஊன்றப்பட்டு, அதுவே அரசியல்வாதிகளால் மேலும் வளர்க்கப்பட்டது. இதை இடது சாரிக் கொள்கையை ஆதரிக்கும் வரலாற்று ஆசிரியர்கள் பாடங்களாக விவரித்தார்கள். பிராமணர்களைத் தாக்குவதில் மூலம் ஹிந்து மதத்தை தாக்க்குவது தான் அவர்கள் குறிக்கோள். ‘உலக மக்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டுகிறோம்என்று பிரார்த்திக்கும் பிராமணர்கள் தான் கொல்லப்பட்டார்கள்.

அப்படி என்றால், பிராமணர்கள் ஒருவரும் தவறே இழைக்க வில்லையா?’ என்றால், ‘சில பிராமணர்கள் தவறு இழைத்துள்ளனர். பேஷ்வா சிட்பவான் பிராமணர்கள், கேரளா நம்பூத்திரி பிராமணர்கள், பிஹார் பூமிகார் பிராமணர்கள், சக்தி வாய்ந்த அனங்கபால், ஜெய்பால், பாமினி போன்ற சிறிய சமஸ்தானாதிபதி பிராமணர்கள் தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனால், அது பிராமண சமூகத்தில் 1% கூட இருக்காது. ஆகையால், இதை வைத்து ஒட்டு மொத்த பிராமணர்களையும் குற்றம் சொல்வது தவறு.’

கடந்த பல நூற்றாண்டுகளாக, முஸ்லீம்களும் - கிருஸ்துவர்களும் தான் இந்தியாவை ஆண்டிருக்கிறார்கள். ஆகையால், ஜாதிகளில் இருக்கும் தீண்டாமை ஆகியவைகளுக்கு எப்படி பிராமணர்களைக் குற்றம் சொல்ல முடியும்? ஆண்ட முஸ்லீம்களும் - கிருஸ்துவர்களும் தானே இந்தியாவில் உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும்?

இந்தியாவில் ஜாதியை உண்டாக்கியதை இந்தியாவை ஆக்கிரமித்து அரசாண்ட அன்னியர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். பிராமணன் என்பது உயர்ந்த குணம் உள்ள அனைவரையும் குறிக்கும். ஜாதியை ஒழிக்க ஏழை பிராமணனை பலிகாடாக ஆக்குவது அதர்மம்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017